தேடுங்க !

Wednesday, December 17, 2008

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் !!!!!

டேட்டா க்வெஸ்ட் என்பது இந்தியாவில் தொழிலதிபர்களாலும் பத்திரிகையாளர்களாலும் விரும்பி படிக்கக்கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த பத்திரிக்கை ( இந்தியா டுடேவோ அல்லது ஹிண்டுவோ அல்ல!!! )

அவர்களுடைய சர்வேக்கள் மிகவும் பிரசித்திபெற்றது...நம்பகத்தன்மை வாய்ந்தது..(தினமலர் போல அமவுண்டு கொடுத்தால் ஆதரவாக எழுதும் பத்திரிக்கையாளர்கள் அங்கே இல்லாதது ஒரு காரணம்)..

அவர்களின் சமீபத்திய ஆய்வு முடிவுகளை பாருங்கள்...தொழில் தொடங்க வாய்ப்பான இடங்கள், அரசு துறையின் இயக்கம் எப்படி உள்ளது, இணையம் அரசு துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, காவல் துறை எப்படி உள்ளது, அரசு வரிகள் மற்றும் மானியங்கள் பற்றிய தகவல்கள் என வகைப்படுத்தி இருக்கிறார்கள்...

துறைகள் எப்படி செயல்படுகின்றன :

மார்க் ஷீட்டுல ரேங்க் என்ன :இந்த சிறப்பான நிர்வாகத்தை தரும் முதல்-அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!

******
****
***
**
*

50 comments:

அர டிக்கெட்டு ! said...

அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை

அர டிக்கெட்டு ! said...

அது சரி இப்ப அங்க மணி எவ்ளோ?

செந்தழல் ரவி said...

நன்றி ஆப் டிக்கேட்டு !!!!

பெஞ்சா ?

அனைத்து பதிவுகளிலும் உடனுக்குடன் உங்க பின்னூட்டம் போவுது ??

செந்தழல் ரவி said...

இங்கியா - 11 : 41 காலேல...

அர டிக்கெட்டு ! said...

பெஞ்சு நஹி....
கம்ப்ளீட் ஆஃப்...

அர டிக்கெட்டு ! said...

ஓ..அப்ப படம் நேத்து நைட்டு போட்டீங்களா..அப்ப இங்க காலீல நாலரை இருக்கும்!!!!

கபீஷ் said...

//..(தினமலர் போல அமவுண்டு கொடுத்தால் ஆதரவாக எழுதும் பத்திரிக்கையாளர்கள் அங்கே இல்லாதது ஒரு காரணம்)..//

How much did you get to write this?

(See there is no smiley in the question :-):-) )

Rajaraman said...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது இடங்களிலும் தி.மு.க.தான் ஜெயிக்கும், அதாவது நீங்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு கனவு காணும்போது.

கொஞ்சம் தமிழக கிராமப்புறங்களில் வந்து பாருங்கள், உங்கள் முதல்வரை மக்கள் எப்படி வாழ்த்துகிறார்கள் என்று தெரியும்.

எங்கோ இருந்து கொண்டு ஏட்டுசுரைக்காயை வைத்துக்கொண்டு பிடித்தமான கற்பனையில் மிதக்காதீர்கள் நண்பரே.

செந்தழல் ரவி said...

கபீஷ், நிறைய அன்பு !!!

செந்தழல் ரவி said...

ராஜாராமன் அவர்களே...

வெறும் வாய்மொழியாக சொன்னால்,எங்கே புள்ளி விவரம் என்று கேட்பீர்கள்....

புள்ளிவிவரமா சொன்னால், இது வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பீர்கள்..

எந்த கிராமப்புறம் என்ன பிரச்சினை என்று விளக்கமாக சொன்னால் பதில் அளிப்பேன்...

நானும் கிராமத்தாந்தான் சாமீ..

மோகன் கந்தசாமி said...

இத குஜராத் குஜராத் -ன்னு ஒலப்பரிக்கிற 'சோ'மாரிங்களுக்கு அனுப்பி வைங்க!

பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்? அது ஏன் தமிழ் நாட்டில் அதல பாதாளத்துல இருக்கு?

கபீஷ் said...

//கபீஷ், நிறைய அன்பு !!!//


Oh, allocated space in his heart?

அர டிக்கெட்டு ! said...

//பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்? அது ஏன் தமிழ் நாட்டில் அதல பாதாளத்துல இருக்கு?//

ரிப்பீட்டு!

கார்க்கி said...

உண்மை என்னும்போது பாராட்டத்தான் வேண்டும்.. ஆனால் எப்படி புதிதாய் வரும் நிறுவனங்கள் கையோடு மின்சாரமும் கொன்டு வருவார்களா?(இது சத்தியமா நக்கல் இல்லை. என் சந்தேகமே. பல சூப்பர் மார்க்கெட்களில் ஏ.சி போடுவதில்லை.வடகரை அண்னாச்சியை கேட்டால் சிறு தொழிற்சாலைகள் படும் அவலத்தை சொல்வார்)

அறிவிழி said...

\\இந்த சிறப்பான நிர்வாகத்தை தரும் முதல்-அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!\\

வழிமொழிகிறேன்,

அப்படியே உங்களுக்கும் வாழ்த்துகள்...

அர டிக்கெட்டு ! said...

கேப்பில் கிடா வெட்டினாலும் பிரியானி கிடைக்கும் என்பான் புத்திசாலி!!!!!

அத்திரி said...

எல்லாமே ஓகே தான் . ஆனா ஒரு சிலது விட்டுப்போச்சி

1.மின்வெட்டில் முதலிடம்
2.டாஸ்மாக் விற்பனையில் முதலிடம்.
3.மறைமுக பஸ் கட்டண உயர்வில் முதலிடம்
4.சிறு,குறு தொழில்களை கைவிடுவதில் முதலிடம்.
5.இலவசங்களை வாரி வழங்குவதில் முதலிடம்.
6.அமவுண்ட் ரவுண்டா வாங்குவதில் முதலிடம்.
7. தம்முடைய வாரிசுகளை திருப்திபடுத்துவதில் முதலிடம் ( ஸ்டாலின் தவிர)

இன்னும் சொல்லிக்கிட்டே இருக்கலாம்

Great said...

//அர டிக்கெட்டு ! said...
கேப்பில் கிடா வெட்டினாலும் பிரியானி கிடைக்கும் என்பான் புத்திசாலி!!!!!
//

சரியான இடத்தில் கேப்பில் கிடா வெட்டினால் பிரியாணிக்குப் பதிலாக நக்மா கிடைக்கும் என்பான் அதிபுத்திசாலி.

samy said...

WONDERFUL...
I THINK OTHER STATES OR MORE WORST THAN TAMIL NADU...
"கேட்டாலும் மேல் மக்கள் மேல் மக்களே" போலத்தான்..
தமிழகம் முன்னேறவில்லை.. மாற்ற மாநிலங்கள் பின்தங்கி உள்ளன...

மணிகண்டன் said...

***** பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்? அது ஏன் தமிழ் நாட்டில் அதல பாதாளத்துல இருக்கு? ****

இதுல ஒன்னும் தவறு இல்ல மோகன்.. வெட்டிக்கு IT ஸ்பென்டிங் இல்லாம இருக்கறது நல்லது தான். திருச்சி DIG ஆபீஸ்ல என்னோட நண்பன் வேல பாக்கறான். வாங்கி கொடுத்த கம்ப்யூட்டர் எல்லாத்தையும் பரண்ல வச்சி இருக்காங்க. அதே மாதிரி தான் தேவை இல்லாம IT க்கு பண்ற செலவும்.

***********இத குஜராத் குஜராத் -ன்னு ஒலப்பரிக்கிற 'சோ'மாரிங்களுக்கு அனுப்பி வைங்க! **********

குஜராத்தும் 19 வது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு வந்துள்ளதே !

business சாதகமான sales tax / income tax அப்படின்னா என்ன ? இதுல முதல் எடுத்துள்ள இருக்கறது தான் நல்லதா ? அது மட்டும் எனக்கு புரியல.

அர டிக்கெட்டு ! said...

//சரியான இடத்தில் கேப்பில் கிடா வெட்டினால் பிரியாணிக்குப் பதிலாக நக்மா கிடைக்கும் என்பான் அதிபுத்திசாலி.//

!@#$% blink blink ----!!

புருனோ Bruno said...

நானும் வாசித்தேன். சில வரிகள் வாசித்தவுடன் power (மின்சாரம்) முதல் மூன்று இடங்களுக்குள் இருந்தால் ஆசிரியர் குழுவை திட்டி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டே பார்த்தால்... தப்பிவிட்டார்கள்

//இந்த சிறப்பான நிர்வாகத்தை தரும் முதல்-அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!//

அதை தவிர நாம் வாழ்த்த வேண்டியது அந்த துறையில் சிறப்பாக செயல்படும் இ.ஆ.ப அலுவலர்களை

திரு சந்திரமௌலி இ.ஆ.ப
திரு உமாசங்கர் இ.ஆ.ப
திரு டேவிதார் இ.ஆ.ப

புருனோ Bruno said...

//கொஞ்சம் தமிழக கிராமப்புறங்களில் வந்து பாருங்கள், உங்கள் முதல்வரை மக்கள் எப்படி வாழ்த்துகிறார்கள் என்று தெரியும். //

ஒன்று தெரியுமா

கிராமப்புறங்களில் முதல்வரின் ஆதரவு அப்படியேத்தான் இருக்கிறது.

நகரங்களில் மட்டும் தான் (விலைவாசி, மின் பற்றாக்குறை காரணமாக) சிறு தொய்வு

புருனோ Bruno said...

//பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்?//

ஒவ்வொரு குடிமகனுக்காகவும் அரசு தகவல் தொழிற்நுட்ப துறைக்காக செலவழிக்கும் தொகை

--
// அது ஏன் தமிழ் நாட்டில் அதல பாதாளத்துல இருக்கு?//

ஆனால் தமிழ் நாடு நம்பர் 1 இடத்தில் தானே இருக்கிறது

ஒரு சிறு கதை

மூன்று குழுக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்

குழு 1, குழு 2 , குழு 3

--

ஒவ்வொரு குழுவிலும் 5 பேர்

--

ஆக 15 பேரும் காலை சாப்பாடு வாங்க ஒவ்வொரு குழுவிலும் ஒருவரை அனுப்புகிறார்கள்

--

இப்பொழுது குழு 1ல் சாப்பாடு வாங்கப்போனவர் 150 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 5 இட்லி வாங்கி வருகிறார்

--

குழு 2ல் சாப்பாடு வாங்கப்போனவர் 200 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 10 இட்லி வாங்கி வருகிறார்

--

குழு 3ல் சாப்பாடு வாங்கப்போனவர் 100 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 10 இட்லி வாங்கி வருகிறார்

--

இதில் பெர் கேப்பிட்டா இட்லி ஸ்பென்டிங் என்றால்

குழு 1 - 30
குழு 2 - 40
குழு 3 - 20

குழு 3 அதல பாதாளத்தில் இருக்கிறது

ஏனென்றால் குழு 3ல் சாப்பாடு வாங்க போனவர் (அவர் பணத்தை சாப்பிடாமல் - அல்லது குறைவான பணத்தை சாப்பிட்டு !!!) அதிக அளவு இட்லி வாங்குகிறார்

புரிகிறதா

--

புருனோ Bruno said...

//business சாதகமான sales tax / income tax அப்படின்னா என்ன ? இதுல முதல் எடுத்துள்ள இருக்கறது தான் நல்லதா ? அது மட்டும் எனக்கு புரியல//

நல்லது தான் :) :)

இதனால் அரசிற்கும் நல்லது
வரி கட்டுபவருக்கும் நல்லது

இடைத்தரகர்களுக்கு மட்டும் நல்லதல்ல

புருனோ Bruno said...

//வாங்கி கொடுத்த கம்ப்யூட்டர் எல்லாத்தையும் பரண்ல வச்சி இருக்காங்க.//

ஏன் என்று விசாரித்து சொல்ல முடியுமா (என் மின்னஞ்சல் முகவரி - bruno at targetpg dot com)

அரசு அலுவலகங்களில் கணினி பயன்பாட்டிற்கு எதிராக நிலவும் சூழல்கள் குறித்த ஆய்விற்கு உதவியாக இருக்கும்

அர டிக்கெட்டு ! said...

//ஏனென்றால் குழு 3ல் சாப்பாடு வாங்க போனவர் (அவர் பணத்தை சாப்பிடாமல் - அல்லது குறைவான பணத்தை சாப்பிட்டு !!!) அதிக அளவு இட்லி வாங்குகிறார்//

THIS DOC ROCKS !!!!!!!!!!!!!!

மணிகண்டன் said...

***ஏன் என்று விசாரித்து சொல்ல முடியுமா (என் மின்னஞ்சல் முகவரி - bruno at targetpg dot com)***

தகவல் கூறும் எனது நண்பனுக்கு எந்தவித தொல்லையும் வராது என்றால் நிச்சயமாக கேட்டு சொல்கிறேன்.

செந்தழல் ரவி said...

டாக்டர் புருனோ...

பெர் கேப்பிட்டாவை இவ்வளவு எளிமையாக அதை கண்டறிந்தவராலேயே விளக்கமுடியாது...

என்ன, இட்லியை நியாபகப்படுத்தி கொஞ்சம் பசியை கிளப்பிட்டீங்க...

செந்தழல் ரவி said...

மணி விசாரித்து சொல்ல்வும்..!!!

செந்தழல் ரவி said...

///
திரு சந்திரமௌலி இ.ஆ.ப
திரு உமாசங்கர் இ.ஆ.ப
திரு டேவிதார் இ.ஆ.ப///

இவர்கள் மூவரையும் நானும் வாழ்த்துகிறேன்...

ஜோ / Joe said...

//டாக்டர் புருனோ...

பெர் கேப்பிட்டாவை இவ்வளவு எளிமையாக அதை கண்டறிந்தவராலேயே விளக்கமுடியாது...
//
:)
வழிமொழிகிறேன்!

புருனோ Bruno said...

//தகவல் கூறும் எனது நண்பனுக்கு எந்தவித தொல்லையும் வராது என்றால் நிச்சயமாக கேட்டு சொல்கிறேன்//

வராது.
பெயர் கூட வேண்டாம். எந்த அலுவலகம் என்று எல்லாம் தெரிய வேண்டாம்

கணினியை உபயோகிக்காததன் காரணம் என்ன

1. தடையில்லா மின் வழங்கி இல்லையா
2. இல்லை மேசை இல்லையா
3. பயிற்சி இல்லையா
4. வேலைப்பளு அதிகரித்துள்ளதா

அல்லது வேறு ஏதேனுமா

என்ற அளவில் கூறினால் போதும்

கணினியின் ஒரு பாகம் (உதாரணம் திரை) யார் வீட்டிலாவது இருக்கிறதா ;) போன்ற காரணங்களையும் கூறலாம் :)

செந்தழல் ரவி said...

புருனோ...

தடையில்லா மின் வழங்கி...யூபிஎஸ்ஸை சொல்றீங்கன்னு நினைக்கிறேன்...நல்ல வார்த்தை...

ஆமா சில அரசு கணிப்பொறிகளில் RAM மட்டும் காணாமல் போய் பி.இ படிக்கிற அதிகாரியின் மகன் ஹாஸ்டல் கம்பியூட்டர்ல இருக்கும்.,.,.

செந்தழல் ரவி said...

கம்ப்ளீட் ரெஸ்ட்டா ? சூப்பர் !!!!

புருனோ Bruno said...

//ஆமா சில அரசு கணிப்பொறிகளில் RAM மட்டும் காணாமல் போய் பி.இ படிக்கிற அதிகாரியின் மகன் ஹாஸ்டல் கம்பியூட்டர்ல இருக்கும்.,.,.//

இது வேறயா ???

மோகன் கந்தசாமி said...

///ஏனென்றால் குழு 3ல் சாப்பாடு வாங்க போனவர் (அவர் பணத்தை சாப்பிடாமல் - அல்லது குறைவான பணத்தை சாப்பிட்டு !!!) அதிக அளவு இட்லி வாங்குகிறார்

புரிகிறதா//

நன்றி டாக்டர் புருனே!

பாலு மணிமாறன் said...

இந்தியாடுடே போன்ற பத்திரிக்கைகளின் சர்வேகள் கூட தமிழகத்தைத்தான் முன்னிறுத்துகின்றன. முதல்வர் பாராட்டுக்குரியவர்தான். தொழில் முன்னேற்றம் வேகமாகத்தான் இருக்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் Basic Infrastructures-ம் முன்னேறுவது அவசியம். தொடர்ந்து 2 வருடங்கள் power cut பிரச்சனைகளில் தத்தளித்தால், பன்னாட்டு நிறுவனங்கள் புதிய திட்டங்களோடு, பக்கத்து மாநிலங்களுக்குப் போய் விடும்.

தொலைநோக்கு வேண்டும்...அடுத்து ம.தி.மு.க, அ.தி.மு..க ஆட்சி வருவது மாதிரி இருந்தால், அந்த காலகட்டத்தில் முடிவடையக்கூடிய நீண்ட காலத் திட்டங்களைத் தவிர்த்துவிடும் குறுகிய நோக்கும் மாற வேண்டும்.

ஆனால், தமிழக அரசியலில் balancing act மிகவும் சிரமமான விஷயம் என்பது உலகறிந்த ரகசியம். பெரும்பான்மை மக்களின் மனசும் கோணாமல், முன்னேற்றத்திட்டங்களையும் செயல்படுத்துவது டாக்டர் கலைஞரைத் தவிர மற்றவர்களுக்கு சாத்தியமா என்பது Million Doller கேள்வி!

ஜெகதீசன் said...

இந்த சிறப்பான நிர்வாகத்தை தரும் முதல்-அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!

கடைசி பக்கம் said...

ravi nejamaalumaa solreenga?

naan kelvipattathellam vera maathiri illa irukkuthu?

கடைசி பக்கம் said...

ravi nejamaalumaa solreenga?

naan kelvipattathellam vera maathiri illa irukkuthu?

ஜோதிபாரதி said...

கலைஞருக்கும், தளபதிக்கும் பாராட்டுக்கள்!

Vetri said...

டேடா குவெஸ்ட் சொன்னா கரெக்டாதான் இருக்கும்.....ஹா ஹா ஹா .......

வால்பையன் said...

ஊழல் துறை விட்டு போச்சே!

செந்தழல் ரவி said...

பின்னூட்டத்துக்கு நன்றி ஜோதிபாரதி...

செந்தழல் ரவி said...

நன்றி பாலு மணிமாறன்...

வெள்ள நிவாரணம் ஒன்றிலேயே பேலன்ஸ் ஆகிவிடும் என்று நினைக்கிறேன் :))

செந்தழல் ரவி said...

கடைசி பக்கம் ?

நீங்க என்ன கேள்விப்பட்டீங்கன்னு சொல்லுங்க தல.

செந்தழல் ரவி said...

வெற்றி, ஏன் இந்த கொலைவெறி என்று தெரிஞ்சுக்கலாமா ? ஏன் டேட்டா க்வெஸ்டுக்கு என்ன ?

Maximum India said...

அன்புள்ள செந்தழல் ரவி

நான் பணி நிமித்தமாக பல மாநிலங்களுக்கு செல்லும் மற்றும் பல மாநில நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவன். அப்போதெல்லாம், தமிழகம் மாற்ற மாநிலங்களை விட சமூக மற்றும் பொருளாதார துறைகளில் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை நேரடியாகவே உணர முடிந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு தமிழக அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஓரளவுக்கு மட்டுமே காரணமாக இருக்க முடியும். முக்கிய காரணம், கடும் உழைப்புக்கு அஞ்சாத தமிழர்களின் குணம் மற்றும் அவர்களது தொழிற் முயற்சிகள் (Enterpreneurship Skills) என்றே நான் நினைக்கிறேன்.

நன்றி

ஜோ / Joe said...

இந்தியா டுடே சர்வேயை மேற்கோள் காட்டி இதே கண்ணோட்டத்தில் ஏற்கனவே நான் இட்ட பதிவு ஒன்று

http://cdjm.blogspot.com/2008/09/blog-post.html