அய்ரோப்பாவில் வசிப்பவர்களுக்கு கெட்ட நேரம்

அய்ரோப்பாவில்..அதாவது சுவீடன், நார்வே, பின்லேண்ட், பிரான்ஸ், யேர்மனி போன்ற நாடுகளில் செறிவாக வாழும் தமிழர்களுக்கு கெட்டகாலம்...

சனி வந்து உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறது...

நேரடியாக விஷயத்தை சொல்வது என்றால்...

இணைய ரவுடி, கம்புயூட்டர் போலீசு, அழுகாச்சி ஆறுமுகம், எதிர் கருத்து ஏகாம்பரம், தான் பின்னவீனத்துவவாதி என்று தனக்கே தெரியாத (நன்றி : லக்கி) பின்னவீனத்துவவாதி, உருப்புடாத கோயில்ல உண்ட சோறு வாங்கி திண்ற மடப்பய மருமவன் ( அட எவ்ளோ பெரிய செண்டண்ஸ்) செந்தழல் ரவி அங்கே வருகிறேன்...

சுவீடனில் விணையூக்கி, லண்டனில் சின்னக்குட்டி, பிரான்ஸில் யோகன் பாரீஸ், அப்புறம் மலைநாடன், திரு, யேர்மணியில எங்க தமிழ்நாடு டாக் தந்த தங்கம் ( தமிழ் போக்கிரி நான் அல்ல), அப்புறம் ஏராளமான பெண் ரசிகைகள் என பலரை சந்திக்க ஆசை...

பிரான்ஸில் தமிழச்சியையும் சந்திக்க அப்பாயிண்மெண்ட் கேட்கவேண்டும்...!!! (சோபா சக்தியின் கிழிந்த டவுசரை தைக்க ஒரு ஊசியும் கொண்டு போகிறேன் ஹி ஹி)

கருத்து கந்தசாமி ரசிகர்கள் எந்த திசையில் இருக்கிறீர்கள் என்று முன் கூட்டியே சொல்லிவிட்டால் அந்த பக்கம் என் மூச்சு காற்று படுவதை தவிர்க்கிறேன்...

என்னுடைய மொபைல் போன் எண் இதே பதிவில் அப்டேட் செய்கிறேன்...

தொலைபேசி மொக்கையர்கள் பிங் செய்யலாம்...

மற்றபடி உங்கள் தொலைபேசி எண் தரும் விருப்பம் இருந்தால் இந்த பதிவில் பின்னூட்டமாக இடவும்...

இந்த பதிவில் மட்டுறுத்தல் உள்ளது, அதனால் ரகசியம் காக்கப்படும்...

பை பை சீ யூ !!!

Comments

தமிழ்னாடுடாக் தந்த தங்கத்தினுடைய தங்கத்தின் நெஞ்சை உருக்கும் பாடல் கேட்டிங்களா...
anna apdiye portugalkum oru yettu vanthu poonga..

arivumani
இளைய குத்தூசியின் பயணம் சிறக்க வாழ்த்துகள்!
வாங்க வாங்க...
நம்மட சயந்தன் அப்புவும் அங்கால் பக்கமாதான் இருக்க வேணும் ஒருக்கா விசாரிச்சுப் பாருங்கோ
ஏற்கனவே ஒரு மின்னஞ்சல் போட்டுள்ளேன்.
பயணம் நன்கு அமைந்ததென நினைக்கிறேன்.
தம்பி வினையூக்கியைத் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் புதிய தொலைபேசி இலக்கம்
தரவும்.
உங்கள் அழைப்பை எதிர்பார்க்கிறேன்.
//இணைய ரவுடி, கம்புயூட்டர் போலீசு, அழுகாச்சி ஆறுமுகம், எதிர் கருத்து ஏகாம்பரம்
//
ஏய் மாம்ஸ் இதில் 2 பெயர் எனக்கும் பொறுந்துதே...


//கருத்து கந்தசாமி ரசிகர்கள் எந்த திசையில் இருக்கிறீர்கள் என்று முன் கூட்டியே சொல்லிவிட்டால் அந்த பக்கம் என் மூச்சு காற்று படுவதை தவிர்க்கிறேன்...
//
ரசிகர்கள்.... அதான் ரசிகர்கள்னு சொல்லிட்டியே, ரசிகர்களுக்கு என்னை அது இருந்திருக்கு... படும் போது தானே தெரிஞ்சிப்பாங்கோ மாம்ஸ்.... அட இதை சொல்ல நான் யாரா? பட்டு தெரிஞ்சிக்கிட்டவன் தான்....

----------------

ஐரோப்பிய கண்டம் மொக்கையாயிடும் அப்போ....
வாழ்த்துக்கள்
வரும்போது நல்ல ஃபாரின் சரக்கா வாங்கிட்டு வாங்க!

:)
sathiri said…
அப்பிடியே எங்கவீட்டுக்கதவையும் தட்டி சனிப்பெயர்ச்சி எப்பிடி என்று சொல்லிட்டு போங்கோ. உங்கள் தொ. பே இலக்கத்தை அனுப்பி விடவும்.
அதாவது சுவீடன், நார்வே, பின்லேண்ட், பிரான்ஸ், யேர்மனி//

ஐரோப்பாவில் மாபெரும் வலைப்பதிவர் மாநாடா....
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ரவி..
manjoorraja said…
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
appadiye ingeyum oru ettu vanthuttu pogavum.
Unknown said…
வணக்கம் ரவி,
எப்ப வர்றீங்க, எப்படி வர்றீங்கனு சொல்லிட்டா எங்களுக்கும் வசதியாக இருக்கும். குறிப்பா france வரும் தேதி சொல்லவும்.

அன்புடன்
கரிகாலன்
Anonymous said…
யப்பா ஜெர்மனி தாங்காது ராசா........
எப்ப வருவதாக நோக்கம். அதை சரியாகச் சொன்னால் நான் ஜேர்மனியிலிருந்து எஸ்கேப்பாக சௌகரியமாக இருக்கும்.

மவனே இங்க வந்து ஒழுங்கா இருக்கனும் ஆமா.....

சகல வகை பாட்டில்களும் மிக மலிவாக இருக்கும் ஜேர்மனி என்ன பாவம் செய்ததோ....?

இவண்
தமிழ்நாடுடாக் தங்கம்.
(தொடர்புகளுக்கு தமிழ்போக்கிரியை நாடவும்)

வசந்த் கதிரவன் தமிழ்நாடுடாக் தங்கத்தினுடைய தங்கத்தின் பாடலை எங்கு கேட்டீர்கள். காமெண்டுக்கு நன்றிகள்.
தலைப்பாத்திட்டு பயந்து போனேன். யேர்மனி உங்களை வரவேற்கிறது வாருங்கள். ஆனால் அஞ்சலா மேயாகலை சந்திக்கிறது சிரமம்.

சாந்தி
Unknown said…
ஒரு புள்ளயும் தொலைபேசி எண்ணை கொடுக்கலை பாருங்க...

நான் அவ்ளோ நல்லவனா ?
rapp said…
எப்போ சார் வரீங்க?இந்த வருஷமா?

Popular Posts