அய்யோ சொக்கா சொக்கா எனக்கே பரிசு

எட்டாம் வகுப்பு படிக்கும்போது ( புனித வளனார் மஞ்சக்குப்பம் கடலூர் பள்ளியில் ) ஒரு உள்விடுதி ஆண்டுவிழாவுக்கு ஒரு கதைப்போட்டி வெச்சாங்க...

அதில் இரண்டாம் பரிசு...ஒரு டார்ச் லைட் கொடுத்தாங்க...

கதையோட பேரு "ஏமாந்த எள்ளுருண்டை". தலைப்பு என்னோட கற்பனைதான், ஆனா எங்கியோ படிச்ச ஒரு - சாமியார் எள்ளுருண்டைக்காக தடியால் நையப்புடைக்கப்படும் கதையை - என்னோட பாணியில அடிச்சுவிட்டேன்...

அதுல ஆரம்பிச்சது இந்த கதை எழுதுற கொலைவெறி...

சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைக்கதை போட்டி வெச்சப்போ ஒரு மொக்கை கதையை எழுதி அனுப்பியபோது அவரை சாட்டில் பிடித்தேன்...

நான் : சார் கதை எப்படி இருக்கு ?
சிறில் : த்தூ ரொம்ப கேவலமா இருக்கு..
நான் : ஹி ஹி..

அந்த கதைக்கான சுட்டி கடிகாரம் ( அறிவியல் புனைக்கதை - சிறில் அலெக்ஸ் போட்டிக்கு )

கடைசியில் ஒரு கொடுமை என்ன என்றால் அறிவியல் புனைவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கதையை முதல் பரிசுக்கு - ஜெயமோகனே தேர்ந்தெடுத்துள்ளார்...சிறில் அலெக்ஸ் ஏன் இதை ஜெயமோகன் சாருக்கு அனுப்பினார் ? அவர் உண்மையில் அந்த கதையை படித்தாரா இல்லையா ? என்பது போன்ற கேள்விகள் இருந்தாலும், ஜெயமோகன் சார் தேர்ந்தெடுத்த கதை ஒரு மொக்கையோ மொக்கை...!!!

கம்மிங் பேக் டு த பாய்ண்ட் !!

மாதங்கி மட்டும் வந்து ஒரே ஒரு கமெண்டை போட்டு நல்லாருக்குன்னாங்க...( ஒரு வேளை அவங்களோட மொக்கைப்பதிவுக்கு நான் எதாவது பின்னூட்டம் போட்டிருப்பேன்...மொய் வெக்க வந்திருக்கலாம் ஹி ஹி )

என்னுடை முந்தைய பதிவு, ஆழி பதிப்பகத்துக்கான ஒரு அறிவியல் புனைக்கதை...அதனை படித்துவிட்டு நல்லாருக்கு என்று சொன்ன அனைவருக்கும் நன்றி...

அப்போது தான் சென்ஷி கேட்கிறார், சிறில் அலெக்ஸ் அறிவுறுத்துகிறார்...நானும் பதிப்பகத்தின் அறிவுறுத்தல்களில் பார்க்கிறேன்...

கதையை அவர்களின் மின்னஞ்சலுக்கு பிடிஎப் கோப்பாகவோ அல்லது ஆர்.டி.எப் கோப்பாகவோ அனுப்பவேண்டுமாம்...( இதுக்கு யாராவது உதவி செய்ங்களேன்)

வலைப்பதிவில் வெளியிடக்கூடாதாம்...ஜனவரி 15 முடிவு தெரியுமாம்...

இதில் ஒரு மேட்டர் என்னவென்றால் முதல் பரிசு கெலிக்க முடியாது போனாலும் ஐரோப்பிய கண்டத்துக்கு சிறப்பு பரிசுக்கான போட்டி மிகவும் குறைவு...வேற யாரு, நம்ம ஜெனி'வினையூக்கி தான்...

அதனால் பதிவை நீக்கிவிட்டேன் ( ட்ராப்ட்ல வெச்சிருக்கேன்)....

படித்துவிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல !!!!!!!!

Comments

என் ஃபுல் சப்போர்ட் உங்களுக்குத்தான்... பை தவே தமிழ்மணத்துக்கான தெரிவுகள் ரெடியா?
அன்பு செந்தழல் ரவி...

நீங்கள் இந்த டூலைப் பயன்படுத்திப் பாருங்களேன்.

நன்றிகள்.

-மொக்கைக் கதை எழுத்தாளன்.
Unknown said…
நன்றி !!! தமிழ்மணத்துக்கு தெரிவுகள் ?? அப்படீன்னா என்ன ???
Unknown said…
வணக்கம் வசந்தகுமார்...

வருகைக்கு நன்றி..>!!!

பிரச்சினை என்னன்னா, யுனிக்கோட்ல இருக்கறத வேர்ட்ல காப்பி செய்து போட்டால், வெறும் கட்டம் கட்டமாக தெரிகிறது...

இதற்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை !!!
//என் ஃபுல் சப்போர்ட் உங்களுக்குத்தான்//
நானும் ஃபுல் சப்போர்ட் பண்றேன். நீங்க ஃபுல் சப்ளை பண்ண முடியுமா?
Use WordPad and save as RTF.
ழ//நீங்க ஃபுல் சப்ளை பண்ண முடியுமா//
சாரி ஐ ஒன்லி ஆஃப்.....!
//தமிழ்மணத்துக்கு தெரிவுகள் ?? //

தமிழ்மணத்தோட 250ருப்பி பரிசுக்கு!!!
Unknown said…
அட நீங்க வேற ?

வேண்டுமானால் இந்த மொக்கை பதிவை அனுப்பலாம் ஹி ஹி
Unknown said…
நன்றி இளா
Shakthiprabha said…
சம்மந்தமே இல்லாம மறுமொழி எழுத வேணம்ன்னு பார்த்தேன். உங்க எழுத்து, மறுபடியும் இங்க கொண்டுவந்து விட்டு, "மறுமொழி போட்டாத்தான் உண்டு" ன்னு அடம் புடிக்குது.

கட்டுரை இல்லாத, கதை இல்லாத கவிதை இல்லாத ஒரு பதிவிலே கூட இவ்வளவு அழகா எழுத முடியுமா?

ரொம்ப அழகா இருக்கு உங்க ஹாஸ்ய நடை.
Shakthiprabha said…
மூன்று முறை படிச்சுட்டு மூன்று முறையும் சிரிச்சேன்னா பார்த்துக்கொங்க!

மனமுவந்த பாராட்டுக்கள்!
தல,

தமிழமண பதிவுகள எளிதில் பி.டி.எஃப் கோப்பா மாற்றலாம். யாருக்கும் தெரியாம பதிவு போட்டு பி.டி.எஃபா மாத்திட்டு டெலீட் செஞ்சிடுங்க‌

Popular Posts