சமீபத்தில் தேசிகன் பதிவில் பாலத்தில் கூட ட்ராபிக் கான்ஸ்டபிள் மேட்டர், மற்றும் கொஞ்ச நாளைக்கு முன் ரசிகவ் ஞானியார் பதிவில் லால்பாக்கில் அவர் கண்ட "மேட்டர்கள்" எல்லாம் நியாபகம் வந்து தொலைத்தாலும் வழி அவ்வளவாக நினைவில்லை...
காண்ட்டீரவா ஸ்டேடியம் சுற்றி ம்ல்லைய்யா ஹாஸ்பிட்டல் ரோட்டில் போனால் ரிச்மண்ட் சர்க்கிள் வந்ததாக நியாபகம்...பெட்ரோல் வேறு ப்ளிங்கிக்கொண்டிருந்தது...அந்த வழியில் ஒரு பெட்ரோல் பங்க் இருந்ததும் நியாபகம்...
சி.எம்.ஹெச் ரோடு வழியாக அப்படியே எம்.ஜி ரோடு பிடித்தேன்...மெட்ரோ ப்ராஜக்ட்டுக்காக சி.எம்.ஹெச் ரோட்டில் பாதி மரங்கள் காலி...எம்.ஜி ரோட்டில் மெட்ரோவுக்காக ரோட்டை கால்பாகம் ஆக சுருக்கிவிட்டிருந்தார்கள்...
சிவாஜி நகர் சிக்னல் திரும்பும் முன்னால் உள்ள பெட்ரோல் பங்கிலேயே நுழைந்தேன்...500 ரூபாய்க்கு போட்டுவிட்டு பார்த்தபோதும் மாணீட்டர் 300 ரூபாய்க்கு போட்டமாதிரியே காட்டியது...பெட்ரோல் பங்க் காரர்கள் எப்போது நேர்மையை பழகுவார்களோ தெரியவில்லை...
நேராக அனில் கும்ளே சர்க்கிள் போய் அதில் ஸ்ட்ரெயிட்டாக போய் விட்டல் மல்லைய்யா ரோட்டில் திரும்பியபோது என்னடா எங்கேயோ போறமாதிரி இருக்கே என்று கொஞ்சம் யோசித்தேன்...
அப்படியே அதில் ரைட் திரும்பி ஒரு கெஸ் மாதிரி நேராக போனபோது ரிச்மண்ட் பாலம் கண்ணுக்கு சிக்கியது...அதில் நேராக ஒரு அழுத்து அழுத்தி, டபுள் ரோட்டை பிடித்து அதில் ஒரு ரைட்...லால்பாக் கேட் சிக்கியது...ஆனால் அதில் லெப்ட் எடுக்காமல் ரைட் எடுத்தேன்...அப்படியே லால்பாக் சுற்றி வெஸ்ட் கேட் பிடித்து அதிலும் ஸ்ட்ரெயிட்...அப்புறம் ஒரு யூ அடித்து வெஸ்ட் கேட்டுக்கு முன்னால் உள்ள ஏதோ ஒரு சந்தில் பார்க் செய்தபோது மணி பதினொன்று...
முப்பது ரூபாய் டிக்கெட்...அறுபது கொடுத்து ரெண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போகும்போது, மெட்டர் டிடெக்டர் வைத்து சோதனை செய்து, வெடிகுண்டு சோதனை கேட் வழியாக அனுப்புகிறார்கள்...வாழ்க புஸ்போன குண்டுகள்...
ஆரம்பத்திலேயே உள்ள பேல்பூரி ஸ்டாலில் பேல்பூரி ஒன்றை தங்கமணி வாங்க, நான் வாங்கியது மாங்காய்த்துண்டு...ஆசிப் மீரான் மற்றும் மோகன் தாஸ் உடன் மாங்காய் சாப்பிட்டபோது நியாபகம் வந்து தொலைத்தது...அப்போது எங்களுக்கெதிராக வாலிபால் விளையாடிய ஜீன்ஸ் அனிந்த அழகுப்பெண்களும்...(அதாவது நாங்க உக்காந்திருந்த இடத்துக்கு எதிரில் ஹி ஹி)
க்ளாக் ஹவுஸ் வரை நடக்கவே 15 நிமிடம் ஆனது...மொத்தம் 250 ஏக்கருக்கு மேலே பெங்களூரின் இதயப்பகுதியில் ஒரு பார்க்...அது தான் இந்த லால் பாக்...உள்ளேயே காடு மலை எல்லாம் இருக்கு...இண்ட்டீரியர் கர்நாடகாவில் இருந்து பள்ளிகள் கல்லூரிகள் மொத்தமும் கிளம்பி வந்துவிட்டார்களோ என்கிறது போல எங்கெங்கு காணிணும் இளைஞர்கள் இளம் பெண்கள் கூட்டம்...
இவ்வளவு கூட்டம் இருந்தாலும் காதலர்கள் அவர்கள் வேலைகளை சரியாக பார்த்துக்கொண்டு - ஒரு பெஞ்சையும் மிச்சம் வைக்காமல் கருமமே(!!) கண்ணாக இருக்கிறார்கள் :))
மொத்தம் எழுநூறு வகையான பூக்களாம்...சுற்றிப்பார்ப்பதற்குள் தாவு தீர்ந்தது...நூறுக்கும் மேற்பட்ட நிறங்களில் வைத்திருந்த ரோஜாத்தோட்டம் - எக்ஸலண்ட்...
பூக்களில் வீணை, கிட்டார், ஹார்ட்டீன் என க்ளாஸ் ஹவுஸில் கலக்கியிருந்தார்கள்...
விதைகள், தேன் என கடை விரித்தும் ஒரு குரூப்...கொஞ்சம் பூ விதைகளும், சில காய் கணி விதைகள், தங்கமணி உத்தரவின் பேரில் மஸ்க் மிலன் விதைகளும் ( உங்க கழனியில போட்டு பழம் எடுத்துட்டு வரச்சொல்லுங்க), மேலும் துலிப், ஆர்க்கிட் விதைகள் - தமிழகத்தில் நர்சரி வைத்துள்ள வெளிநாட்டு நன்பர்களுக்காகவும் வாங்கினேன்...
கோவை சென்றபோது மூலிகைமணி.அய்யா அவர்கள் கொடுத்த சர்க்கரை வியாதி செடிக்கான தொட்டி வீடு மாற்றும் போது உடைந்துவிட்டது...ஒரு டெம்ப்பரவரி ஸ்டோரேஜில் உள்ளது...அதற்காக ஒரு தொட்டியும் வாங்கினேன்...
சர்க்கரை வியாதிக்கான அந்த செடியில் இருந்து தினம் ஒரு இலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குறைகிறது என்று கொடுத்தார்...இப்போது அதில் இருப்பது ஒரே இலை...அதையும் தின்றுவிட்டால் டோட்டல் மிஷன் டேமேஜ் ஆகிவிடும் என்பதால் கஷ்டப்பட்டு ஆறுமாதமாக அந்த செடியை வளர்த்து வருகிறேன்...
மயில் ரெக்கை கூட குட்டி போட்டுவிடும் போலிருக்கிறது, அது வளர்ந்தபாட்டைக்காணோம்... பெரிய தொட்டியில் வைத்து - இனிமேலாவது வளருகிறதா பார்ப்போம்....
மேலும் ஒரு பேல் பூரி,அண்ணாசிப்பழம் என்று இன்னும் ரெண்டு ரவுண்டு அடித்தோம்...
சுட்ட கார்ண் வாங்குகிற வெள்ளை உடை அணிந்த கன்னிகாஸ்திரிகள், தலைக்கு மேல் பறக்கிற சோப்பு முட்டையை எகிறி பிடித்து உடைக்கிற இளம் வயது ட்ராபிக் கான்ஸ்டபிள், இரண்டு வாலிபர்களுக்கு மத்தியில் கலங்கிய கண்ணோடு அமர்ந்திருக்கும் இளம்பெண், குடு குடுவென ஓடி வந்து என் மனைவி கையைப்பிடித்த சின்னக்குழந்தை, ஏதோ ஒரு துண்டு சீட்டை கொடுத்து தியானத்துக்கு வருமாறு கூப்பிட்ட அதிக மேக்கப் போட்டு இளமையாக தெரிந்த கிழவி என்று மிக்ஸ் வியூவ்ஸ்...
அப்படியே டொம்ளூர் நந்தினியில் மதியம் மூன்று மணிக்கு ரெண்டு மினிமீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு, வீட்டுக்கு வந்து தூக்கம்...மூன்று வீடு தள்ளியிருக்கும் ட்ராவிட் வீட்டில் வெளியே நிற்பது ட்ராவிடா அவுங்க அண்ணனா ? டெஸ்ட் மேச் ஆடப்போவலியா இவரு ? சரி நெட்டை திறந்து பார்ப்போம் என்று நினைத்தபோது - இன்றைய மேட்டர்களை அப்படியே பதிவாக்கிவிடலாம் என்று தோன்றியது...
பி.கு 1 : என்னுடைய காமிரா பாட்டரி இன்றி சதி செய்தது இன்று...அதனால் நெட்டில் சுட்ட சில படங்கள்...
பி.கு 2 : நாளை (ஞாயிறு) மலர் கண்காட்சியின் கடைசிநாள்...
9 comments:
ஜ்வோராம் சுந்தர் பதிவுக்கு போய் ஏமாறுவது போல் இங்கு வந்தும் ஏமாந்து போனேன்:(((
//நாளைக்கு முன் ரசிகவ் ஞானியார் பதிவில் லால்பாக்கில் அவர் கண்ட "மேட்டர்கள்" எல்லாம் நியாபகம் //
பில்டப் மட்டும் லக்கி பார்த்த பத்து பத்து படம் ரேஞ்சுக்கு கொடுத்து விட்டு பதிவை குசேலன் மாதிரி கொடுத்துட்டீங்களே:((((
///ஜ்வோராம் சுந்தர் பதிவுக்கு போய் ஏமாறுவது போல் இங்கு வந்தும் ஏமாந்து போனேன்:(((///
எல்லாம் இந்த லக்கிலூக் குடுக்குற ப்ராக்டீஸ்...
:)))
உங்கள் பதிவு மேலும் பல வாசகர்களை சென்றடைய Tamilish.com தளத்தில் பகிரவும்
//சர்க்கரை வியாதிக்கான அந்த செடியில் இருந்து தினம் ஒரு இலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குறைகிறது என்று கொடுத்தார்...//
அது என்ன செடின்னு சொன்ன எனக்கும் கொஞ்சம் உபயோகமா இருக்கும்...
அது என்ன செடின்னு சொன்ன எனக்கும் கொஞ்சம் உபயோகமா இருக்கும்...
Wednesday, August 27, 2008
கோவை வைத்தியர் கொடுத்தார். பெயர் மறந்துவிட்டது. அவரிடம் நிறைய இருக்கிறது. என்னிடம் ஒரே ஒரு செடி இருக்கிறது. அவரிடம் பேசி நீங்களும் வாங்கி வளருங்க.
யாருக்கு ? உங்களுக்கா டயபட்டீஸ் ?
எனக்கு கலைடாஸ்கோப் என்ற நன்பர் எழுதிய பின்னூட்டம் படிங்க.
மூன்று தடவைகளுக்கு மேல் "பெண்கள்' என்ற வார்த்தையை உபயோகித்ததால் உங்களை போட்டியில் இருந்து விலக்குகின்றோம்..
மூன்று தடவைகளுக்கு மேல் "பெண்கள்' என்ற வார்த்தையை உபயோகித்ததால் உங்களை போட்டியில் இருந்து விலக்குகின்றோம்..
Wednesday, August 27, 2008\
எந்த போட்டி ? ஒன்னுமே விளங்கலையே ???
///ஆசிப் மீரான் மற்றும் மோகன் தாஸ் உடன் மாங்காய் சாப்பிட்டபோது நியாபகம் வந்து தொலைத்தது...அப்போது எங்களுக்கெதிராக வாலிபால் விளையாடிய ஜீன்ஸ் அனிந்த அழகுப்பெண்களும்..//
ஆஹா! ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :-)))
Post a Comment