ஒரு சுவீடிஷ் பெண்ணும் நானும்...

நேற்று அலுவலகம் முடிந்து பேருந்து நிலையத்துக்கு 199 ஆம் நம்பர் பஸ்ஸை பிடிக்க போனால் அந்த பஸ்ஸில் "ஹெல்லேஸ்கார்கடன்" என்பதுக்கு பதில் வேற என்னமோ எழுதி இருந்தது...

என்னடா இது, நம்ம பஸ்ஸு தானா, இல்லை வேற எங்கியாது கொண்டுபோய் எறக்கி விட்டுடப்போறானா என்று மண்டை காய்ந்தது...

பேருந்தில் ஏற்கனவே ஏறி அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அழைத்தேன்...பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று வரும் பெண் போல...

அந்தம்மாவுக்கோ ஸ்வீடிஷ் தவிர ஏதும் தெரியவில்லை...

நான் கேட்டது, ஈஸ் திஸ் பஸ் கோயிங் டு ஹெல்லேஸ்கார்கடன் ?

அவள் சொன்னது, ஆஷு ஹ்ஜீ ஜ்ஜு க்கா க்கூ ஹே அஷி ஷி ஹ்ஷி ஷ்...

நான் கேட்டது, கேன் யூ ஸ்பீக் இங்கிலீஷ் ?

அவள் சொன்னது, ஷி ஷி ஷு ஷு ஹா ஹெல்லோ ப்ளூண்டா டோர்க் 99 ?

நான் வேற வழியில்லாம சொன்னது, ங்கொக்கமக்கா, இந்த வண்டி நான் போற எடத்துக்கு போவுமா போவாதா ?

அவள் திரு திரு வென விழித்தபடி, ஹி சு ஷெ ஹே ?

அப்புறம் வேற வழியில்லாம அந்த வண்டியிலேயே ஏறி, போற பக்கம் போவட்டும்யா என்று விட்டதில் வீட்டு முன்னால் சரியாக வண்டியை நிறுத்தினார் டிரைவர் பெண்மணி. கதவும் திறந்தது. இறங்கி அந்த லேடீஸ்க்கு ஒரு டாட்டா காட்டியபடி வீட்டுப்பக்கம் நடையை கட்டினேன்...

>> வினையூக்கி மட்டும்தான் சுவீடன்ல இருந்து கதை எழுதுவாரா ? நானும் ஜாயினிங் த க்ளப்.

>> சுவீடனில் என்னை தொடர்புகொண்டு மொக்கை போட விரும்புபவர்கள் அழைக்கவேண்டிய தொலை பேசி இலக்கம் +46 700598845 அல்லது 0700598845.

>> சுவீடனில் எங்கே இட்டிலி கிடைக்கும் என்று சொன்னீர்கள் என்றால் வசதியாயிருக்கும்...

>> சுவீடனில் ஆட்டோ இல்லாததால் அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஏரியா உட்பட சொல்லிவிட்டேன்...

Comments

வாழ்க ஆன்சைட் வாழ்க்கை!
இது எல்லாம் ஒரு கதை, வினையூக்கியோட பண்றது எல்லாம் ஓவர். அவர் கேட்டாரு, கதை எழுதறதையே விட்டுருவாரு
அருமையான பின்நவீனத்துவ புனைவு
:)
வால்பையன் said...

அருமையான பின்நவீனத்துவ புனைவு
:)

அப்படின்னா என்னங்க..
வினையூக்கி யின் இட்லிகடை உங்கள்
கண்ணில் படவில்லையா?
அல்லது கடைக்குள் விட மறுக்கின்றாரா?
//குடுகுடுப்பை said...
வால்பையன் said...

அருமையான பின்நவீனத்துவ புனைவு
:)

அப்படின்னா என்னங்க..//


எழுதியவரை தான் கேக்கனும்
ம்ம்.. நல்ல அனுபவம் தான். கலக்குங்க.. சுவீடீஷ் மக்கள் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்கள். ஆங்கிலம் பேசும் சுவிடீஷ் மக்கள் உதவி என அணுகும்போது நல்லவிதத்தில் உதவுவார்கள்.
@சிவஞானம்ஜி,
நானே இங்கே இட்லிக்கடை தேடிட்டு இருக்கேன்.. :))
Unknown said…
ஏன் நாங்க கதை எயுதக்கூடாதா ? வால் பையன் கண்டுபிடிச்ச பின்னவீனத்துவம் கூடவா தெரியல ?
Unknown said…
வால், வாட் எ கண்டுபிடிப்பு ??
Unknown said…
குடுகுடுப்பை, நீங்க எழுதியிருக்க குளியல், ஆயி போறது போன்றவை கூட பின்னாவீனத்துவம் தான்...
Unknown said…
சிவஞானம்ஜி அய்யா...

வினையூக்கியின் கடை எந்த தெருவில் இருக்கிறது என்று தெரியவில்லை..

::)))))
Unknown said…
வினையூக்கி...

பேசாம நாம இட்லி ப்ரம் இண்டியான்னு கொம்பேனி ஆரம்பிச்சுடலாம்னு நினைக்குறேன்...
”இந்த பஸ் எங்கிட்டுப் போவுது?”ங்கறதை ஸ்வீடிஷ்ல படிச்சிட்டுப் போயி கேக்கவேண்டியதுதானே? என்னய்யா இது நிலாவுக்குப் போனாலும் அங்கிட்டும் இட்லிக்கடை தேடுவீங்க போலருக்கே! ஓ.. Planet of Apes படத்தையே “அப்பம் கிடைக்கும் கிரகம்”னு நெனச்சுட்டுப் பாக்கப் போற கோஷ்டியாச்சே நாம! :-))

'பாவிப் பய சொல்றது ஒண்ணும் வௌங்கலியே - யாரு பெத்த புள்ளயோ - உதவி செய்ய முடியலையே”ன்னு அந்த ஸ்வீடிஷ் பெண்ணைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கிய செந்தழல் ஒழிக!

அப்றம் இதுக்கு எதுக்கு அவ்ளோ தூரம். இங்கிட்டு லாரில வந்து இறங்கற எச்ஒன்பி பசங்க சிலபேரு பேசற இங்கிலீஷ் எனக்கே புரியலை. எல்லாத்துக்கும் விவேக் ஒரு படத்துல வர்ற மாதிரி ஒரு “லு” விகுதியைச் சேத்துத்தான் ஆங்கிலத்தையும் பேசுறாய்ங்க. அவிய்ங்க அமெரிக்கன்கிட்ட எடுக்கற மொத இண்ட்டர்வ்யூவை காதாரக் கேட்டீங்கன்னா நீங்கள்ளாம் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணும்! :-))
அடப்பாவி மகனே..

சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டியா நீயி..?

போனவுடனே இட்லி கடையைத் தேடுற பாரு நீதான் கண்ணு அசல் தமிழன்..

ஏதோ லைப்ரரிக்கு போனோம். ஸ்வீடன் வரலாற்றைப் படிச்சோம். அதைப் பத்தி எழுதுவோம்.. நாலு இடத்துக்குப் போனோம். போட்டோ புடிச்சோம். போடுவோம்னு இல்லாம இட்லி கேக்குதா இட்லி..

திருந்தவே மாட்டீங்கடா..
ஆதவன் said…
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
இட்லி எங்கு கிடைக்கும் என்று அந்த ஸ்வீடிஷ் பெண்ணிடமே கேட்டிருக்கலாமே? [கொஞ்சம் சைகை மொழியில் பேச வேண்டியிருந்திருக்கும்!] இட்லி என்ன, பரோட்டா எங்கு கிடைக்கும் என்று கூட சொல்லியிருப்பார்.

இங்கு அலுவலகத்தில் எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். நீங்களும் அந்த ஸ்வீடிஷ் பெண்ணும் பேசியதை ரொம்பவே லயித்துப் படித்து விட்டேன் போலிருக்கிறது!

சுபமூகா
Anonymous said…
என்னுடன் இன்னும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என நான் அறிந்து கொள்ளலாமா.........?
Joe said…
செந்தழல் காமக்கதைகள் எழுத ஆரம்பிச்சிட்டாரோ-நு நெனெச்சு உள்ள வந்தா, அடடடா... நாராயண இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா!

சார், நீங்க எந்த இட்லியை தேடுறீங்க? ;-)
Unknown said…
///என்னுடன் இன்னும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என நான் அறிந்து கொள்ளலாமா.........?///

போன்ல கூப்டேனே ? ஸ்கைப் மூலமா ? மறுபடி அழைக்கிறேன்...
Unknown said…
வெள்ளையா வட்டமா இருக்குமே அதாங்க !!!
செந்தழல் ரவி said...

குடுகுடுப்பை, நீங்க எழுதியிருக்க குளியல், ஆயி போறது போன்றவை கூட பின்னாவீனத்துவம் தான்..//

குளியல் எழுதிருக்கேன். இன்னொன்னு உங்க கண்டுபிடிப்பா?
//ஆயி போறது போன்றவை கூட பின்னாவீனத்துவம் தான்.//

அது பின்னாடித்துவம்
இட்லிவடையத் திட்டினா இட்லி வடை கெடைக்காது, தெரியுமா?

Popular Posts