அதன் விளைவு தான் இந்த புரட்சி திருமணம்...ச்சே சாம்பார்...முதல் படத்தில் வெங்காயம் தக்காளி தாளிக்கப்படும் காட்சி...
இரண்டாவது படத்தில் புளித்தண்ணீர், பருப்பு தண்ணீர், மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு போடப்பட்டு கொதிக்கவைக்கப்படும் காட்சி...
படத்தின் மீது பெரிதாக்க படத்தை க்ளிக்கி ( இதை எல்லாம் பெரியதாக பார்த்து என்ன செய்யப்போகிறீர்...சும்மா போவும்...இது என்ன நமீதா படமா ? )
கொதிக்கும் வாசனை அடிக்கிறதா ? இப்போது நான் சொல்ல மறந்த கடைசி பஞ்ச்...இதில் மேலாக்க கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்...
முந்தைய பதிவில் பின்னூட்டம் போட்ட வெட்டிப்பயல், இதற்கு நெத்திலி வறுவல் சூப்பர் காம்பினேஷன் என்று கூறியிருந்தார்...நானும் அதை ஆமோதிக்கிறேன்...வெஜிட்டேரியன் மக்கள்ஸ், நீங்கள் உருளைக்கிழங்கு வறுவலோ அல்லது கருணைக்கிழங்கு வறுவலோடு அப்படியே ஓரங்கட்டிக்கொள்ளுங்கள்...
நெத்திலியை மசாலா தடவி பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, அப்படியே நாம ஒதுங்கிங்கலாம்...(இந்த பதிவெல்லாம் சூடான இடுகையில வந்து என்ன செய்யப்போகுது ? ப்ளீஸ் இதை யாருக்கும் ரெபர் செய்யாதீங்க)
6 comments:
In the photo, your jatti, sorry, satti is not seems to be clean. Same like your mind & thinkings.
சாம்பார் ஆரிய கண்டுபிடிப்பு,
திராவிட கொழம்பு ஏதாவது சொல்லித்தாருங்கள்
காரக்குழம்பு தான் திராவிட குழம்பு என்று நினைக்கிறேன்.
உமக்கு திருமணம் ஆகவில்லை என்றால் இப்படி படங்களுடன் சமையல் குறிப்பு போட வேண்டாம்.
திருமணம் ஆகியிருந்தால் இன்னும்
சமைக்க கற்றுக் கொள்ளவில்லை என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.எனவே
சமைத்துப் பார் மூன்று தொகுதிகளை
வாங்கி படித்து சமைக்கவும்.
/என்னுடைய நூற்றுக்கணக்கான(??) வாசகர்களின் /
ரவி, அவையடக்கமா..தைரியமா ஆயிரக்கணக்கான வாசகர்கள் அப்படின்னு அடிச்சு விடுங்க :)
இந்த "சட்டி" கி.மு.வா? கி.பி.யா?? இத தஞ்சாவூர் பெரிய கோவில்ல வெச்சா வருங்கால சந்ததிகளேல்லாம் பாத்து பயனடைவார்கள்.. :)))
Post a Comment