கம்ப்யூட்டரில் இருந்து போஸ்ட் ஆபீசுக்கு தபால் போடுங்கள்கணினி, செல்போன்களின் பரந்த பயன்பாட்டுக்கு பிறகு, தபால்காரர் கொண்டுவரும் கடித்ததை யாரும் எதிர்பார்ப்பதில்லை இப்போது...

(லவ் லெட்டருக்காக போஸ்ட் மேன் வழிமேல் தம் அடித்து பார்த்திருந்த நபராக இந்த பதிவை எழுதவில்லை செந்தழல் ரவி)

கிராமங்களில் கூட பரவலாக அலைபேசி...

சொல்லவேண்டிய செய்தியை குறுஞ்செய்தியாக அனுப்பிவிடக்கூடிய அறிவு தமிழனுக்கு பரந்து காணப்படுகிறது...

ஆனால் இன்னும் போன், இண்டர்நெட் எட்டிப்பார்க்காத பல கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன...

ஆனால் தபால் துறை அவர்களை இன்றும் கைவிடாமல் இருக்கிறது...ஒரு நபர் தபால் அலுவலகம், தந்தி அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் மேல் இந்தியாவில்...!!

இருந்தும் தபால் துறை ஒன்றும் நிலைப்பது போல் தோன்றவில்லை...

டெக்னாலஜி அழித்த பல விடயங்களில் தபால் தந்தியும் ஒன்று...

சமீபத்தில் அ.ராசா (தகவல் தொடர்புக்கான மத்திய அமைச்சர்), தபால் துறை வங்கித்துறையிலும் / மியூச்சுவல் பண்ட் துறையிலும் முழுவீச்சில் செயல்படும் என்று சொல்லியிருக்கிறார்...

இங்கே நான் சொல்ல வந்த விடயம் இது தான்...

உங்கள் கிராமத்தில் அலைபேசி வசதி இல்லாத நன்பருக்கு (அல்லது உங்களுக்கு எண் தெரியாமல் இருக்கலாம் :) நீங்கள் பணியாற்றும் இடத்திலிருந்து கடிதம் அல்லது வாழ்த்தை தபால் காரர் மூலம் கொண்டு போய் சேர்க்கும் வசதியை இ-போஸ்ட் என்ற சேவை மூலம் இந்திய தபால் துறை அளிக்கிறது...

எத்தனை பேர் இதனை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை, இதோ சுட்டி..

http://indiapost.nic.in/login/login.jsp?menuId=NONE

இந்த வசதி மூலம் நீங்கள் எழுதும் மின்னஞ்சலை, A4 காகிதத்தில் ப்ரிண்ட் எடுத்து, நீங்கள் சொல்லும் முகவரிக்கு, சாதாரண தபால் ஆக அனுப்பி விடுகிறார்கள்..

செலவு : ஒரு பக்கத்துக்கு 10 ரூபாய்.

ஒரே நேரத்தில் எத்தனை பக்கங்கள் வேண்டுமானானும் எழுதலாம்...(ஒரே முகவரிக்கு - ஆனால் பக்கத்துக்கு 10 ரூ என்று நினைக்கிறேன்).

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இது தான்...இந்த இணைய தளத்தில் சென்று உங்கள் பெயர் / கடவுச்சொல் உருவாக்கவேண்டும்...

நீங்கள் வசிக்கும் நகரத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் முன்கூட்டியே பணம் செலுத்தி (Pre-Paid) ஒரு ரகசிய எண்ணை பெற்றுக்கொள்ளவேண்டும்..

அந்த ரகசிய எண்ணை உள்ளீடு செய்து உங்கள் கடித்ததை அனுப்பவேண்டியது தான்...

நீங்கள் கடிதம் அனுப்பிய பிறகு உங்களது அட்டையில் இருந்து பணத்தை கழித்துக்கொள்வார்கள்...!!!!

பஞ்ச் பாய்ண்ட்:

இந்திய தபால் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் நலனுக்காவது,

மாபெரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய தபால் துறை, தன்னை முழு வீச்சில் நவீனப்படுத்திக்கொள்ளவேண்டும்...மத்திய அமைச்சர் ராசாவின் உரையை சமீபத்தில் இணையத்தில் படித்தேன், அற்புதமான வாசிப்பாளர், ஆழ்ந்த சிந்தனையாளர் என்று தெரிந்தது...இந்த இளம் வயதில் இவ்வளவு வாசிப்பனுபவமா என்று ஆச்சர்யப்பட்டேன்...

ரெட் அலர்ட்:

இந்திய தபால் துறையின் தலைவராக இருக்கும் ராசா அவர்கள், உடனடியாக தபால் துறை அழிந்துவிடாமல் காக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும்...!!!

Comments

ரவி,

விஞ்ஞானம் வளர வளர ஒரு சில சேவைகள் செல்வாக்கை இழப்பது வாடிக்கைதான்!

போஸ்ட் ஆஃபீஸ் சென்று அஞ்சலட்டை வாங்கி எழுதி திரும்பவும் போஸ்ட் ஆஃபீஸ்/போஸ்ட் பாக்ஸ் சென்று போட்டுவிட்டு ரெண்டு நாள் காத்திருப்பதெல்லாம் அந்த காலம்!

ஆனால் டயல் பண்ணினமா உடனே மேட்டரை சொன்னமா (அதுவும் 2 அல்லது 3 ரூபாய் செலவில்) மேட்டர் ஓவர்!

அதுக்காக தபால் துறை வழக்கொழிந்து போய்விடவில்லை இன்னமும்! ஆனால் கூரியர் சர்வீஸ் போல அவர்களால் போட்டி போட முடியவில்லை!

தபால் துறை நீங்கள் சொன்னது போல சிறிய கிராமங்களுக்கு வேண்டுமானால் ஓகே!

பெரிய நகரங்களில் போஸ்ட் ஆஃபீஸ் தேடிப் போக வேண்டியிருக்கு! பக்கமாகவும் இருப்பதில்லை!

போஸ்ட் பாக்ஸும் எங்கே இருக்குன்னு தேடிப் போகணும்! அதுக்கு பதிலா கூரியர்ல அனுப்பிடலாம். அடுத்த நாளே போய்ச் சேர்ந்துடும்!
இந்த இ-போஸ்ட் முறையில் தமிழில் எழுத முடியுமா? அல்லது ஆங்கிலத்தில்தான் மின்னஞ்சல் அனுப்ப முடியுமா!

தமிழிலேயே அனுப்ப முடியும் என்றால கூட ஒரு பக்கம் - ரூ10 என்பது அதிகம்தான்!

இதுக்கு கூரியரே பெட்டர்!
புதிய செய்தி, நன்றி.!
புதுப்புது தகவல்களை
அள்ளித் தெளிக்கும்
ரெட்பயருக்கு
ஒரு"ஓ" போடுவோம்!
//தமிழிலேயே அனுப்ப முடியும் என்றால கூட ஒரு பக்கம் - ரூ10 என்பது அதிகம்தான்! //

தமிழில் எழுதலாம்...!!! தெலுங்கிலும் எழுதலாம்...!!! அந்த வசதிகள் உண்டு...

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மிகவும் உபயோகமானது...
வாங்க தாமிரா !!! எண்ட்ரிக்கு நன்றி !!!
வாங்க சிவஞானம்ஜி. சுகம்தானே !!!!
\
(லவ் லெட்டருக்காக போஸ்ட் மேன் வழிமேல் தம் அடித்து பார்த்திருந்த நபராக இந்த பதிவை எழுதவில்லை செந்தழல் ரவி)
\

தெரியும்ணே...
நல்ல செய்தி ரவி....

//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...//
ஹிஹி.. லொள்ளூ...:))

Popular Posts