இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவத் தாக்குதலின் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இஸ்ரேல் தனது விமானத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காஸா: காஸா நகர் மீது இஸ்ரேல் போர் வி்மானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று நடந்த தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் அலுவலகங்களையும், பிற இலக்குகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதால் காஸா நகரமே சின்னாபின்னமாகியுள்ளது.
கடந்த பல வருடங்களில் நடந்துள்ள மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
புதிய தாக்குதலில், காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான ஐந்து கட்டடங்களை இஸ்ரேல் விமானப்படையினர் குறி வைத்துத் தாக்கி தகர்த்தனர்.
இதுகுறித்து காஸா நகர ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு தலைவர் முவையா ஹஸனீன் கூறுகையில், பல பாதுகாப்பாளர்கள், பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்புக்குச் சொந்தமான ஒரு விளையாட்டு மையம், இரண்டு பயிற்சி முகாம்கள் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டன என்றார்.
இதுவரை நடந்த தாக்குதல்களில் 345 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காஸா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 62 பேர் அப்பாவி பொதுமக்கள் என ஐ.நா. தகவல் ஒன்று கூறுகிறது.
காஸாவுக்கும், இஸ்ரேலின் அஸ்தாத் என்ற நகருக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலி்ல ஒரு இஸ்ரேல் வீரர் கொல்லப்பட்டார். இதையடுத்தே தனது தாக்குதலை மீண்டும் தொடர்ந்துள்ளது இஸ்ரேல்.
ராணுவம் இறங்குகிறது:
மேலும், இதுவரை வான் ரீதியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், அடுத்து ராணுவத்தை உள்ளே அனுப்பி தாக்குதல் நடத்தவும் தீர்மானித்துள்ளது. இதனால் காஸா நகரம் மேலும் மோசமான நிலையை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
இன்று நடந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரது இல்லமும் குறி வைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை என்பதால் உயிர் தப்பினார்.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ், கடந்த 2007ம் ஆண்டு காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸுக்கு விசுவாசமான பாதா படைகளை விரட்டியடித்தது.
அது முதல், இஸ்ரேலிய படைகள் மீது அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது ஹமாஸ். இதையடுத்து பதிலடியாக இஸ்ரேலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல்.
நான்கு நாட்களாக நடந்து வரும் சண்டையில் இஸ்ரேல் தரப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியா கண்டனம்
இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவத் தாக்குதலின் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இஸ்ரேல் தனது விமானத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
33 comments:
அண்ணாத்த எனக்கு ஒரு சிறு சந்தேகம்,
அமெரிக்கா ஈராக் மேல குண்டு போடும் போது ஏன் இந்தியா பொத்திகிட்டு இருந்துச்சு?
மூண்றாம் உலக போர் ஆரம்பிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை போலிருக்கே!
உங்களுகென்ன இந்த வயசிலேயே உலக நாடுகள் எல்லாத்தையும் பாத்துடிங்க
போர் ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சிட்டா 10 ஃபுல்லு வாங்கி வீட்டுகுள்ள கதவ சாத்திகிட்டு உட்கார்ந்துடுவேன்
ஏன் இலங்கைன்னு ஒரு நாடு இருக்கே உங்களுக்கு தெரியலையா வால்ஸ் ?
///மூண்றாம் உலக போர்
ஆரம்பிக்கும் நாள் வெகு தூரத்தில்
இல்லை போலிருக்கே!///
ஏற்கனவே ஆரம்பிச்சிருச்சு
//உங்களுகென்ன இந்த வயசிலேயே உலக நாடுகள் எல்லாத்தையும் பாத்துடிங்க//
போர்வைக்குள்ள இருந்து என்னத்தை பார்க்க ? மைனஸ்ல போவுது குளிரு
///போர் ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சிட்டா 10 ஃபுல்லு வாங்கி வீட்டுகுள்ள கதவ சாத்திகிட்டு உட்கார்ந்துடுவேன்///
யோவ் வாட்டர் பாக்கெட்டு ? ஆம்லெட்டு முட்டை ?
//ஏன் இலங்கைன்னு ஒரு நாடு இருக்கே உங்களுக்கு தெரியலையா வால்ஸ் ?//
அங்க நின்னா தான் இவனுகளுக்கு அரசியல் பண்ண முடியாதே!
/யோவ் வாட்டர் பாக்கெட்டு ? ஆம்லெட்டு முட்டை ?//
ஆத்து தண்ணி தான்,
எங்க வீட்ல எப்பவுமே ஒரு ஊறுகாய் பாட்டில் இருக்கும்
லெமனா ? மாங்காயா ?
சரக்குக்கு தொட்டுக்க முந்திரி பருப்பு இலவசமா ஆனந்த விகடனோ குமுதமோ கொடுத்த நல்லாருக்கும்...
///அங்க நின்னா தான் இவனுகளுக்கு அரசியல் பண்ண முடியாதே!///
ஏன் பக்கத்துல இருக்க பர்மால ? இவ்வளவு நாளா ஆங் சான் சூ கிய வீட்டுக்காவல்ல வெச்சிருக்கானுங்களே ? அதை பற்றி மூச்சு உடக்கானமே ?
//
சரக்குக்கு தொட்டுக்க முந்திரி பருப்பு இலவசமா ஆனந்த விகடனோ குமுதமோ கொடுத்த நல்லாருக்கும்... //
இந்த தடவை கடலூர் போகும் பொழுது பண்ருட்டியில் ஒரு கிலோ முந்திரி வாங்கும் ஐடியா இருக்கு!
ஆனந்தவிகடன்ல இதெல்லாம் கேட்டா டவுசர அவுத்துருவாங்க!
(ஊறுகாய்=மிக்சர்)
//ஏன் பக்கத்துல இருக்க பர்மால ? இவ்வளவு நாளா ஆங் சான் சூ கிய வீட்டுக்காவல்ல வெச்சிருக்கானுங்களே ? அதை பற்றி மூச்சு உடக்கானமே ? //
அப்போ இறையாண்மை கற்போட இருந்திருக்கும்!
இப்போ என்னாச்சுன்னு தெரியலையே
அதெப்படிங்க கொஞ்சம் கூட கூச்சமெ இல்லாம இந்தியா எப்படி சொல்லுது... கீழ ஒரு நாட்டுக்கு ஆயுதம் குடுத்து அடிங்கடா நாங்க துணையா இருக்கோம்னு சொல்லுது, மேல வேண்டாம் சண்டையால ஏதும் பண்ண முடியாது வேண்டாம் அப்டின்னும் சொல்லுது... என்னமோ போங்க!!!
மேனே! இஞ்சே பாருடா!
பக்கத்து நாட்டில நம்ப பசலுகளை யெல்லாம் குண்டு மழையா போட்டு கொண்டு கிட்டிருக்கான் சிங்களவன் அதைக் கேட்க நாதியில்லை!
துப்புக் கெட்ட பசங்க!பூச்சாண்டி காட்டுறாங்கோ
///இந்த தடவை கடலூர் போகும் பொழுது பண்ருட்டியில் ஒரு கிலோ முந்திரி வாங்கும் ஐடியா இருக்கு!//
நான் அரைகிலோ வாங்கினேன்...
கொஞ்சம் அழுக்காக இருக்கும் முந்திரியை முதலில் கொடுப்பாங்க...
அதெல்லாம் வேண்டாம், நல்ல குவாலிட்டி கொடு என்று அழுத்தி கேட்டால் உள்ளே இருந்து எடுத்து தருவானுங்க...
விலை அதே விலை...
அரை கிலோ நான் 100 ரூபாய்க்கு வாங்கினேன்...
என் வீட்டில் வேலை செய்யும் அம்மா இந்த நேரம் சாப்பிடிருப்பார்...
:))))
///அதெப்படிங்க கொஞ்சம் கூட கூச்சமெ இல்லாம இந்தியா எப்படி சொல்லுது... கீழ ஒரு நாட்டுக்கு ஆயுதம் குடுத்து அடிங்கடா நாங்க துணையா இருக்கோம்னு சொல்லுது, மேல வேண்டாம் சண்டையால ஏதும் பண்ண முடியாது வேண்டாம் அப்டின்னும் சொல்லுது... என்னமோ போங்க!!!
Tuesday, December 30, 2008
///
லெப்ட்ல வேற மாதிரியும், ரைட்ல வேற மாதிரியும் சொல்லும்
முகர்ஜி, சோனியாஜி, சிங்ஜி, அனைவரும் இஸ்ரேலின் விமானத்தாக்குதலைக் கண்டித்திருப்பதை எண்ணி கருணைக் கண்ணீர் வடிக்கின்றேன்.
ஆனா,
செஞ்சோலை என்னும் தாய் தந்தைகளை இழந்த குழந்தைகள் காப்பகத்தில் குண்டு வீசீ 70 குழந்தைகள்
கொல்லப்பட்ட போது இந்த காங்கிரஸ்ஜீக்களை நினைத்து மகாத்மா காந்தி இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்.
புள்ளிராஜா
//இந்த காங்கிரஸ்ஜீக்களை நினைத்து மகாத்மா காந்தி இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்//
எந்த மகாத்மா? பகத்சிங்கை தூக்குல சீக்கிரமா போட சொன்னாரே அந்த ம-கா-த்-து-மா-வா??????????????????
PulliRaj: In Chenchozhai...Orpahn kids weren't killed..the kids who were killed were "brought in for first aid course without parents' permissions" ;)
Pulliraajaa said...
முகர்ஜி, சோனியாஜி, சிங்ஜி, அனைவரும் இஸ்ரேலின் விமானத்தாக்குதலைக் கண்டித்திருப்பதை எண்ணி கருணைக் கண்ணீர் வடிக்கின்றேன்.
ஆனா,
செஞ்சோலை என்னும் தாய் தந்தைகளை இழந்த குழந்தைகள் காப்பகத்தில் குண்டு வீசீ 70 குழந்தைகள்
கொல்லப்பட்ட போது இந்த காங்கிரஸ்ஜீக்களை நினைத்து மகாத்மா காந்தி இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்.
புள்ளிராஜா//
ஆமாங்க.. இந்த கண்டனம் மைனாரிட்டி ஓட்டு கண்டனம்.மத்தபடி ஒன்னும் கெடயாது.
இது கண்டனத்துக்குரியது, குழந்தைகளும் பெண்களும் பலியாகியிருக்கிறார்கள்.
ஹமாஸ் தரப்பிலும் தவறு உள்ளது. ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணம். பார்க்கலாம்...
சில இந்தியத் தலைவர்களின் ஓட்டுப் பசியினால் 100 கோடி மக்கள் வாழும் நாட்டிற்கு இருக்கவேண்டிய கம்பீரமும், பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் போய்விடுகின்றது.
நான் இந்த ஆன்டில் 500 1000 கிலோ எடையுள்ள 6000 குண்டுகளை வன்னியில் போட்டிருக்கின்றேன் என இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கூறியபோது இந்தியா எதுவும் செய்ய முன்வரவில்லை.
அதையும் விட்டுவிடுவோம்.
ஆனா, தமிழக மீனவர்கள் 300 பேர் வரை இலங்கைக் கடற்படை சுட்டபோதும் வெறும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறிய தலைவர்களை நினைக்கும்போது என்ன உணர்வு தோன்றுகின்றது?
சோமாலியக் கடத்தல்காரனை அடிக்க கப்பல் அனுப்பும் இந்தியா தனக்கு ஓட்டுப் போட்ட ஒரு மீனவனைக்
காப்பாற்றக் கப்பல் அனுப்பாத இந்தியா,
பாலஸ்தீனர்களுக்காக............இவர்கள்..... வேடிக்கை மாந்தர்கள்.
புள்ளிராஜா
///PulliRaj: In Chenchozhai...Orpahn kids weren't killed..the kids who were killed were "brought in for first aid course without parents' permissions" ;)///
அட வெத்துவேட்டு அரவேக்காட்டு முண்டம்...
செத்தது கொழந்தைங்க...
இந்த மாதிரி பொய் பரப்புரைகளை எல்லாம் எங்க படிச்சுட்டு வந்தீங்களோ...
சாவுல அரசியல்பண்ண வந்துட்டான்...
தூ நாதாரி ஓடிப்போயிரு...
////எந்த மகாத்மா? பகத்சிங்கை தூக்குல சீக்கிரமா போட சொன்னாரே அந்த ம-கா-த்-து-மா-வா??????????????????///
நேதாஜியை ஒப்படைக்கிறேன்னு கையெழுத்து போட்ட அதே மகாத்மாதான்...
அந்த மனுசன் ரஷ்யாவுல எட்டு வருஷம் சைபீரிய ஜெயில்ல அடியும் உதையும் வாங்கிட்டு, கொஞ்ச நாள் இமயமலைப்பக்கம் சுத்திட்டு, அப்புறம் 1985 வரைக்கும் முகத்தை மறைச்சு இந்தியாவிலேயே வாழ்ந்து செத்தாரு...
இந்த காங்கிரஸ்காரவுங்க பதவிக்காக அவர் உயிரோட வாழ்ந்ததை கூட ஊருக்கு சொல்லாம சாவடிச்சானுங்க...
///இது கண்டனத்துக்குரியது, குழந்தைகளும் பெண்களும் பலியாகியிருக்கிறார்கள்.
ஹமாஸ் தரப்பிலும் தவறு உள்ளது. ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணம். பார்க்கலாம்...//
கண்டிப்பா எழுதுங்க...
ஆனா ஹமாஸ் கொஞ்சம் பொத்திக்கிட்ட்டு இருந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்...
அரச படைகளை காசாவில் இருந்து துரத்திட்டு ஒரு நாளைக்கு ரெண்டு ராக்கெட் வீதம் இஸ்ரேலை நோக்கி உட்டுகினிருந்தானுங்க
புள்ளிராஜா நல்லா கேட்டீங்க...
ஆனால் அஸ் எ இண்டியன் நான் இதை எதையும் கேக்குறதா இல்லை...
எனக்கு இந்திய இறையாண்மை தான் முக்கியம்...
முதலில் நான் இந்தின், அப்புறம் தமிழன், அப்புறம் மனிதன்...அப்புறம் ஆட்டுக்குட்டி
"முதலில் நான் இந்தின், அப்புறம் தமிழன், அப்புறம் மனிதன்...அப்புறம் ஆட்டுக்குட்டி"
செந்தழலாரே! வம்பு வேண்டாமப்பா!
ஆட்டுக்குட்டி தமிழில் கத்தினா கசாப்புக்கடைக்கு அனுபிடுவாங்க.
இந்தியல கத்தினா ஆச்சிரமத்திற்கு அனுப்புவாங்க.
புள்ளிராஜா
ஆட்டுக்குட்டிக்கு அப்புறம் ஆட்டுப்புழுக்கை அல்லது காங்கிரஸ்காரனா..
//சரக்குக்கு தொட்டுக்க முந்திரி பருப்பு இலவசமா ஆனந்த விகடனோ குமுதமோ கொடுத்த நல்லாருக்கும்...//
சரக்கே குடுத்தா நல்லாருக்கும்..ஹூம் நம்ம கஷ்டம் எங்க இவனுங்களுக்கு தெறியுது!!!!!!!
//அந்த மனுசன் ரஷ்யாவுல எட்டு வருஷம் சைபீரிய ஜெயில்ல அடியும் உதையும் வாங்கிட்டு, கொஞ்ச நாள் இமயமலைப்பக்கம் சுத்திட்டு, அப்புறம் 1985 வரைக்கும் முகத்தை மறைச்சு இந்தியாவிலேயே வாழ்ந்து செத்தாரு...//
இந்த மேட்டர் புதுசா இருக்கே????
மேலதிக விவரம் கிடைக்குமா???
http://tvpravi.blogspot.com/2006/05/blog-post_18.html
இந்த மேட்டர் எழுதும்போது எனக்கு முழுமையாக விவரங்கள் தெரியாது...
தனிமடல் அல்லது புதிய போஸ்ட் தான் போடனும்....
Post a Comment