வாழ்க வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்...!!!! வ.வா சங்கம் ஒழிக..ஏன் இப்படி ஒரு பதிவு என்கிறீர்களா ? இது காலத்தின் கட்டாயம்...!!!!

அந்த குழந்தை முகத்தை பாருங்கடே !!! அந்த பரந்த நெஞ்சை பாருங்கடே !!! அந்த ஸ்டைலை பாருங்கடே !!! அந்த வாக்கை பாருங்கடே !!! அந்த டாக்கை கேளுங்கடே !!!!இன்னுமா வருத்தப்படாத வாலிபர் சங்கம் அது இதுன்னு டைமை வேஸ் பண்ணுவீங்க ? வெறும் காமெடியனுக்கு போய் சங்கம் அது இதுன்னு ?பாருங்கடா...எங்க தல ஒரு ஹீரோடா...(என்ன தலன்ன அது அசீத்து மட்டும்தானா ? எங்க தல ரஜினி கமலுக்கே சவால் உட்டவருடா...அஜித் ஒரு சுண்டக்கா)...அந்த துப்பாக்கிய புடிச்சிருக்க ஸ்டைலை பாருங்கடே...அமெரிக்க சி.ஐ.ஏக்கிட்ட ப்ராக்டீஸ் எடுத்த ஜேமுசு பாண்டு புடிப்பானா அப்படி துப்பாக்கிய ? ஒரு ஸ்டில்ல காட்டுங்க...எதோ நேரா புடிச்சு சுடுவான்..இப்படி தில்லா துப்பாக்கியை சைடு வாட்டத்துல வெச்சுக்கினு நீக்க முடியுமாடே ?சின்னி ஜெயந்து ஒரு காமெடியன்...அவனை சரிக்கு சமமா உக்கார வெச்சுருக்கார் பாருடா எங்க தல..என்ன தான் மூஞ்சு க்வாட்டர் அடிச்ச குரங்கு மாதிரி இருந்தாலும் சின்னி ஜெயந்த விட எங்க தல அழகுடா...போட்டோவ பாத்து நீயே தெரிஞ்சுக்கடா..எங்க தல புகழ் பாடுடா...இந்த படத்த பாருங்கடே !!! என்ன குழப்பமா இருக்கா ? சிம்பு நயந்தாராவுக்கும் எங்க தலைக்கும் என்ன சம்பந்தம்னு ? அட இந்த போட்டோவை எடுத்ததே எங்க சிங்கம் ஜே கே ரித்திஷ்தாண்டா....( சனியன் கூகிள் சர்ச்சு இப்படி ஏன் குழப்புது )ஆடுங்கடா தலய சுத்தி, இவன் அய்யனாரு பட்டாக்கத்தி !!! கூலிங் க்ளாஸ் எல்லாம் ஆந்திரா ஹீரோஸ் தான் போடுவாங்களாம்...என்ன அந்த ஸ்டைலு அவனுங்களுக்கு எழுதி கொடுத்தாச்சா ? இந்த ஒரே ஸ்டில்லுல எல்லாத்தையும் ஒடைச்சு போட்டுட்டாருடா எங்க தல...எவண்டா அவன்...என் தலைய பார்த்து கரடின்னு சொன்னது ? ஒரு ஷேவிங்கு ரெண்டாயிரம் செலவு பண்றம்டா...உண்மையான கரடி படம் போட்டிருக்கேன்...பார்த்துக்கோங்க...கடைசியா எங்க தலையோட கொசுறு படம் இந்தாங்க...எங்க தலையை கிண்டல் செய்யும் நான் ஆதவன், மற்றும் வ.வா சங்கத்து ஆளுக்க எல்லாம் பின்னங்கால் முன்னால் இருக்கவன் பிடறியில் அடிக்க ஓடுங்க..!!! இதுக்கு மேலயும் எங்க தலையை கிண்டல் அடிப்பீங்க ?

சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் : சங்கத்தின் சுவீடன் கிளை கொள்கை பரப்பு செயலாளர் பதவியை சத்தம் போடாமல் எனக்கு வழங்கவேண்டும்...கொஞ்சம் அசந்தால் வினையூக்கி அந்த பட்டத்தை பறிக்கும் வாய்ப்பு உண்டு...தாமிரா வேற ரெக்கமண்டு பண்ணியிருகார்..எனக்கு ராப்பை தெரியும்..எனக்கு கார்க்கியை தெரியும்...எதாவது பார்த்து செய்யுங்கடே..

Comments

கலக்கிட்டிங்க!!!
பாதுகாப்பு கருதி எங்க தல கைப்புள்ளையும் இந்த சங்கத்துல வந்து சேர்ந்துட்டாருன்னு வதந்தி கெளம்பி இருக்கு! ஆனா நம்பிடாதீங்கடே!

:))
உங்களுக்கான தகுந்த பதிவியை வழங்க வேண்டுமென நான் முன் மொழிகிறேன்
//எனக்கு ராப்பை தெரியும்..எனக்கு கார்க்கியை தெரியும்..//

இதென்ன சுண்டைக்கா
எனக்கு தல ஜே.கே.ஆரையே தெரியும்
(ஆனா அவருக்கு தான் என்னை தெரியாது)
//பின்னங்கால் முன்னால் இருக்கவன் பிடறியில் அடிக்க ஓடுங்க.//

இது என்ன பின்நவீனத்துவ கவிதையா!

மரபுகள் கட்டுடைக்கபட்டுள்ளதே!
நன்றி சினிமா ரசிகன்...!!!
///பாதுகாப்பு கருதி எங்க தல கைப்புள்ளையும் இந்த சங்கத்துல வந்து சேர்ந்துட்டாருன்னு வதந்தி கெளம்பி இருக்கு! ஆனா நம்பிடாதீங்கடே!///

கைப்புள்ள வந்தாலும் சேர்த்துக்குவம்...அதான் எங்க கம்பேனியோட பண்பு...
தமிழ்ஷ் இல் இந்த பதிவை வேல்டு நியூஸ் என்று வகைப்படுத்தியுள்ளேன்...
//தமிழ்ஷ் இல் இந்த பதிவை வேல்டு நியூஸ் என்று வகைப்படுத்தியுள்ளேன்... //

மன்றத்துகுள்ள வந்தவுடன் அதற்க்கான தகுதியும் வளர்ந்து விட்டது பாருங்கள்.

அகிலாண்ட நாயகன் புகழ் எட்டு திக்கும் பரவட்டும்
நன்றி வால்பையன்...எதாவது பாத்து போட்டு குடுக்கசொல்லுங்க...
///இதென்ன சுண்டைக்கா
எனக்கு தல ஜே.கே.ஆரையே தெரியும்
(ஆனா அவருக்கு தான் என்னை தெரியாது)

Wednesday, December
//

வால் பையன் நான் ராஜீவ் காந்திக்கே டாட்டா காட்டினவன்...
SP.VR. SUBBIAH said…
என்ன சாமிகளா ஒரே சத்தமா இருக்கு?
கொஞ்ச நேரம் தூங்க விடுங்கையா!

எதை வேணும்னாலும் ஆரம்பிங்க!
அல்லது எதை வேணும்னாலும் க்ளோஸ் பண்ணுங்க!

உங்களைக் கேக்கிறதுக்கு யாரு இருக்கா?

நாமக்கல் சிபியை மட்டும் ஆட்டத்தில சேர்த்துக்காதீங்க கண்ணுங்களா!
உமக்குத் தகுதி இருப்பதாலேயே நாம் ரெகமென்ட் செய்தோம். இருப்பினும் இது போன்ற புகழ் பரப்பும் பதிவுகளை முன்னமே நீர் செய்திருப்பீர் ஆயின் பதவி உங்களைத் தேடி வந்திருக்கும். வாழ்க JKR.!
வாழ்க JKR.!
வாழ்க வாத்தியார்.

வீழ்க நாமக்கல் சிபி.
வீழ்க வ.வா.சங்கம்...!!!
//என்ன தான் மூஞ்சு க்வாட்டர் அடிச்ச குரங்கு மாதிரி இருந்தாலும் சின்னி ஜெயந்த விட எங்க தல அழகுடா...//

ஆமா, இல்லையா பின்ன....
கலக்கல் பதிவு
PoornimaSaran said…
//செந்தழல் ரவி said...
நன்றி வால்பையன்...எதாவது பாத்து போட்டு குடுக்கசொல்லுங்க...

//

:)))))))))))))))))))))
அப்படியே வருங்கால முதல்வர் கருங்காலிகள் ஒழிகன்னு சொல்லி எங்களுக்கு ஒரு விளம்பரம் கொடுத்திருக்கலாம்.

(advt)
ரவி,
தலயோட ஆர்குட் குழுமத்துல இருக்கீங்களா? அது ஒரு முக்கியமான தகுதி.. ஆண்டாண்டு காலமா அதுல இருக்குற எனக்கே இன்னமும் பகுதியில எந்த போஸ்டும் குடுக்காம இருக்காங்க :(( நீங்க என்னடான்னா...
சூரச் சேனாதிபதி ஆர்.கே. மன்றத்துல பல போஸ்ட் காலியா கீது...
எனிபடி?????
நீங்களும் இந்த பதிவோட தலைப்பை க்ளிக்கினால் சங்கத்தில் போய் முடியும்...

நீங்கள் உடனே க்ளிக் செய்து சேரவும்...பாரீசில் இருக்கும் எங்கள் தங்கத்தலைவி ராப் உங்களுக்கும் ஏதாவது போஸ்டிங் பார்த்து போட்டு குடுப்பாங்க...

ஐடி லே.ஆப் பிரிவு அப்படின்னு ஏதாவது ஆரம்பிக்கற எண்ணம் இருக்கா ?
பொது மக்களுக்கு எந்த சேவையும் செய்யாத விஜய் எல்லாம் இந்த பதவ்இக்கு ஆசைப்படும்போது, ஆட்டோக்காரர்கள் உட்பட பலருக்கும் அள்ளி அள்ளி கொடுத்த எங்க தலை 2016ல முதல்வர் ஆனா என்ன தப்பு ?
கபீஷ் said…
புலி கொலை பட்டினியிருந்தாலும் புல்லு சாப்பிடலாமா?
கபீஷ் said…
பாஸ்மதி அரிசியில பண்ணின கஞ்சி குடிச்சதால இப்படி ஆயிட்டிங்களா?
ஒன்னரை நாளா சொரம். பாராசெட்டம்மாலை சாப்பிட்டு சமாளிக்கறேன்...

ஆனா ஜொரம் இந்த பதிவின் படங்களை இணைக்கும்போது வரல...
கபீஷ் said…
ஓ! ஜுரமா? இப்ப சரியாயிடுச்சா?யாழினிய ரொம்ப தேடிடுச்சா?
3 ஆவது மாத்திரைல கொஞ்சம் மாதிரி.

யாழினிக்கென்ன ?

நல்ல தூக்கம் :)
ரெட்பயர்,

வொய் திஸ் ப்ளட் வெறி???? :)
அண்ணாரின் படங்களை இணையத்தில் வெளியிடுவதற்கான் (அட்ட)காப்பி ரைட் உரிமம் பெற்றுள்ளீர் தானே?
SUREஷ் said…
//இந்த போட்டோவை எடுத்ததே எங்க சிங்கம் ஜே கே ரித்திஷ்தாண்டா...//ம்ம்ம் ம்ம்ம்ம் எப்ப தல டையரக்சன்
//
ம்ம்ம் ம்ம்ம்ம் எப்ப தல டையரக்சன்
//

என்ன சுரேஸ் இப்டி கேட்டுட்டீங்க.. நாயகன் படத்த எங்க சிங்கம் மேற்பார்வையில தான் எடுத்தாங்க... சிங்கம் தான் அடக்கம் கருதி பெய்ர் வெளியிட விரும்பல..
தாமிரா வேற ரெக்கமண்டு பண்ணியிருகார்..எனக்கு ராப்பை தெரியும்..எனக்கு கார்க்கியை தெரியும்...எதாவது பார்த்து செய்யுங்கடே.
//

porulaalar already acceptance kuduthuttaaru :)
ஜேகே.. ஆகா.
நாயகன் 100வது நாள்.
நாயகன் 1000ம் நாள்
நாயகன் 10000ம் நாள்.

இன்னும்..இன்னும்..இன்னும்...
இராம். உடனே சங்கத்து சிங்கங்களுக்கு சொல்லிவிட்டு எல்லாரும் சங்கத்தை கலச்சுட்டு இங்க வந்திருங்க..

உங்களுக்கும் எதாவது பதவி போட்டு தரச்சொல்றேன்...
///அண்ணாரின் படங்களை இணையத்தில் வெளியிடுவதற்கான் (அட்ட)காப்பி ரைட் உரிமம் பெற்றுள்ளீர் தானே?///

இந்த சூரியன் நிலா கிரகம்(?) எல்லாம் எல்லாருக்கும் பொது. யாரு வேண்டுமானாலும் வெளியிடலாம்.
//ம்ம்ம் ம்ம்ம்ம் எப்ப தல டையரக்சன்//

எங்க தல அடுத்து எடுக்கப்போகும் கருமயோகி படத்தை அவரே டைரக்டு செய்வார் என்று பிலிம் நியூஸ் கோவிந்தன் சொன்னார்.
ஆளவந்தான், கம்பெனி சார்பாக வாந்தியெடுத்ததுக்கு...ச்சே பதில் அளித்ததுக்கு நன்றி...
///porulaalar already acceptance kuduthuttaaru :)///

ஆனா சங்க இணைய தளத்துல அப்டேய் இல்லையே ??
///ஜேகே.. ஆகா.
நாயகன் 100வது நாள்.
நாயகன் 1000ம் நாள்
நாயகன் 10000ம் நாள்.

இன்னும்..இன்னும்..இன்னும்...///

உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்...!!!
கபீஷ் said…
//செந்தழல் ரவி said...
///porulaalar already acceptance kuduthuttaaru :)///

ஆனா சங்க இணைய தளத்துல அப்டேய் இல்லையே ??
//
அந்த தளத்துல போய் ரிஃப்ரெஷ் பண்ணி பாத்துட்டு இருக்கீங்களா?

வ வா சங்கத்த யாராலும் அடிச்சுக்க முடியாது.
தலைப்பை வன்மையா கண்டிக்கறேன் :-)
//
ஆளவந்தான், கம்பெனி சார்பாக வாந்தியெடுத்ததுக்கு...ச்சே பதில் அளித்ததுக்கு நன்றி...
//
”கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே” இது தான் அகிலாண்ட நாயகனின் தாராக மந்த்ரா. அதனால, உங்கள் தொந்தியை மன்னிக்கவும்.. நந்தியை.. .. சே.. நன்றிய...( சங்கத்துல சேர்ந்தவுடேனே நாக்கு குழற ஆரம்பிச்சுடுது)... திருப்பி அனுப்புகிறான், அணணாரின் அன்பு தொண்டன்.
உலகம் வியக்கும் அந்த நிகழ்ச்சி கூடிய சீக்கிரம் நடக்க விருக்கிறது. அதன் பின் சங்கத்தின் மதிப்பு கூடும்..அது நடந்த பின் சங்கத்து சார்பாக வரும் முதல் பதிவில் அய்ரோப்பாவின் அமைப்பளர் பதவி உங்களுக்கு வழங்கப்படும் ..


சங்கத்தின் சார்பில்,

கார்க்கி
போர்ப்படை தளப்தி
//வால்பையன் said...
//எனக்கு ராப்பை தெரியும்..எனக்கு கார்க்கியை தெரியும்..//

இதென்ன சுண்டைக்கா
எனக்கு தல ஜே.கே.ஆரையே தெரியும்
(ஆனா அவருக்கு தான் என்னை தெரியா//

என்னை சொன்னது பரவாயில்லை.. தலைவியை கின்டல் செய்வது வருத்ததற்குரியது செயலாளரே

Popular Posts