Friday, January 16, 2009

டாக்டர் காப்பாத்துங்க...

ஒரு குளிர் நாட்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்தியாவில் இருந்து பணியாற்றுவதில் மூன்று அசவுகரியங்கள் இருக்கின்றன...

1.குளிர்..
2.அதிக குளிர்ர்ர்..
3.ரொம்ப ரொம்ப குளிர்ர்ர்ர்..

உர்ரென்று ஆகாதீர்கள்...




2003 ல் முதல் முறையாக கோவை சென்றபோது எடுத்த படம்...அப்போ எனக்கு மீசை என்று ஒன்று இருந்தது...

இது ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லாம போன கதை...

ரெண்டு நாளா ஒரே சளி இருமல்...சரி இன்னும் ரெண்டு நாள்ல சரியா போயிடும்னு நெனைச்சா...நோ...போய்த்தொலையவே இல்லை...இதுவே இந்தியாவா இருந்தா ரெண்டு மூனு நாள்ல சரியாகிடும்...அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா...இங்கேயும் சரியா போயிரும்னு நினைச்சு உட்கார்ந்திருந்தது எவ்ளோ வேஸ்ட்..(பழமொழிக்கெல்லாம் விளக்கம் கேட்டுறாதீங்க)...

முக்கு சிந்தி சிந்தி ஸ்வெட்டரையே வாஷிங் மெஷின் ட்ரையர்ல போட்டு காயவைக்க வேண்டியதாயிருச்சு...

இங்கே எல்லாம் டாக்டரை அப்படியே நேரா போயி பாக்க முடியாதாமே ? அப்பாயிண்மெண்டு வாங்கிக்கிட்டு தான் போகோனுமாம்...

இதுக்கும் மேல பொறுக்க முடியாது..டாக்டருக்கு போனைப்போட வேண்டியது தான்...அப்பாயிண்மெண்ட் கேட்டுற வேண்டியது தான்..

டாக்டர் குட் மார்னிங்...

டெல்மீ சன்...என்ன பிரச்சினை ?

டாக்டர் ரன்னிங் நோஸ்...சளி....

வேற என்ன பிரச்சினை ?

ஒரே இருமல் இருமலா வருது டாக்டர்..

அடப்பாவமே...சரி வேற என்ன இருக்கு ? சுரம் ?

சுரம் எல்லாம் இல்லை டாக்டர்...

வேற எதுவும் இல்லையா ?

எங்காத்தா முப்பாத்தா சத்தியமா இல்லை டாக்டர்...சளி இருமல் மட்டும்தான்...

ஓ அப்படியா...

டாக்டர் ? எப்ப வந்து உங்களை பார்க்கலாம் ? அப்பாயிண்மென்ட் வேணும்....

தம்பி நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா ?

சொல்லுங்க டாக்டர்...

இந்த சளி இருமல் எனக்கும் இருக்கு...

லொக் லொக் லொக்...

உனக்கு மட்டும் இல்ல...சுவீடன்ல நூத்துக்கு தொன்னூறு பேருக்கு இருக்கு...

நீ என்ன செய்யுற, வீட்டுலே உக்காந்து இருக்காம, ஸ்வெட்டர் எதாவது மாட்டிக்கிட்டு அப்படியே வெளிய போய் நல்ல காத்து வாங்கு...தன்னால சரியா போயிரும்...

லொக் லொக் லொக்...

வேற எதாவது பெரிசா...இதயம் அடைச்சுருச்சு, கல்லீரல் காணாமே போயிருச்சு, மண்ணீரல் மண்டைய போட்டிருச்சு, நுரையீரல் உறைஞ்சு போச்சு, இந்த மாதிரி இருந்தா மட்டும் போன் பண்ணு...

ஓக்கே ? லொக் லொக்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...போனை வைத்துவிட்டார்...

உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...வெளியே மைனஸ் 2 டிகிரி...நான் வெளியே போறேன்...

16 comments:

அர டிக்கெட்டு ! said...

அங்கேல்லாம் ஓமியோபதி ஃபேமஸாச்சே போய் ஒரு ரவுன்டு பாத்திட்டு வாங்க...

அர டிக்கெட்டு ! said...

ஜூரத்த கூட பதிவாக்குற தெறம சிலபேருக்குதான் வரும்...
ஹூம்..!!!

sathiri said...

அட வெறும் மைனஸ் 2 தானா இங்கு -7 எனக்கும் லொக்கு லொக்குதான். சீறி சீறியபடி(பாம்புமாதிரி) வேலைக்கு போயிட்டுத்தான் வந்தம்.

பிருந்தன் said...

என்ன அண்ணாத்த இதுக்கே சளிச்சுகிறா, நான்18 வருசமா சளியோட இருக்கேன் நான் சளிச்சுகிறேனா? எதையும் சளிச்சுகிட்டு சாரி சமாளிச்சுகிட்டு போகனும்.

சும்மாவா சொன்னாங்க சளிக்கு வைத்தியம் பாத்தா 7நாளில் சுகம் வரும் பாக்காட்டி ஒரு வாரம் இருக்கும் என்று,

இண்றைய பஞ்ச்
"சளியும் பழகிப்போம்"

சுகம் பெற கூட்டு பிரர்தனை செய்யுங்க.

அரவிந்தன் said...

கைவைத்தியம் எதாவது செய்துகொள்ளகூடாதா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

அனானிகன் said...

-34 C here in Ottawa Canada. -2 is Summer Buddy.

அர டிக்கெட்டு ! said...

-34 C here in Ottawa Canada. -2 is Summer Buddy.

ஆத்தாடி!!!!!
ஹேய்ய்ய் தந்தந்தந்தந்தந்நா
சொர்கமே என்றாலும்....!!!

ரவி said...

வாங்க அரைடிக்கெட்டு...ஓமியோபதியா ?

தெரியலையே ?

ஆனா யோகா கலையை கூவி கூவி விக்குறானுங்க

ரவி said...

சீறிவோம் சிலிப்போம்...ஆனால் விட்டுவிடுடமாட்டோம்..

ரவி said...

பிருந்தன்,

சலிச்சுக்கறதைக்கூட சளியோட சொல்லிட்டீங்க

ரவி said...

கைவைத்தியம் செய்தேன்..

துண்டை வைத்து சளியை சிந்தினேன்...

சிந்திக்கவேயில்லை/.

சின்னப் பையன் said...

வில்லு பாத்தா சளி இருந்த இடம் தெரியாமே போயிடும்றாங்களே????? ட்ரை பண்ணீங்களா???

ரவி said...

மைனஸ்ல இருந்தா அது பேரு சம்மராங்ணா ?

குடுகுடுப்பை said...

Blogger ச்சின்னப் பையன் said...

வில்லு பாத்தா சளி இருந்த இடம் தெரியாமே போயிடும்றாங்களே????? ட்ரை பண்ணீங்களா???//

சளி மட்டும் இல்லை நிறைய பிரச்சினைகள் தீரும்.

கபீஷ் said...

தாமதமான பொங்கல், ம்பா பொங்கல், சிறுவீட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

ரவி said...

சம்பந்தி

நல்லவேளை பொங்கல் சூடு ஆறும் முன் வாழ்த்து சொல்லிட்டீங்க...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....