வீட்டு வாடகைகளை தமிழக அரசு கட்டுப்படுத்துமா ?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரிந்த அளவில்:
1. ஓனர்கள் கேட்கும் அதிகப்படியான அட்வான்ஸ்
2. தகவல் தொழில்நுட்பத்துறையினரை மையமாக வைத்து கேட்கும் அதிகப்படியான வாடகை
3. ஒரு வருடம் வாடகைக்கு இருந்துவிட்டோம் என்றால், எங்க மாமா குடிவருகிறார், மச்சினிச்சி கல்யாணம் ஆகி குடிவருகிறான் என்று உடான்ஸ் விட்டு, வேறு ஒரு குடும்பத்தை அதிக வாடகைக்கு அமரவைப்பது
4. ஹவுஸ் ஓனர் என்றால் அமெரிக்க அதிபர் ரேஞ்சுக்கு கண்டிஷன் போடுவது...இருந்தால் இரு, இல்லைன்னா போ என்பது போல எடுத்தெறிந்து பேசுவது
5. வாடகைக்கு விட்டுவிட்டு, குழாய் ரிப்பேரில் இருந்து எலக்ட்ரிசிட்டி ப்ராப்ளம் எதுவானாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது...
6. வீட்டை காலிசெய்யும்போது, பெயிண்ட் செலவு என்று ஒரு ஐந்தாயிரம் / பத்தாயிரம் பணத்தை அட்வான்ஸில் இருந்து பிடித்தம் செய்துகொள்வது..
7. வீட்டுக்கு ரெண்டு விருந்தாளிகள் வந்தால் ரெட் ஐ வைத்து பார்த்து, தண்ணீர் செலவாகிறது, வெண்ணீர் செலவாகிறது என்று லொள்ளு பேசுவது.
மேலும் பல பிரச்சினைகள் பதிவுலக நன்பர்கள் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்...
பல்வேறு தொழில்களை கட்டுப்படுத்தும் / முறைப்படுத்து அரசு, இந்த ஹவுஸ் ஓனர்களையும் ஒரு குட்டு வைத்து கட்டுப்படுத்தினால் என்ன ?
வீட்டு வாடகைகள் வானளாவ உயர்ந்ததற்கு தகவல் தொழில்நுட்பத்துறையினரும் ஒரு காரணம், அதற்கான இந்த துறையில் இருக்கும் நான் வேதனைப்படுகிறேன்...
தி.நகர் ஏரியாவில் இருக்கும் அரசு ஊழியர் தி.நகர் பகுதியில் வாழவே முடியாத அளவுக்கு வாடகைகள் உள்ளன, அவர் செங்கல்பட்டு போன்ற ஏரியாவிலிருந்து இரண்டு மணிநேரம் பயணம் செய்து வரவேண்டியுள்ளது, அவர்கள் சந்திக்கும் தொல்லைகள் சொல்லி மாளாது, குறிப்பாக பெண் ஊழியர்கள், அரசு / மற்றும் தனியார் துறையில் (தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாத) உள்ளவர்கள்...!!!
அடையாறு ஏரியாவா, வீட்டு வாடகை ஆறு ஆயிரத்தை தாண்டக்கூடாது, அட்வான்ஸ் இருபதாயிரத்தை தாண்டக்கூடாது...அம்பத்தூர் ஏரியாவுக்கு இவ்வளவு தான் வாடகை...
அதிகப்படியாக கேட்கும் ஹவுஸ் ஓனர் மீது கிரிமினல் வழக்கு பதியலாம் என்பது போன்ற கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்...
மீறி தவறு செய்யும் ஹவுஸ் ஓனர்கள் வீட்டை பிடுங்கி, அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக கொடுக்கவேண்டும்...
தகவல் தொழில்நுட்பத்துறையினர் வாடகை தர தயாராக இருக்கிறார்கள் என்பதற்காக சாதாரன மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் அடிக்கும் இந்த ஹவுஸ் ஓனர்களுக்கு இது போன்ற ட்ரீட்மெண்ட் தான் பலன் தரும்...
இதற்கு தகவல் தொழில்நுட்பத்துறையினரை குற்றம் சாட்டி பலன் இல்லை, அவர்கள் நான்கு ஐந்து பேராக தங்கி அலுவலகம் செல்வதற்கு, தலைக்கு இரண்டாயிரம் என்று போட்டு பத்தாயிரம் கூட வாடகையாக கொடுத்துவிடுகிறார்கள்...
அதிகப்படியான வேலை மற்றும் நேரம் காலம் இல்லாத துறையான தகவல் தொழில்நுட்பத்துறையினர், அலுவலகத்துக்கு அருகில் வீடு இருந்தால் நல்லது என்று அதிகப்படியான வாடகை கூட கொடுத்துவிடுகிறார்கள்..
ஆனால் பாதிக்கப்படுவது, உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் தான்...
சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு வாடகை என்று சரியாக தெரியவில்லை, நன்பர்கள் பின்னூட்டத்தில் தரவும்...
அரசின் காதில் இந்த விஷயத்தை கொண்டுசெல்ல வலைப்பதியும் பத்திரிக்கையாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும்..
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
19 comments:
//அடையாறு ஏரியாவா, வீட்டு வாடகை ஆறு ஆயிரத்தை தாண்டக்கூடாது, அட்வான்ஸ் இருபதாயிரத்தை தாண்டக்கூடாது...அம்பத்தூர் ஏரியாவுக்கு இவ்வளவு தான் வாடகை...//
வீட்டு வாடகையை இந்த அரசு நிர்ணயிக்க தார்மீக முகாந்திரம் இருக்கிறதா??
அடையாறு ஏரியான்னா வீடு ஒரு சதுர அடி ரூ 1500/- என்று வீட்டு மதிப்பை எடுத்து வரவேண்டும்.
அடையாறு ஏரியாவில் எழுபது லட்சம் செலவிட்டு 700 சதுர அடி ப்ளாட் வாங்கவேண்டிய நிலையை ஏன் தமிழக மக்களுக்கு அரசு உருவாக்கித்தரவேண்டும் முதலில்??
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கத்தில் ப்ளாட் சதுர அடி 2500ரூ, ஒரு கிரவுண்ட் நிலம் 40 லட்சம் என ஏன் விலை??
2006 வரையில் சென்னையின் ரியல் எஸ்டேட் இன்றிருக்கும்மாதிரியா இருந்தது???
2008ல் மின்வெட்டு நிறைந்த நிலையிலசாதாரணமான் 800சதுர அடி ப்ளாட் ஐம்பதுலட்சம் ஒருகோடின்னு விலை ஏற்றிவிட்டது தமிழக அரசு!
மக்கள் மதுராந்தகத்தில் இருந்து வேலைக்கு வந்து பழகிக்கொள்ள வேண்டும்.
திருப்பெரும்பூதூர், காஞ்சிபுரம் ஏற்கனவே சென்னை விலையாகிவிட்டது.
கார் கம்பெனிகள், ஐடி பார்க், அரசுத்துறை நிறுவனங்கள் என எல்லாமே சென்னையில் மட்டுமே ஏன் இருக்கவேண்டும்??
ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தமிழக அரசின் திட்டமிடாத செயல்பாடே காரணம்!
அனைத்துக் கட்சி அரசியல்வாந்திகளுக்கும் அடுத்த கட்சி அரசியல்வாந்தியின் கோவணத்தை அவிழ்ப்பதற்கும் , பொதுமக்களை கோவணாண்டிகளாக்கும் கொள்கையில் இணைந்து கூட்டணி அமைப்பதற்கும், அமைச்சர்களை வாக்கிங்ஸ்டிக் ஆக்கி நடமாடவும், குளிர்ந்த மலைப்பிரதேசத்தில் மாதக்கணக்கில் ஓய்வு எடுத்துகொள்ளவுமே நேரம் இல்லை!
//அடையாறு ஏரியாவில் எழுபது லட்சம் செலவிட்டு 700 சதுர அடி ப்ளாட் வாங்கவேண்டிய நிலையை ஏன் தமிழக மக்களுக்கு அரசு உருவாக்கித்தரவேண்டும் முதலில்??
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கத்தில் ப்ளாட் சதுர அடி 2500ரூ, ஒரு கிரவுண்ட் நிலம் 40 லட்சம் என ஏன் விலை??
2006 வரையில் சென்னையின் ரியல் எஸ்டேட் இன்றிருக்கும்மாதிரியா இருந்தது???
///
வாங்க ஹரி. ஆமாம்...
முக்காவாசி அரசியல்வாதிங்க ரியல் எஸ்டேட் தொழில்ல இருக்காங்க, அல்லது ரியல் எஸ்டேட் தொழில்ல இருக்கவங்க கிட்ட லஞ்சம் வாங்குறாங்க...
எப்படி திருந்துவாங்கன்னே தெரியல...
கர்நாடக லோக் அயுக்தா மாதிரி ஒரு அமைப்பு வந்தாத்தான் உருப்படும்...
கூடுதுறை எங்கே இருந்தாலும் வருக
ஒரு வீட்டின் விலையை அரசாங்கம் பெயரவில் நிர்ணயம் செய்கிறது.
தி நகர் மற்றும் அடையாறு பகுதிகளில் வீடு வாங்க எவ்வளவு செலவு என்ன ?
பேங்க் லோன் EMI எவ்வளவு ? பலதரப்பு குடியிருப்பில் maintenance எவ்வளவு வாங்குகிறார்கள் ? இவற்றை அரசாங்கம் எவ்வாறு நிர்வாகம் செய்ய இயலாதோ, அதே போன்று வாடகையையும் நிர்ணயிக்க இயலாது.
இப்பொழுதே வாடகையை கட்டுப்படுத்த சட்டங்கள் மற்றும் துறைகள் இருக்கின்றன. ஆனால் வாடகையும் demand / supply சம்பந்தப்பட்டதே !
***ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தமிழக அரசின் திட்டமிடாத செயல்பாடே காரணம்!***
இல்லைங்க ஹரி. திட்டமிடுதல் ஒரு அளவுக்கே சாத்தியம். இன்னும் ஒரு ஐந்தாறு ஆண்டுகளில் ஒரு சீரான நிலை வரலாம்
///இல்லைங்க ஹரி. திட்டமிடுதல் ஒரு அளவுக்கே சாத்தியம். இன்னும் ஒரு ஐந்தாறு ஆண்டுகளில் ஒரு சீரான நிலை வரலாம்///
இல்லை...கண்டிப்பாக நிலமை சீராகாது, ஹரிஹரன் சொல்வது சரி...
கடுமையான சட்டங்கள் மூலம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே என் கருத்து...
பரந்த தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்திரவாதம் சென்னையின் 50 கிமீ சுற்றளவில் மட்டுமே எனும் நிலையை உருவாக்கிய தமிழக அரசின் மட்டமான திட்டமிடல் சென்னையின் மக்கள் தொகை நெருக்கத்தை பல ஆயிரம் மடங்கு அதிகமாக்கி இருக்கிறது.
சென்னையில் வீடுவாங்க கிளிண்டன் புஷ் வகையறாக்கள் கூட சிரமப்படுவார்கள்!
கூவம் எனும் கொடிய சாக்கடை, மின்சாரம் இல்லாத இருட்டு, கொசுக்கடி ஆனா வீட்டு விலை ஒரு கோடியாம்...
சாதாரண அப்பிராணி சாமானியர்கள் பகுத்தறிவுத் தலைநகரில் ஒய்யாரமாக ஓடும் ஆரோக்கிய நதியான கூவத்தில் வீழ்ந்து மாளவேண்டியதுதான்!
அன்பருக்கு...
இப்போதுதான் இந்த பிரச்சனையில் மாட்டி வெளிவந்தேன்.
வீட்டுக்காரர்கள் போடும் கண்டிஷன்கள் பல...
1. குழந்தைக்கு cradle hook அடிப்பதற்குள் வீடு எதாவது ஆகிவிடுமா என்பதில் ஆரம்பமானது.
2. வீட்டுக்கு வந்த விருந்தினர்களிடமே “ நீங்க எப்ப போவீங்க..?” என்று கேட்டது.
3. அநியாயமான EB charge. அதைப்போய் கட்டிவிட்டு வருவதற்கு தனியாக பணம் தரவேண்டும். நம்மிடமும் தரமாட்டார்கள்.
4. நான்கு மாதத்திலேயே காலி செய்துவிட்டு வந்துவிட்டேன். அதற்கு வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கவேண்டும், Electrician வர வேண்டும், Plumber வர வேண்டும், இத்யாதி இத்யாதி என்று அநியாயமாக பணத்தை எடுத்துக் கொண்டுதான் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தந்தார்கள்.
6. வீட்டுக்கு விருந்தினர் வருவதாக இருந்தால் எங்களிடம் முன்கூட்டியே permission வாங்க வேண்டும் என்கிற ஆர்டர் வேறு.
வீட்டுக்கு எதிரில் இருந்த கோவிலில் சென்று அம்மனிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
உச்சபட்ச வயிற்றெரிச்சலில் என்னதான் செய்வது? அநியாயமாக பிடுங்கும் பணம், அதைவிட அநியாயமாக எங்கோ சென்றுவிடும் என்கிற சாதாரண உலக வழக்கு கூட புரியாதவர்கள் பற்றி பரிதாபப்படவே முடிகிறது.
எக்கச்சக்க வயிற்றெரிச்சலுடன்
நித்யகுமாரன்.
1. குழந்தைக்கு cradle hook அடிப்பதற்குள் வீடு எதாவது ஆகிவிடுமா என்பதில் ஆரம்பமானது.
ஒரு ஆணி அடித்தால் வீடே இடிந்துவிடும் என்பது போல சீன் போடுவார்கள்
2. வீட்டுக்கு வந்த விருந்தினர்களிடமே “ நீங்க எப்ப போவீங்க..?” என்று கேட்டது.
அடப்பாவிங்களா
3. அநியாயமான EB charge. அதைப்போய் கட்டிவிட்டு வருவதற்கு தனியாக பணம் தரவேண்டும். நம்மிடமும் தரமாட்டார்கள்.
எல்லா இடத்திலும் நடக்கிறது. பில்லுடன் நூறு ரூபாய் சேர்த்து பிடுங்குவார்கள். அதிலும் கமிஷன்.
4. நான்கு மாதத்திலேயே காலி செய்துவிட்டு வந்துவிட்டேன். அதற்கு வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கவேண்டும், Electrician வர வேண்டும், Plumber வர வேண்டும், இத்யாதி இத்யாதி என்று அநியாயமாக பணத்தை எடுத்துக் கொண்டுதான் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தந்தார்கள்.
அட்லீஸ்ட் 10 ஆயிரத்தையாவது இதில் கறந்துவிடுகிறார்கள்/
6. வீட்டுக்கு விருந்தினர் வருவதாக இருந்தால் எங்களிடம் முன்கூட்டியே permission வாங்க வேண்டும் என்கிற ஆர்டர் வேறு.
கொடுமை.
Add this also... In bangalore, they are not giving house for bachelors also... they are treated like terrorists....
country like india we need to do something for this issue.
I got really shocked by the latest rents.
//இதற்கு தகவல் தொழில்நுட்பத்துறையினரை குற்றம் சாட்டி பலன் இல்லை, அவர்கள் நான்கு ஐந்து பேராக தங்கி அலுவலகம் செல்வதற்கு, தலைக்கு இரண்டாயிரம் என்று போட்டு பத்தாயிரம் கூட வாடகையாக கொடுத்துவிடுகிறார்கள்...//
இந்த விபரத்தை விட்டுருந்தீங்கன்னா, மக்கள் வழக்கம் போல தகவல்தொழில்நுட்பக் காரர்களால் தான் இந்த பிரச்சனையேன்னு புலம்ப ஆரம்பிச்சுருவாங்க. இதுல இன்னொன்னும் இருக்கு. ஒரு 5 வருசத்துக்கு முன்ன எல்லாம் சென்னையில் திருமணமாகாதவருக்கு வீடு கிடைப்பது வேலை கிடைப்பதை விட சிரமமாக இருந்தது. ஆனால் இப்போ நான் நீ என்று போட்டிப் போட்டு கொண்டு வீடு தர தயாராக இருக்கிறார்கள்.
இது குறித்து சன் தொலைக்காட்சியில் ஒரு சிறப்புப் பார்வை வந்தது. ஒரு அம்மையார் சொல்கிறார், "ஆமாங்க நாங்க 25 லட்சம் கொடுத்து வீடு வாங்கியிருக்கோம். தவணை கட்ட வேண்டாமா? அதான் நிறைய வாடகை வசூலிக்கிறோம்" என்னத்த சொல்ல?
//ஆனால் பாதிக்கப்படுவது, உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் தான்...//
கூடவே, திருமணமான தகவல் தொழில்நுட்பக்காரர்களும் என்று சேர்த்து கொள்ளவும்
//அரசின் காதில் இந்த விஷயத்தை கொண்டுசெல்ல வலைப்பதியும் பத்திரிக்கையாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும்..//
கட்டாயம் அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்னு வாடகை உச்ச வரம்பு சட்டம் கொண்டு வரவேண்டும் அல்லது மலிவு விலையில் அரசே வீடுகள் கட்டி விற்க வேண்டும்
*******வாடகை உச்ச வரம்பு சட்டம் கொண்டு வரவேண்டும் ******
இருக்கற சட்டத்த திருப்பி கொண்டு வந்து என்ன பண்ண முடியும் ?
இங்கு வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் இதே மனிதர்கள் அவர்களுடைய வீட்டை வாடகைக்கு விடும் போது இதை விட அதிகமாக வாடகை கேட்பார்கள். இது ஒரு தொடர்கதை. இதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது.
50 லட்சம் போட்டு வாங்கும் ஒரு வீட்டை 25000 ரூபாய்க்காவது வாடகைக்கு விடாமல் இருக்க முடியாது. நீ கொடுத்தது 10 லட்சம்தானே அப்போ 10000 ரூபாய் தான் வாடகை கொடுப்பேன் என்று சொல்லவும் முடியாது. இது உலகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் இருக்கும் விஷயம் தான்.
//கடுமையான சட்டங்கள் மூலம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே என் கருத்து...//
கண்டிப்பாக கடுமையான சட்டங்களும், முறையான கண்காணிப்பும் வேண்டும்!
//அநியாயமான EB charge.//
யூனிட்டுக்கு குறைந்த பட்சம் 4 ரூபாய்! (அவுட்டர் ஏரியாவுல)
சிட்டி ஏரியாவுல எவ்வளவுன்னு கேக்கவே வாணாம்!
போன மாசம் நாங்க பயன்படுத்திய மின்சாரம் 34 யூனிட்! வீட்டு ஓனர்கிட்டே கொடுத்தது ரூ 126!
//இங்கு வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் இதே மனிதர்கள் அவர்களுடைய வீட்டை வாடகைக்கு விடும் போது இதை விட அதிகமாக வாடகை கேட்பார்கள்//
நாங்களும் நாமக்கல்லில் வீட்டின் மேல்தளத்தை வாடகைக்குத்தான் விட்டிருக்கிறோம்!
இ.பி கார்டு அவர்கள் கையிலேயே கொடுத்தாகி விட்டது!
வாடகை ரூ1500 மட்டும்தான்! (வாடகைக்கு குடி இருப்பவர்கள் கணவன், மனைவி இருவருமே அரசு அலுவலர்கள்தான்)
தண்னீர், மெயிண்டனென்ஸ் எக்ஸெட்ரா எதுவும் கிடையாது!
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்த பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
அ ஆ.. வால் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட- ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு- கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் தோன்றும் நீ என் மார்பில் தூங்கினால்
வாரங்களும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
பாட்டுக்கு நன்றி...!!!
Post a Comment