ரிலையன்ஸ் ப்ரஷ் கடைகள் : சிறு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி...!!!

கிண்டலோ நக்கலோ அல்ல...உண்மையில் ரிலையன்ஸ் பிரஷ் கடைகளால் சிறு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

பெங்களூர் இந்திரா நகர் வியாபாரி ஒருவர் காய்கறிகளை மொத்தமாக ரிலையன்ஸ் பிரஷ் கடையில் வாங்கி குவிப்பதை கண்டேன்...

என்னடா சோதனை..இது மதுரைக்கு வந்த சோதனை என்று அவரிடம் விசாரித்தபோது !!!!

பெங்களூர் சிட்டி மார்க்கெட் ( காய்கனி மொத்த வியாபார சந்தை - நம்ம கோயம்பேடு மாதிரி) விலையை விட, ரிலையன்ஸ் பிரஷ் கடைகளில் குறைவாக உள்ளதாலும், சிட்டி மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிவர வண்டி சத்தம் (வண்டி வாடகை) தனியாக ஒரு செலவு என்பதாலும், அருகருகே உள்ள ரிலையன்ஸ் பிரஷ் கடைகளிலேயே இப்போது வியாபாரிகள் வாங்கி விடுவதாக கூறுகிறார்...

அவர் சொன்ன அட்டவணைப்படி விலை நிலவரம்: (பெங்களூரில்)

முருங்கை சிட்டி மார்க்கெட் : ரூ 2:00 ரிலையன்ஸ் பிரஷ் ரூ 1:00
தக்காளி சிட்டி மார்க்கெட் : ரூ 5:00 ரிலையன்ஸ் பிரஷ் : ரூ 3:00
முட்டைக்கோஸ் சிட்டி மார்க்கெட் ரூ 6:00 ரிலையன்ஸ் பிரஷ்: 3:50

இதுபோல அனைத்து காய்கனிகளும் குறைவாகவே இருப்பதால் ரிலையன்ஸ் பிரஷ்ஷில் வாங்கி, அதன் பிறகு தள்ளு வண்டியில் வைத்து விற்பதை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதாக குறிப்பிட்டார்.

இங்கே அப்பார்ட்மெண்ட்கள் அருகாமையில் உள்ள கடைகளும் ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா என்று அருகில் உள்ள மால்களில் வாங்கி விடுகிறார்கள் என்று குறிப்பிட்டார். (இங்கே அப்பார்ட்மெண்ட்களில் அருகாமையில் அந்த குறிப்பிட்ட அப்பார்ட்மெண்ட் மக்களை குறிவைத்து கடைகள் / ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் உண்டு )

என்னத்த சொல்ல !!! ரிலையன்ஸ் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் தோழர்கள்...!!!

Comments

ரிலையன்ஸ் நேரடியாக விவசாயிகளிடமே வாங்குவாதல் விவசாயிகளுக்கு நல்ல லாபம் என்று ஏற்கனவே ஒரு செய்தி வந்தது. இடைத்தரகர்களை ஒழித்தால் விவசாயிகளுக்கும் லாபம், வாங்குபவர்களுக்கும் லாபம்.

Popular Posts