Monday, May 29, 2006
சட்டசபையில் பெண் சிங்கம் புகுந்தது !!!!
ஆங்கிலத்தில் GUT's ( கட்ஸ்) என்று சொல்லுகிறார்கள்...தமிழில் தில் ( 'தில்' தமிழா...குன்றத்திலிருப்பவரை தான் கேட்கவேண்டும்) என்று சொல்லுவார்கள்..
முன்னாள் முதல்வரை தான் சொல்லுகிறேன்...
தனது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையில், தன்னந்தனியாக எதிர்க்கட்சியை எதிர்கொண்டார்...
இந்த தைரியம் முதல்வர் கலைஞருக்கு வரவில்லையே...அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது..
ஜெயலலிதா சட்டசபையில் எடுத்து வைத்த வாதம்..
1. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் முயற்ச்சியில் இருக்கும் அரசு( கிட்டத்தட்ட 7000 கோடி) , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..( காரணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு)
2. ஏற்க்கனவே கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளின் பணத்தினை அரசு திருப்பி தருமா ? ( Reimbose)
3. சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனை மட்டும் அரசு திருப்பி செலுத்துமா, அல்லது அனைத்து விவசாயிகளின் கடனையும் திருப்பி செலுத்துமா ? ( இப்படி கேட்டதற்க்கு காரணம், 17 லட்சம் / 20 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளிம் இருக்கிறார்கள்..)
இவ்வாறு பேசுகையில் அவை முன்னவர் அன்பழகன் அடித்த நக்கல் என்ன தெரியுமா..
அவங்க மாமன் மச்சான் கிட்ட வாங்கின கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது..
அவையில் வெடிச்சிரிப்பு...
4. தரிசு நிலம் பற்றியது...அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 3 1/2 ஏக்கர் தான் உள்ளது..அதனை எப்படி ஒரு கோடியே எழுபது லட்சம் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கொடுப்பீர்கள் ( மொத்தம் 85 லட்சம் விவசாய கூலி தொழிலாளர்.. தலா இரண்டு ஏக்கர் ) ?
இதற்க்கு முதல்வர் கலைஞர் பதில் என்ன தெரியுமா ? அனைவருக்கு தரிசு நிலம் கொடுக்கப்படும்..அது அரசிடம் இருந்தாலும் / தனியாரிடம் இருந்தாலும்..
அவையில் பலமான கைத்தட்டல்...( அல்லது பெஞ்சு தட்டல்)
இதற்க்கு என்ன அர்த்தம் ? மொத்தம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது என்று கரடியாக கத்திய தி.மு.க ஹீரோ ( தேர்தல் அறிக்கைங்க) பொய் என்று முதல்வரே ஒத்துக்கொண்டுள்ளாரே ??
இதில் உண்மை என்ன என்றால் - ஒரு மண்ணும் பிரயோஜனமில்லாத நிலம் ( மண் கூட) தான் தரிசு நிலம்..நானும் தரிசு நிலத்தில் கால்வைத்து நடந்து உள்ளேன்...அதுல என்ன வெளையும்..கல்லும் மண்ணும் தான்...இதுக்கு இப்படி ஒரு சண்டையா..கிராமத்துல கேட்டுப்பாருங்க தெரியும்...அதுல முப்போகம் இல்ல..ஒரு போகம் கூட விளையாது...
சட்டசபையில் யாராவது பேசும்போது யார் குறுக்கிட வேண்டும் என்று மரபு உள்ளது...முதல்வர் குறுக்கிட்டு பேசலாம்...அல்லது அவை முன்னவர் பேசலாம்...இப்போது நடப்பது என்ன தெரியுமா...
மாயி படத்தில் ஒரு கேரக்டர், ஏ ஏ மாயண்ணன் வந்திருக்காக...மாப்புள மொக்கச்சாமி வந்திருக்காக என்பது போல..அமைச்சர் துரைமுருகன் அவர்கள்..ஏ ஏ ஏ என்று எதற்க்கெடுத்தாலும் குரல் விடுவது வேடிக்கையாக உள்ளது...
கடைசியாக ஒரு விஷயம்...சட்ட சபையில் சன் டி.வி க்கு மட்டுமே அனுமதி....ஜெயா டி.விக்கு கிடையாது...ம்ம்ம்...அவங்க ஆட்சியில நம்மை அனுமதிக்கல..நம்ம ஆட்சியில அவங்களை அனுமதிக்க கூடாது என்று சின்னபுள்ளத்தனமா ( நன்றி: வடிவேல்) இருக்காம பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும்....
அன்புடன்,
ரவி
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
74 comments:
ரவி..நீங்க அ.தி.மு.க தான?
செந்தழல் ரவி,
நல்ல பதிவு. எப்பக்கமும் சாயாது நடுநிலையுடன் சம கால தமிழக அரசியல் நிலமைகளை அலசியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
கூடுமானவரை நடுநிலையுடன் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன் சுமா அவர்களே..
நன்றி வெற்றி..
பெண் சிங்கம் பற்றிய விவாதம் ஒன்று இங்கே இருக்கிறது.....
http://www.tamilnadutalk.com/forum/index.php?s=fa1fcea4aae3013b4eefc4d27f4fce64&showtopic=592
அது ஏனோ நினைவுக்கு வருகிறது :-)
துரைமுருகன் அமைச்சர்.அவர் அப்படி பேச உரிமை உண்டு.
வருகைக்கு நன்றி கதிரவன்..அமைச்சர் என்றால் அவர் துறை சம்மந்தமாக பேசினால் தவறேதும் இல்லை...
போன ஆட்சியில் ஜெயா நக்கல் அடிக்கவில்லையா?
என்ன என்று சொல்லுங்கள்...
///மாயி படத்தில் ஒரு கேரக்டர், ஏ ஏ மாயண்ணன் வந்திருக்காக...மாப்புள மொக்கச்சாமி வந்திருக்காக என்பது போல..அமைச்சர் துரைமுருகன் அவர்கள்..ஏ ஏ ஏ என்று எதற்க்கெடுத்தாலும் குரல் விடுவது வேடிக்கையாக உள்ளது...///
ரசித்தேன்.
/*கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் முயற்ச்சியில் இருக்கும் அரசு( கிட்டத்தட்ட 7000 கோடி) , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..( காரணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு)*/
திமுக தன் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு கடன் ரத்து என்று மட்டுமே கூறியது அதை அம்மையார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..திசைத் திருப்புதல் வினோதம்
இப்படி நடுநிலைமையாகப் பதிவிடும் அந்தோணிசாமி அய்யர் என்ற பார்ப்பனச் சூழ்ச்சியாளரைக் கடுமையாக எச்சரிக்கிறேன். இது பத்தாயிரம் வருட சத்திரிய சதி. மேலும் தமிழ்நாட்டில் இந்த சதிக்கூட்டணிக்கு வாக்களித்து தொடர்ந்து ஆதரவு தந்துவரும் ஒரு கோடியே முப்பத்துமூன்று இலட்சம் ஆரிய கோடரிக்காம்புகளை அடுத்த பொங்கல் வருவதற்குள் எரித்திடுவோம். :-)
- ஐயோ
இது காமெடி..
இனிமே ஜோசப் பாய், ஜான் அய்யர் என்றும் விளிப்பாரோ ???
நானும் இந்தச் செய்தியைப் படித்தேன்.
ஜெயலலிதா செய்தது சரியே. அவரும் கருணாநிதியைப் போல சட்டசபைக்குப் போகாமல் இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனாலும் இது நல்ல தொடக்கம். போகட்டும். பேசட்டும்.
அவருடைய சில கேள்விகளுக்கு அரசு முறையான பதில் அளிக்கவில்லை என்றே கருதுகிறேன். குறிப்பாக இரண்டு இடங்களில்...
1. இதுவரை கடனை ஒழுங்காகக் கட்டியவன் இழிச்சவாயனா? அப்படியானால் இனிமேல் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கினால் திரும்பக் கட்டத் தேவையில்லை என்ற நிலைதான் வரும்.
2. அரசு நிலத்தைக் கொடுப்பது சரி....தனியார் நிலத்தை யார் யாருக்குக் கொடுப்பது? ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்பது போலப் பேசக் கூடாது.
/// ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே //
ராகவன்...கலக்கிட்டீங்க...இதே தலைப்பிட்டு தனிப்பதிவு இடலாம் என்று இருந்தேன்..
/*இதற்க்கு முதல்வர் கலைஞர் பதில் என்ன தெரியுமா ? அனைவருக்கு தரிசு நிலம் கொடுக்கப்படும்..அது அரசிடம் இருந்தாலும் / தனியாரிடம் இருந்தாலும்..
அவையில் பலமான கைத்தட்டல்...( அல்லது பெஞ்சு தட்டல்)*/
அதிமுக நிதி நிலை அறிக்கையில் மொத்தம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது (2001-2002)...ஆனால் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் பேசும் போது 3.5 லட்சம் ஏக்கர் மட்டுமே அரசிடமிருக்கிறது மற்றவை 46.5 ஏக்கர் நிலங்கள் தனியார்வசமும் இருக்கிறது என்கிறார்.தனியாரிடம் பண்ணையமைக்க தந்தது இவர்தான்...இதைத்தான் கலைஞர் அனைவருக்கு தரிசு நிலம் கொடுக்கப்படும்..அது அரசிடம் இருந்தாலும் / தனியாரிடம் இருந்தாலும்..என்றார் முழுசாய் போடுங்கள் ரவி அப்போதுதான் உண்மை எல்லோருக்கும் தெரியும்
/*2. அரசு நிலத்தைக் கொடுப்பது சரி....தனியார் நிலத்தை யார் யாருக்குக் கொடுப்பது? ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்பது போலப் பேசக் கூடாது. */
என் மேல் பின்னூட்டத்தை பார்க்கவும் ராகவன்
ஜெ ஒரு MLA. சட்டசபைக்கு ஒரு MLA சென்றார். இதில் என்ன சாதனை?.
அவர் தன் கடமை ஆற்ற சட்டசபைக்கு சென்றது போல் தெரியவில்லை. அங்கு நடந்து கொண்ட செயலை பார்த்தால் இன்னமும் தானே ஆட்சியில் இருப்பதாக நினைத்திருக்கிறார். சபாநாயகரும், மற்றவரும் அவருக்கு அதை நினைவு படித்தினால், குறுக்கிடுகிறார்கள் என புகார்.
If she is really interested in the proceedings, she should have stayed back & attended the whole session. She wants to score some mileage in the polical arena. Thats it.
Note: I do not agree on Karunanidhi's non-participation in the assembly when he was in the opposition :)
அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசலாம்...அதிமுக ஆட்சியில் எல்லா கேல்விக்கும் அம்மாவே குறுக்கிட்டு பேசியதால் அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசக்கூடாது என்பது போன்ற எண்ணம் உருவாகியிருக்கலாம்...
போகப் போகத் தெரியும் சிங்கம் சட்டசபையில் கர்சிக்குமா இல்லை சிக்குமா என்று....
எது எப்படியோ மாண்புமிகு எதிர்கட்சித் தலைவி தைரியலட்சுமி என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
அம்மா இப்போ எதிர்க்கட்சித் தலைவி அப்படின்னா பன்னீர் அண்ணே ஓரம் கட்டப் படுகிறாரா?
அன்னிக்கு நடந்த சட்டசபை என்ட்ரண்ஸ் தேர்வில்ல ஓ.பி. காபி ''அடிக்கல்லயா?''... பெயிலா.. அய்யோ பாவம்.
/*சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனை மட்டும் அரசு திருப்பி செலுத்துமா, அல்லது அனைத்து விவசாயிகளின் கடனையும் திருப்பி செலுத்துமா ? ( இப்படி கேட்டதற்க்கு காரணம், 17 லட்சம் / 20 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளிம் இருக்கிறார்கள்..)
இவ்வாறு பேசுகையில் அவை முன்னவர் அன்பழகன் அடித்த நக்கல் என்ன தெரியுமா..
அவங்க மாமன் மச்சான் கிட்ட வாங்கின கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது..*/
இதுவும் தவறான கருத்து ரவி
/*தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..*/ இந்த கேள்விக்குதான் அவர் அப்படி பதில் அளித்தார்...அதுவும் கூட்டுறவு கடன்கள் மட்டும் ரத்து செய்யப்படும் என்று அவர் சொன்னப் பின் அவங்க மாமன் மச்சான் கிட்ட வாங்கின கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது.. என்று சொன்னார்...
லக்கி லுக் உங்களின் கருத்து வாசித்தேன் :)
எல்லாம் சரி ப்ரியன்..கேள்விக்கு என்ன பதில் ?
எந்த கேள்விக்கு ரவி உங்களின் தில் இருந்தால் அதற்க்கு பதில் சொல்லுங்கள்.. இதற்கா?
இல்லை ப்ரியன்..ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு...மொத்தம் 4 பாயின்ட் இருக்கே...
/*தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..*/ இதற்கு பதில் அவரே சொல்லிவிட்டாரே...அவங்க மாமன் மச்சான் கிட்ட வாங்கின கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது..
திமுக சொன்னது கூட்டுறவு கடன்கள் மட்டுமே எல்லா கடன்களும் அல்ல
தரிசு நிலம்:அரசின் நிலம் தனியாரிடம் மொத்த குத்தகைக்கு இருக்கு அது திரும்ப பெறப்படும்...
/*சட்ட சபையில் சன் டி.வி க்கு மட்டுமே அனுமதி....ஜெயா டி.விக்கு கிடையாது...
தவறான கருத்து..வேண்டுமானால் ஜெயா டிவிக்கு அனுமதி இல்லாமல் இருக்கலாம் மற்ற பத்திரிக்கை மற்றும் பொதிகை (DD1) க்கு அனுமது உண்டு...பொதிகை பதித்த வீடியோக்களையே மற்ற எல்லா ஊடகங்களும் பயன்படுத்தின.
/*சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனை மட்டும் அரசு திருப்பி செலுத்துமா, அல்லது அனைத்து விவசாயிகளின் கடனையும் திருப்பி செலுத்துமா ? ( இப்படி கேட்டதற்க்கு காரணம், 17 லட்சம் / 20 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளிம் இருக்கிறார்கள்..)*/
இதற்கும் பதில் சொன்னார்கள் ரவி அதிமுக ஆட்சியில் யார் யார்க்கெல்லாம் கடன் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டதோ அவர்களுக்கு எல்லாம்
/*ஏற்க்கனவே கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளின் பணத்தினை அரசு திருப்பி தருமா ? ( Reimbose) */
இதைப் பற்றி தெளிவாக எந்த செய்தியும் இல்லை...
ரவி எதற்கு என்னிடம் இந்த கேள்விகளுக்கு எல்லாம் விளக்கம் கேட்கிறீர்கள் என எனக்குச் சுத்தமாய் புரியவில்லை..நான் அதிமுக எதிர்ப்பாளனோ திமுக ஆதரவாளனனோ அல்ல...ஏதோ ப்ரியன் திமுகவின் கொபச மாதிரி அல்லவா என் பதிவில் வந்து பின்னூட்டமிட்டு இருக்கிறிர்கள் தவறு,தப்பு யாரு செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியவர்கள் அப்படித்தான் சட்டசபையில் அதிமுக செய்தது தப்பாக எனக்குத் தோன்றியது பதித்தேன்.அது தவறா?
ஒன்று உண்மை ரவி அதிமுகவை விட திமுக சட்டசபையில் ஜனநாயகம் காக்கிறது.தனியாக சென்ற ஜெ பத்திரமாய் வந்தார்.அதுப் போல கலைஞர் தனியாக சென்றிருந்தால் திரும்பி இருப்பாரா என்பது சந்தேகமே!!!
/*சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனை மட்டும் அரசு திருப்பி செலுத்துமா, அல்லது அனைத்து விவசாயிகளின் கடனையும் திருப்பி செலுத்துமா ? ( இப்படி கேட்டதற்க்கு காரணம், 17 லட்சம் / 20 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளிம் இருக்கிறார்கள்..)*/
இதற்கும் பதில் சொன்னார்கள் ரவி அதிமுக ஆட்சியில் யார் யார்க்கெல்லாம் கடன் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டதோ அவர்களுக்கு எல்லாம்
சிங்கம் தனியாகத்தான் வேட்டைக்குப் போகும். குள்ளநரிகள் தான் கூட்டமாகப் போகும் என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.
//ரவி..நீங்க அ.தி.மு.க தான?//
சுமா நீங்க தி.மு.க தானே
//ஜெயா வந்து பொனதை போல மு.க வந்து சென்று இருக்க முடியது ஜெயா ஆட்சியில் இருந்து இருந்தால்//
ஆமாம் உதவிக்கு மத்திய மந்திரி ராஜாவையும்,தயாநிதியையும் சட்டசபைக்கு கொண்டு வர ஜெயா அனுமதித்திருக்க மாட்டார்.
/*திமுக ஆட்சியில் எல்லா ஜெயா கேல்விக்கும் முதல்வரே பதில் அளித்திருக்கலாமே.ஒரு வேளை ஜெயா கேள்விக்கு பதில் சொல்ல தெரியல்லையோ. */
இது என்ன கேள்வி செல்வன் எல்லா கேள்விக்கும் முதல்வரே பதில் சொன்னால் அந்தந்த துறை அமைச்சர்கள் எதற்கு???
*ஆமாம் ரவி என்னுடைய சில பின்னூட்டங்கள் வெளியிடாமைக்கு காரணம் என்னவோ? - நான் திமுக வின் கொபசெ அல்லவே அப்புறம் ஏன் என்னிடம் இந்த கேள்விகள்* என்பது போன்ற பின்னூட்டங்கள்
////அனைத்த்து விவசயிகள் கடனையும் ரத்து செய்வதாக தேர்தல் வாக்குருதியில் சொன்னார்கள். ////
உங்கள் கனவிலா?
திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயக் கூட்டறவு கடன் என்று தெளிவாக இருக்கிறது....
//இதற்க்கு என்ன அர்த்தம் ? மொத்தம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது என்று கரடியாக கத்திய தி.மு.க ஹீரோ ( தேர்தல் அறிக்கைங்க) பொய் என்று முதல்வரே ஒத்துக்கொண்டுள்ளாரே ??//
இல்லை அவர் முன்னறே குறிப்பிட்டது போல் அரசு வெளியிட்ட அறிக்கை அதுதான். இதுகுறித்து தேர்தலுக்கு முன் அந்திமழையில் எழுதிய பதிவு இங்கே கிடைக்கும்
http://www.andhimazhai.com/blogs/viewmoreblogs.php?id=3578
செல்வன் & ரவி
முடிந்தால்
திமுக தேர்தல் அறிக்கை பிடிஎப் கோப்பில் பக்கம் 30 ஐ படிக்கவும் :)
இலக்கியவாதியான கருணாநிதிக்கு பிடித்தது அணி எந்த அணி தெரியுமா?
"இல்பொருள் உவமையணி"
இல்லாத நிலங்களைக் காட்டி அதை உங்களுக்கு கொடுப்போம் என்று மக்களை நம்ப வைத்துள்ளாரே!
இது போன்ற அவரின் திட்டங்களும், தேர்தல் அறிக்கைகளும், அடுத்த தேர்தலுக்கு எதிர்கட்சிகளுக்கு
"எடுத்துக்காட்டு உவமையணி"யாகப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறு/சிறு விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து செய்யப்படும் என தெளிவாகக் கூறியப் பின்னரும்
அம்மா "கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் முயற்ச்சியில் இருக்கும் அரசு( கிட்டத்தட்ட 7000 கோடி) , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..( காரணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு)"
கிளிப்பிள்ளைப் போல் புரிந்துக் கொள்ளமல் திரும்ப திரும்ப கேட்டால் இல்லை எனச் சொல்லாமல் "மாமன் மச்சான் கிட்ட வாங்கின கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது" என்றுதான் மறைமுகமாக பதில் அளிக்க முடியும்.வேறு எப்படி பதில் எதிர்ப்பார்க்கிறீர்.
முன்னாள் முதல்வர்; அவைக்கு எதிர்க்கட்சித் தலைவராக வருவது வரவேற்கத்தக்கது. அவர் நாயமான கேள்விகளுக்குப் சரியான பதில் கூறவேண்டியது. ஆளும் தரப்பினர் கடன். பழிக்குப் பழி என்பது; கண்ணியம் என்று மார்தட்டுபவர்களுக்கு அழகல்ல! எதிர் கட்சித் தலைவரும் பழசுகளை உணர்ந்து. ரகளைகளுக்கு இடந்தராமல்; அவையை நடத்த தன் திறமை;அனுபவம்;புத்திக்கூர்மையை பாவித்துப் பேர் எடுப்பார் என நம்புவோம்.
யோகன் -பாரிஸ்
ப்ரியன்...எனக்கு தெரிந்து எங்கள் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தான் பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர்..
கூட்டுறவு வங்கியில் 50 / 60 ஏக்கர் வைத்துள்ள பெரிய விவசாயிகள் ட்ராக்டர் வாங்க / மேற்கொண்டு நிலம் வாங்க 13 லட்சம் / 15 லட்சம் என்று பெற்றுள்ளனர்..
ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றும் ஒரு கண்ணில் சுன்ணாம்பும் வைப்பது ஏன்...
இனி விவசாயக்கடன் வாங்குவோர் அதிகரிப்பர். ஆனால் யாரும் திருப்பித்தரமாட்டார்கள். ஏற்கனவே திருப்பி செலுத்தியவர்கள் பாவம் முட்டாள்கலாகி விட்டனர்.
திருப்பி செலுத்தாதவர்கள், செலுத்தியவர்களை பார்த்து சிரிக்கப்போகும்
ஏளனச்சிரிப்பு!,
தாங்கள் புத்திசாலிகள் என்று
நிருபிக்க நினைக்கும் அவர்களின்
கொக்கரிப்பு!
கடன் வாங்கியே நாட்டு மக்கள் பணக்காரர்கள் ஆகலாம். கடன் கொடுத்தே நாடு கடனாலியாகலாம்.
உலகவங்கி வைக்கப்போகுது ஆப்பு!, ஆனாலும் நம் அரசியல் வாதிகள் கைகளுக்கு போகாது காப்பு!
/*ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றும் ஒரு கண்ணில் சுன்ணாம்பும் வைப்பது ஏன்... */
உண்மை ரவி ஆனால் எனக்குத் தெரிந்து சிறு / குறு விவசாயிகள் கடன் வாங்குவது "சொசைட்டி" என அவர்கள் அழைக்கும் கூட்டுறவு வங்கிகளில்தான்...தேசிய வங்கி தொடர்ப்பான கேள்விகளை தேர்தல் நேரத்திலேயே எழுப்பி இருக்கலாம்...அதைவிட்டு திமுக கூட்டுறவு கடன் ரத்து எனச் சொல்லி ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்து கையெழுத்தும் இட்டப் பின் ஏன் தேசிய வங்கியில் வாங்கியவர்களுக்கு இல்லை எனக் கேட்பது சிறுபிள்ளைத்தனம்+எங்கே பெயர் வந்துவிடுமோ என்ற எண்ணமும்
இது பற்றி என் பதிவுகளைப் பார்க்கவும்.
http://balablooms.blogspot.com/2006/05/blog-post_22.html
http://balablooms.blogspot.com/2006/05/blog-post_27.html
தமிழக மக்களுக்கு முன்னறிவுப்பு: தரிசு நிலம் போல் தான் TV யும். சரியாக வேலை செய்யாத TV எல்லாம் வாங்கி சரி செய்து இலவச TV திட்டமும் நிறவேற்றப்படும்....
:)
பாலாவின் பதிவு அருமை...
டென்ஷன் வேண்டாம் ஜோ...புதியதாக ஒரு பதிவு ஆரம்பித்து உள்ளேன்...தமிழர்களை குளுமைப்படுத்த...நமீதா படம் போட்டுள்ளேன்..
http://imsai.blogspot.com
அங்கு உடனடியாக சென்று கோபத்தினை (சூட்டை) தனித்துக்கொள்ளவும்..
திட்டுவதினையும் பிரசுரம் செய்வது தான் நடுநிலையாக்கும்..
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..
நாய் குறைக்கும்,
நரி ஊளையிடும்,
பன்றி உருமும்,
கழுதை கத்தும்.
நன்றி
சரியாக வேலை செய்யாத TV எல்லாம் வாங்கி சரி செய்து இலவச TV திட்டமும் நிறவேற்றப்படும்....
LOL :))
ஜோ,
அம்மா அவர்கள் கேட்ட கேள்விகலுக்கு நீங்களாவது பதில் சொல்லிப் பாருங்கள். அதை விட்டுவிட்டு..
நன்பர் கூறியபடி ஜோ பின்னூட்டம் நீக்கப்பட்டது...மன்னிக்கவும் ஜோ..
//செயாப்பிரியன் said...
நாய் குறைக்கும்,
நரி ஊளையிடும்,
பன்றி உருமும்,
கழுதை கத்தும்.
நன்றி//
செயா என்ன செய்வார்
சொல்லலையே
ரவி, சட்டசபைக்காக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒருவர் சட்டசபைக்கு செல்வதில் அப்படி என்ன ஆச்சரியம் (அ) புதிய நிகழ்வு அதுவும் சிங்கம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது என்று புரியவில்லை. விழா எடுப்பீர்கள் போலிருக்கிறதே..?! இது ஒரு மிகசாதாரண நிகழ்வு..
செந்தழலாரே இந்தப் பதிவு செஞ்சுரி அடிக்கும் போலிருக்கிறதே! வாழ்த்துக்கள் நண்பரே!
- நடுநாட்டான்
ஹி ஹி...நம்மை அடிக்க யாரும் வரமாட்டாங்கன்னு நினைக்கிரேன்..
//இவருடைய தான் தோன்றி தனத்தை ஆணவத்தை தைரியம் என புகழும் ரவி போன்றவர்கள் நுனிப்புல் மேயும் அறிவு ஜீவிகள்//
ஜோ நீங்கள் தான் அடிப்புல் மேயும் அறிவிஜீவியா?
//இது ஒரு மிகசாதாரண நிகழ்வு..//
நான் அப்படி நினைக்கலியே...
ஏதோ ஆகிப்போச்சு உங்களுக்கு ஜெ..
என்ன ரவி, நீங்கலும் குழம்பிட்டீங்களா? இது வழக்கம்போல நம்ம மலேசியா போலியனோட திருவிளையாடல்தான்.
அட என்ன கூத்து இது?
ஒரு எம் எல் ஏ சட்டசபை போறது அவ்ளோ பெரிய விஷயமா??
விசயகாந்த் கூட தே மு தி க சார்பா தனியா போனாரு..
ஒரு விஷயம்.. போன வாரம் இந்த அம்மா சொன்னது என்ன? காட்டுமிராண்டிங்க இருக்க அந்த சபைக்கு நிச்சயம் நான் போக மாட்டேன்..
இப்போ சபைக்கு போயிருக்காங்க.. அப்போ என்ன அர்த்தம்.. காட்டுமிராண்டிங்க எல்லோரும் வெளியே போயிட்டாங்க..
"அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு நீக்கம்... அவர்கள் சபையில் இல்லை... " அம்மா தைரியமா போயிருக்காங்க... கூட்டி கழிச்சு பாருங்க...
வீ. எம்
என்னப்பா இங்க வந்து அடிச்சிக்கறீங்க.....
போலிக்கு அரசியலுக்கும் தொடுப்பு இல்லைங்க...
ஒரு நன்பர் (தி.மு.க அனுதாபி) தான் இதனை செய்கிறார்...
டேய் ரவி, மொதல்ல போலிக்கு ஆதரவா பேசறத நிறுத்திக்க...
//அவங்க ஆட்சியில நம்மை அனுமதிக்கல..நம்ம ஆட்சியில அவங்களை அனுமதிக்க கூடாது என்று சின்னபுள்ளத்தனமா ( நன்றி: வடிவேல்) இருக்காம பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும்....
//
பெருந்தன்மையா? அட போங்க! அத பார்த்தே ரொம்ப நாளாச்சு.
இங்கே ராசுக்குட்டி என்ற பெயரில் பின்னூட்டம் இட்டு இருப்பது ஒரிஜினல் டோண்டு. அந்த ஆளின் தரத்தை வலைப்பதிவாளர் எல்லோரும் உணரவேண்டும்.
ஒருவேளை போலி போலி டோண்டுவா இருக்குமா ?
ராசுக்குட்டி மேல் கிளிக் செய்துப் பாருங்கள் புரியும். இப்போதெல்லாம் ஒரிஜினல்கள் அவர்களே தங்கள் பெயரில் போலிகளை உருவாக்கி அல்ப விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். தமிழ்மணத்தை பிடித்த சாபக்கேடு இந்த கலாச்சாரம். பேசாமல் நீங்களும் ஒரு போலி முகவரி ஏற்படுத்தி விட்டு கூப்பாடு போடுங்கள். நிறைய பேரின் அனுதாபம் கிடைக்கும்.
என் பின்னூட்டத்தை எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் வெளியிட்டு ரவிக்கு நன்றி. இதுபோல எதிர்மறை பின்னூட்டங்களும் சில நேரங்களில் உண்மையை தெளிவாக்குகிறது அல்லவா?
பின்னூட்டம் தனிநபரை சாடவில்லை என்றால் கண்டிப்பாக வெளியிடுவதை தவிர வேறு வழியில்லை நன்பரே...உங்க பெயர் சொல்லலாமே..
Post a Comment