Monday, January 12, 2009

மின்னஞ்சல் (குட்டிக்கதை)


செல்வா@ஜிமெயில்:

டேய் மச்சி சேட்ல இருக்கியா ?

ரவி@யாஹூ:

இருக்கேண்டா...சொல்லு...என்ன மேட்டர் ?

செல்வா@ஜிமெயில்:

ஹிந்தி கஜினி நல்லாருக்காம்...ஆமிர்கான் நல்லா பண்ணியிருக்கானாம்டா..அசின் பிச்சு உதறியிருக்காளாம்...போலாமா ?

ரவி@யாஹூ:

இல்ல மாமா..தீபா ப்யூட்டி பார்லர் கூட்டிப்போக சொல்லியிருக்கா...ஹேர் கலரிங் பண்ணப்போறாளாம்...பைக்கை எடுத்துட்டு இன்னும் ஹாபனவர்ல போறேண்டா...

செல்வா@ஜிமெயில்:

டேய்., டிக்கெட் நான் போடறேண்டா...வாடா...பாப்கார்ன் வாங்கித்தரேன்...

ரவி@யாஹூ:

மாமா, தீபூகூட போனா லெப்ட் கன்னத்துல ஒன்னு, ரைட்டு கன்னத்துல ஒன்னு, செண்டர்ல ப்ரெஞ்ச் ப்ரை ஒன்னுன்னு தரேன்னு சொல்லியிருக்கா...

செல்வா@ஜிமெயில்:

டேய் பிகரை பாத்தவுடனே ப்ரெண்ட கட் பண்ணிவுடுற பாத்தியா ? அவ்ளோதானாடா ? நீயும் நானும் அப்படியா பழகுனோம் ?

செல்வா@ஜிமெயில்:

டேய் இருக்கியா ? பதில் சொல்லுடா ?

செல்வா@ஜிமெயில்:

டேய்......

எரிச்சலான செல்வா, லேப்டாப்பை மடித்துவிட்டு, கையில் கிடைத்த டென்னிஸ் பேட்டை எடுத்துக்கொண்டு ரவியை ரெண்டு போடலாம் என்று அவன் அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே...டேய்ய்ய்ய்....

பி.கு : ரவியும் செல்வாவும் ஒரே அப்பார்மெண்டில் இரு வேறு அறைகளில் தங்கியிருக்கிறார்கள்..

10 comments:

பழமைபேசி said...

அனுபவம் பேசுது! இன்னும் நிறையப் பேசட்டும்!!

வினையூக்கி said...

அட, இப்படிதாங்க என் ரூம் மேட்ஸும் நானும் ஒரே ரூமில இருந்துகிட்டே பேசிக்கிட்டு இருக்கோம்.
சுவாரசியமான குட்டிக் கதை.

ILA (a) இளா said...

WOW, good story

Tech Shankar said...

1947 ல கம்ப்யூட்டரும் நெட்டும் இருந்தால் சுதந்திரத்தையும் இப்படி அடிச்சுக்காம வாங்கியிருக்கலாம்.

Poornima Saravana kumar said...

கதை நல்லா இருக்கு.. ஆமா யாரந்த தீபு ???

மணிகண்டன் said...

தீபு எங்க தங்கி இருக்கான்னு சொல்லலயே ரவி ! செல்வா எங்க தங்கி இருந்தா என்ன ?

வால்பையன் said...

ஸ்வீடன்ல உங்க பக்கத்து ரூம்ல த்ங்கி இருக்குறவர் பேரு செல்வாவா?

தீபு யாருங்க?

Tech Shankar said...

செந்தழல் ரவியிடம் இருந்து பொங்கலுக்கு முன்னர் ஒரேயொரு பின்னூட்டமாவது வாங்கியே தீருவது என்கிற எண்ணத்தில் எழுதிய


பதிவு இது.


கனவு பலித்துவிட்டது.

நன்றி : திரு. செந்தழல் ரவி.

தாரணி பிரியா said...

விகடனில் இந்த வாரம் உங்க ப்ளாக் பத்தின செய்தி வந்ததுக்கு வாழ்த்துக்கள் செந்தழல் ரவி

ரவி said...

nanri pazamaipesi...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....