நல்ல Resume தயாரிப்பது எப்படி?

படிக்கறது எதுக்கு.. அறிவை வளர்த்துக்கன்னு சிலபேரு சொல்வாங்க. அது உண்மைதான். அதேநேரம் படிப்புக்கு செலவழிக்கிற காசையும் திரும்ப எடுக்கனுமே..

ஒரு இண்டர்வியூவுக்கு போறதுங்கறது, நம்மளை நாமளே மார்க்கெட்டிங் பண்றதுமாதிரி. ஒருத்தர் நம்மக்கிட்ட ஒரு எலெக்ட்ரானிக் பொருளை விற்குகுறாரன்னு வைங்க. பார்த்த உடனே வாங்கிடுவோமா..? எவ்ளோ நாள் உழைக்கும், நல்லா ஓடுமா, வாரெண்டி இருக்கா, அப்படீன்னு எத்தனை கேள்வி கேப்போம் ? அது மாதிரிதான் நம்மளை வேலைக்கு எடுக்கற கம்பெனியும. நாம நல்லா வேலை செய்வோமா, கம்பெனிக்கு நம்பிக்கையா இருப்போமா அப்படின்னு பல மேட்டர்களையும் பார்த்துதான் நமக்கு வேலையும், சம்பளமும் தராங்க.பொருளை கடைக்காரர் நம்மக்கிட்ட விற்பதற்கு முதல் படி, ஷோரூம் நல்லாருக்கனும், நல்ல ஏ.சி. இருக்கனும், கடை பார்க்க நல்ல லுக்கா இருக்கனும். அப்பதானே கடைக்குள்ள நாம போவோம். அதுமாதிரி, நம்ம ரெஸ்யூம் சும்மா 'நச்'னு இருந்தாத்தான், இந்த கேண்டிடேட்டை கூப்புடலாமான்னு யோசிப்பாங்க. மொக்கையா ஒரு ரெஸ்யூமை அனுப்பிட்டு, 'என்னடா இந்த கம்பெனிக்காரன் இன்னும் கூப்புடலையே'னுன்னு தேவுடு காக்குறதுல அர்த்தமில்லை.

மேட்டருக்கு வருவோம். எல்லா ப்ரெஷ்ஷர் ரெஸ்யூமும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியம் இல்ல. ஒரு நல்ல 'சரக்கான' ரெஸ்யூம, அது பிரெஷ்ஷர் ரெஸ்யூமா இருந்தாலும் சரி, எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தாலும் சரி, கில்லியா இருக்கும். இண்டர்வியூவுக்கு முன்னாலயே, நம்மளோட நேர்த்தியான ரெஸ்யூமால இம்ரஸ் அள்ளிடலாம்.

ஒரு நல்ல ரெஸ்யூம்ல இருக்க வேண்டிய மேட்டர்ஸ்.

1. உருப்புடியான "Objective"
2. நல்ல டேபிள்ல அழகா அலைன் செய்யப்பட்ட "Qualification" டீட்டெயில்ஸ்
3. நேரடியா என்ன தெரியும், என்ன தெரியாதுன்னு சொல்ற "Skills and Experiences"
4. ஏற்கெனவே வேலை பார்த்திருந்தா அந்த "Work History"
5. ஏதாவது நல்ல "Trainings" , அப்புறம் "Education Extra" மேட்டர்ஸ்
6. படிப்ப விட வேற எதுவும் தெரிஞ்சிருந்தா "Extra Carricular Activities", "Interesting Hobbies"
7. பர்ஸனல் டீட்டெயில்ஸ் - டாடி மம்மி பேரு, மெரிட்டல் ஸ்டேட்டஸ், பர்த் டே, பாஸ்போர்ட், போன் நம்பர்ஸ், அட்ரஸ்

அப்புறம் ரெஸ்யூமை வித்யாசப்படுத்துறேன்னு ஏதாவது மொக்கையா எழுதி வைக்காம, நீட் அண்ட் க்ளீனா இருக்கமாதிரி பார்த்துக்கோங்க.

பாஸ்போட் சைஸ் கலர் போட்டோவை ஸ்கேன் பண்ணி ரெஸ்யூமுக்கு மேலே டாப்புல ஒரு கட்டம் கட்டி வச்சீங்கன்னா நல்லா இருக்கும். ரெஸ்யூம்ல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராம‌ பார்த்துக்கோங்க.

ரெஸ்யூமை பார்மேட் பண்ணும்போது இடம் விடவேண்டிய இடங்களில் ஸ்பேஸ் பாரை அழுத்தி அழுத்தி இடம் விட்டீங்கன்னா, திரும்ப ரெஸ்யூமை வேற ரெஸல்யூஷன் இருக்க கம்ப்யூட்டர்ல ஓப்பன் பண்ணி பார்த்தா ரொம்ப மொக்கையா இருக்கும். அதனால டேப் (TAB) கீயை யூஸ் பண்ணுங்க. எஜுக்கேஷனல் குவாலிபிகேஷனுக்கும், ஸ்கில்ஸுக்கும் எம்.எஸ். வேர்ட்ல இருக்க டேபிள் யூஸ் பண்ணுங்க, நல்லா இருக்கும். ஒரு சில கம்பெனிகள் எல்லா செமஸ்டர் மார்க்கும் கேப்பாங்க. அதனால செமஸ்டர் வைஸ் மார்க் டிஸ்ப்ளே பண்ணுங்க.

ஏரியல், டைம்ஸ் நீயூ ரோமன், வெர்டனா மாதிரி காமன் பாண்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. உங்க ரெஸ்யூமுக்கு ஒரு பிளஸண்ட் லுக் கிடைக்கும். அதிகபட்சமா ரெண்டு பக்கம் இருந்தா போதும். அதிக பக்கம் இருக்க ரெஸ்யூமை ரிவ்யூ பண்றவங்களுக்கு / ஹெச்.ஆர் டீமுக்கு சலிப்பை வரவெச்சுரும். ஒவ்வொரு பக்கத்துலயும் பேஜ் நெம்பர் வர்ரமாதிரி பார்த்துக்கோங்க.

'ரெபரன்ஸ்' அப்படீன்னு கடைசியில ஒரு Section போட்டு, அதுல காலேஜ் ஹெச்.ஓ.டி. பேரை போடுறது, அமெரிக்காவுல இருக்க மாமா பையன் பேரை போடுறது எல்லாம் அவுட் ஆப் பேஷன். அதை எல்லாம் இப்ப போட்டு ரெஸ்யூமை கலீஜ் பண்ணாதீங்க. அப்புறம் கடைசியா கவரிங் லெட்டர் அப்படீன்ற காண்ஸெப்ட் இப்ப இல்லாம போயிருச்சு. அதனால அதெல்லாம் வேலை மெனக்கட்டு டைப்பிக்கிட்டு இருக்காதீங்க.

Your Resume is a Visiting Card for your Job Search !

சும்மா 'நச்' னு ஒரு ரெஸ்யூமை போட்டு உங்களோட கேரீயரை 'கில்லியா' ஆரம்பிங்க.

வாழ்த்துக்கள்!

மற்ற விஷயங்களையும் படிக்க இங்கே அமுக்கி யூத்புல் விகடன் செல்லவும்...

Comments

ஏதோ படிச்சிட்டு, பத்து வருடங்களாக வேலை தேடியும் ஏன் வேலை கிடைக்கவில்லை என்று இப்பதானே தெரியுது. இனியாவது ஒரு நல்லவேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படித்துவிட்டு பின்னூட்டம் எழுதிவிட்டுபோகிறேன். வணக்கம்.
தோழர்!

யூத்ஃபுல்.விகடனில் தங்களைப் போன்ற வயதானவர்களும் அசத்துவது குறித்து வாழ்த்துக்கள்!!! :-)
அதிஷா said…
தலைவா பதிவு சூப்பர் கலக்கல்

பயனுள்ளபதிவு
அண்ணாச்சி ஏதும் மாடல் இருந்தால் போட்டிங்கன்னா உபயோகமாக இருக்கும்!

ஜிம்ஷா புரோப்பைல் படம் சூப்பரா இருக்கு அந்த போட்டோவை என் ரெசியுமில் போடலாமா?
///ஜிம்ஷா புரோப்பைல் படம் சூப்பரா இருக்கு அந்த போட்டோவை என் ரெசியுமில் போடலாமா?///


போட்ட உடனே வேலை கொடுப்பாங்க. வேணுன்னா முயற்சி செய்து பாருங்கள். இந்த போட்டோவுல இருக்கிறது யாருனு நேற்றுதான் ஒரு பதிவு போட்டேன். பதிவின் தலைப்பு "என்னைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்"
குசும்பன்னு பேரு வச்சது சரியாப்போச்சு.
Anonymous said…
அண்ணாச்சி ஏதும் மாடல் இருந்தால் போட்டிங்கன்னா உபயோகமாக இருக்கும்!//

அதிலும் மும்பை மாடல்னா சூப்பராயிருக்கும்..
ஆஹா...

மாடரேஷன் தூக்கறது எப்படித்தான் கும்மிப்பதிவர்களுக்கு பாஸ் ஆவுதோ தெரியல...

இங்கே ஆரம்பிச்சாச்சா ?
யூத்ஃபுல்.விகடனில் தங்களைப் போன்ற வயதானவர்களும் அசத்துவது குறித்து வாழ்த்துக்கள்!!! :-)//////////////////

என்னாது ???
ரவி, நல்ல பதிவு.

அதை தவிர, objective என்ற எடத்தில் கண்ட jargons எழுதாமல், எளிதான வார்த்தைகளில் எழுதுவதும் அவசியமே.

அம்மா பெயர், அப்பா பெயர் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நல்ல reference இருந்தால் போடுவதில் தவறு இல்லை.
//ஜிம்ஷா புரோப்பைல் படம் சூப்பரா இருக்கு அந்த போட்டோவை என் ரெசியுமில் போடலாமா?///

அப்ளிக்கேஷன் போடுற எடத்தை பொறுத்து...!!
///அம்மா பெயர், அப்பா பெயர் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நல்ல reference இருந்தால் போடுவதில் தவறு இல்லை.///

ஆந்திராக்காரனுங்க ஜாதிப்பெயர் வருகிற ரெபரன்ஸ் கொடுப்பானுங்க...reddy, Naidu அப்படீன்னு...

நார்த் இண்டியன்ஸ் அது புடிக்காம ரிஜெக்ட் பண்ணதை நான் பார்த்திருக்கேன்...
இல்லைங்க நான் சொல்ல வந்த reference ஒரு கம்பெனில (ப்ராஜெக்ட் ) செஞ்சி இருந்தா அவனோட மேனேஜர் பேரையோ, HR பேரையோ போடறத சொன்னேன்.
ஓ அது செய்யலாம்..

ஆனால் அவங்களோட நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கனும்...

வெளியே போன எம்ப்ளாயி என்று நம்ம பொழப்பை கெடுக்கும் பழைய கம்பெனி மேனேஜர்ஸ் இருக்கிறாங்க...

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிவிட்டு நம்மளோட புது வேலைக்கும் ஆப்பு வெச்சிருவாங்க...

நிறைய உதாரணம் இருக்கு...!!!

Popular Posts