டி.வி நடிகைகளுடன் கருத்து கந்தசாமி..நமது கருத்து கந்தசாமிக்கு டி.வி நாடகங்கள் என்றால் உயிர். அவர் உயிராக பார்க்கும் நாடகங்கள் லிஸ்ட் மிக பெரியது. வலைப்பதிவில் சில சமயங்களில் டி.வி நாடகங்கள் பார்ப்பவர்கள் பேடிகள், ஒன்றுக்கும் உதவாத சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றெல்லாம் கருத்து சொல்லியிருந்தாலும், கோலங்கள், ஆனந்தம், வைரநெஞ்சம் உட்பட சமீபத்திய தெக்கத்தீ பொண்ணு வரைக்கும் தினமும் பார்ப்பவர்

தினமும் நாடகங்களை பார்க்காவிட்டால் அவருக்கு அன்றைய பொழுதே சாயாது...இவர் நாடகத்தில் இருக்கும் கதைக்காத்தான் பார்க்கிறார் என்று சில பேர் "எங்கே தெக்கத்தி பொண்ணு கதையை சொல்லுங்க பார்ப்போம்" என்றதுக்கு வழமை போல ஆடு திருடியதுபோல இரண்டு முண்டைக்கண்களையும் போட்டு திருதிருவென விழிக்கிறர்...

வேறு எதற்காக பார்க்கிறீர்கள் என்று நோண்டி நோண்டி கேட்டபோது உண்மையை ஒப்புக்கொண்டார். டி.விக்களில் வரும் மார்க்கட்டு இழந்த பழம் பெரும் நடிகைகளை தரிசிப்பதுதான் அவரது முதன்மையான நோக்கம்...

யானைபோல இருக்கும் நளினியை என்ன ரசித்துவிடமுடியும் ? ஒய் விஜயாவிடன் என்னத்தை கண்டீர் என்றெல்லாம் குறுக்கு விசாரனை செய்தபோது ஒரு உண்மை வெளிவந்தது...

அதாவது கருத்து கந்தசாமியின் பள்ளி பருவத்தில் அவரது தந்தையாரிடம் பள்ளியை கட்டடித்துவிட்டு சினிமா பார்த்து மாட்டியுள்ளார்..அவர் அடி பின்னிவிடவே, கந்தசாமி அதன் பிறகு சினிமாவே பார்க்கவில்லை...அந்த சோகத்தை படித்து முடித்து யாரோ புண்ணியவான் போட்ட பிச்சையில் சிங்கப்பூரில் கம்பி கட்டும் வேலை கிடைத்தவுடன், அதை நம்பி சிங்கப்பூர் வந்து, கிட்டத்தட்ட செட்டில் ஆகி, இன்று நல்ல நிலையில் உள்ளார். அதாவது கம்பி கட்டுவதில் இருந்து பிரமோஷன் பெற்று ஆணி புடுங்குகிறார்.

நிற்க...நேற்று கருத்து கந்தசாமி ஓரே சோக பீலிங்ஸோடு இங்கேயும் அங்கேயும் குட்டி போட்ட பன்றி போல சுற்றிக்கொண்டிருந்தார்...குட்டி போட்ட பூனை என்று சொல்லியிருக்கலாம் தான்...ஆனால் நீண்ட நெடுங்காலமாக ஓரே இடத்தில் அமர்ந்து ஆணி புடுங்குவதால் பன்றியைபோல பெருத்து தொப்பையை தூக்கிக்கொண்டு நடக்கவே கஷ்டப்படுகிறார்...

க.க, என்ன மேட்டர் ? ஏன் ஒரே டென்ஷன் ?

அது ஒன்னுமில்லை...

சொல்லுங்க பரவாயில்ல...என்ன தேவயானி புட்டுக்கிட்டாளா ? இல்லை ரஞ்சிதா ஓடிப்போயிட்டாளா ?

அதெல்லாம் ஒன்னும் இல்லை...

அப்புறம் என்ன ஆச்சு ? ஏன் இந்த கலவரம் ?

என்னை ஒரு டி.வி நடிகை அறைஞ்சுட்டா...

என்னது டிவி நடிகை அடிச்சாளா ? ஏன் ? எங்க பார்த்த ? எப்போ இது நடந்தது ?

நேத்துதான்...நேத்தும் வழக்கம்போல என் பொண்டாட்டி என்னை செட் தோசை வாங்க சென் தோசா வுக்கு அனுப்பினாள்..

அங்கே ஓட்டல்ல ஒய் விஜயாவை பார்த்தேன். ஏதோ சூட்டிங் வந்திருப்பா போல...நிக்க வெச்சு ஒரு போட்டோ எடுக்க முயற்சி பண்ணேன். அவ மாட்டேன்னா. நான் கம்ப்பல் பண்ணேன். திரும்பவும் மாட்டேன்னா. விடாம மறிச்சு நின்னு போட்டோ எடுக்கப்பாத்தேன். பளார்னு அறைஞ்சுட்டு உள்ளே போய்ட்டா.

யோவ் இது என்னய்யா அநியாயமா இருக்கு...ஒரு போட்டோவுக்கு போஸ் குடுக்கமாட்டாளாமா ? அதுவும் டி.வி நடிக...

ஆமா அப்படி எங்க அவசரமா போனாளாம் ? எதுவும் ப்ளைட்டை புடிக்க நேரமாயிருக்கும்னு நெனக்கிறேன்...

கருத்து கந்தசாமியின் முகம் இன்னும் கொஞ்சம் வழக்கத்தை விட கோணலானது..

நான் லேடீஸ் டாய்லெட் வாசல்ல இல்ல போஸ் குடுக்க சொன்னேன்...

ஙே !!!!!!!

******************************************
******************************************

Comments

ரவி said…
thanks for all voted in tamilish
நகைச்சுவை நல்லா வருது

சரி கிளம்புறேன்
அர்ஜெண்டா கருத்து சொல்ல டி.நகர் போகனும்
ஹ ஹ ஹ ...

நன்றை இருந்த்து..
ஐயோ பாவம் கருத்து கந்தசாமி .... ரவிக்கும் அவருக்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ ? முடியல சாமி ..............
யோவ் நிப்பாட்டுங்கய்யா..
:(

Ravi,

this is very bad... :(
தோசை வாங்க போன இடம் பிழை..
இரவி , தங்களின் பதிவுகளை இரண்டு வ்ருடங்களாக படித்து வருகிறேன். இதுவரை பின்னூட்டம் இடாமலே இருந்துள்ளேன்.இன்று ஏனோ தோன்றியது. உங்களது பிறர்க்கு உதவும் மனப்பான்மை பாராட்டதக்கது. நல்லது செய்யும் போது ஊக்கங்களை மட்டும் வரவில் வைக்க. பிறவற்றை கழிக.. தங்களை தாங்களே தகுதியிறக்கவேண்டாம். வாழ்த்துகள்.
@அகில் பூங்குன்றன்
உங்களையே எடுத்து கொள்வோம். இரண்டாண்டுகளாக ரவி ஆக்கபூர்வமாக எழுதும்/செயல்படும்போதெல்லாம் வாய்மூடி வெறுமனே படித்து விட்டு போனீர்கள். இப்போது மட்டும் ஏன் வர வேண்டும்? அப்படியே போக வேண்டியதுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
Osai Chella said…
இக்கட சூடுங்க மக்களே! கருத்து கந்தசாமி டவிசரை கயட்டி விட ஆரம்பிச்சு....!

Popular Posts