என்னது ??? கிளிநொச்சியை பிடித்துவிட்டார்களா ??

அதிர்ச்சியான செய்திதான்...

இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும் ??

இலங்கை ராணுவம் இப்போது கிளிநொச்சியை பிடித்துவிட்டார்கள்...இன்னும் இரண்டு வாரத்தில் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன் பொன்சேகா சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்...

இப்போது கிளிநொச்சியில் இருந்து பதினேழு பார்வேர்ட் டிபன்ஸ் லைனை திறந்து அப்படியே யாழ்ப்பாணம் வழியாக ராமநாதபுரம், நெல்லை, மதுரையை கைப்பற்றிவிட்டாங்கள்...

அப்படியே முல்லைத்தீவு பக்கம் இருபத்தோரு பார்வேர்ட் டிபன்ஸ் லைனை திறந்து, ஏதோ டிப்பன் பாக்ஸை திறக்கிறமாதிரி, நேராக வந்து, எல்லாத்தையும் பிடித்துவிட்டு, அதுக்கப்புறம் கடல்மார்க்கமாக கிளம்பிவந்து பாண்டிச்சேரியை அடைந்துள்ளார்கள்..

அங்கே டீப் பெனிட்டிரேஷன் யூரின் சாரி யூனிட் பாண்டிச்சேரியில் லாப்போர்த் வீதியில் நாலு கிளேமோர் தாக்குதல் நடத்தி, அங்கே நாற்பது பல்குழல் எறிகணைகளை நிறுவி, அங்கிருந்து வழுதாவூர், திருபுவனை, விழுப்புரம் வரை குண்டுகளை எறிகிறார்கள்..

டாக்டர் ராமதாஸ் வசிக்கும் திண்டிவணத்தில் நான்கு வெளிச்ச குண்டுகளை எறிந்து ஆழ ஊடுருவி தாக்கும் குண்டுகளை தைலாபுரம் தோட்டத்தில் கிபிர் ரக விமானங்கள் மூலம் எறிய நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்...

மதுரையை நோக்கி 57 ஆவது படையணி செல்கிறது. திரு.அழகிரியை ஆயுதங்களை களையுமாறு ஏற்கனவே பதினேழு முறை கோத்தபாய ராஜபக்ச கேட்டும் அவரும் அவருடன் இணைந்து இயங்கும் ஆயுத குழுக்கள் ஆயுதங்களை கீழே போடவில்லை.

அப்படியே புரண்டு படுத்தபோது, பக்கத்தில் வைத்திருந்த மொபைல் உறுத்தியதால் எழுந்துவிட்டேன்...

ச்சே என்ன ஒரு கனவு ??நேத்து ஆபீஸ் முடிந்து வந்தபோது வெறும் சைக்கிள், இப்போ பனி சைக்கிள். ( டேட்டா கேபிள் இல்லாததால் படம் ட்ரான்ஸ்பர் செய்ய இயலவில்லை, அதனால் அதற்கு ஈக்குவலான நெட் படம்)

Comments

Unknown said…
\\அப்படியே புரண்டு படுத்தபோது, பக்கத்தில் வைத்திருந்த மொபைல் உறுத்தியதால் எழுந்துவிட்டேன்...

ச்சே என்ன ஒரு கனவு ?? \\

நல்லயிருக்கு.
Saminathan said…
mail me at saminathan.27@gmail.com

சொல்லிருக்கலாம்ல பாஸ்...போன மாதம் உங்க ஊரு பக்கம் தான் சுத்திட்டு இருந்த்தேன்...கோபன்ஹெவன்..
இப்படியெல்லாம் கனவு வர்ர மாதிரி இருந்தா நீங்க தூங்கவே வேணாம்
ஈர வெங்காயம் :- சொல்லி இருந்தா போன மாசம் சுத்தினது இல்லேன்னு ஆயிடுமா ?
******* இப்படியெல்லாம் கனவு வர்ர மாதிரி இருந்தா நீங்க தூங்கவே வேணாம் ***

அப்புறம் " பகல்கனவு காணாதேன்னு " திட்டுவீங்க.
ரவி :- ஸ்வீடன் வந்தவுடன பதிவுகள் எண்ணிக்கை ஏறும் போல இருக்கு !
Unknown said…
நன்னி அதிரை ஜமால்
Unknown said…
வாங்க மணி ~!~

யெப் ~~~

Popular Posts