Thursday, January 15, 2009

முரட்டு வைத்தியம் (life story)

நாட்டு வைத்தியம் பிரபலமாக இருந்த காலத்தில் முரட்டு வைத்தியம் என்ற சொல்லாடல் இருந்தது...

அமுக்கு விடாதே என்று கஷாயத்தை திணித்து - உடல்வலி குணமாகிறதோ இல்லையோ, தொண்டைவலி, மூக்குவலி என்று இல்லாத திருகுவலியும் வந்துசேரும் - அதிஷ்டவசமாக குணமாகித்தொலைவதும் உண்டு..

என்னுடைய தந்தைவழி பாட்டி நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் ராஜபேதி கீரை என்ற கீரையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எங்களுக்கு பொரியல் செய்து தருவார்கள்..

கீரையின் பெயரே சொல்லிவிட்டதே, வேறு விளக்கம் எதற்கு ? பிச்சிக்கும்...

நான் எல்லாம் ராஜ பேதி கீரை சாப்பிட்டால் டவுசரை மொத்தமாக கழட்டிவிடுவது வழக்கம்...

சும்மா சொல்லக்கூடாது, பழங்கால வைத்திய முறைகளில் பல இன்றைக்கும் வேலை செய்கிறது...

நான் சொல்ல வந்த விஷயம் வெறும் "முரட்டு வைத்தியம்" என்ற சொல்லாடலை வைத்து எழுந்த எண்ணங்கள்...

வறட்டு இருமலுக்கு முரட்டு வைத்தியம் ஐஸ்க்ரீமை அள்ளி தின்பது என்று என்னுடைய கல்லூரி சீனியர் சொல்லி இன்றும் கடைபிடித்துவருகிறேன்...

நான் இருக்கும் இடத்தில் இருந்து அலுவலகம் மூன்று கிலோமீட்டர்..

பேருந்து வசதி இல்லாத நிலையில் நடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை...

பக்கத்து அறையில் பக்காவாக தங்கியிருக்கும் தைவான் நாட்டு மங்கையிடம் காலையில் அவர் செல்லும்போது என்னையும் அழைத்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்...

காலை ஏழரை மணிக்கு சரியாக பொத்தானை அழுத்திவிட்டார்...

பத்து நிமிடம் முன்புதான் எழுந்து அமர்ந்து தை ஒன்றை பொங்கல் அன்று வரவழைத்தது போல் கிறிஸ்மஸ் அன்று ரம்ஜான் வருமாறு மாற்றிவிட்டால் நோன்பு கஞ்சி அருந்தியபடியே கேக்கும் சாப்பிடலாமே என்ற யோசனையில் இருந்தேன்...
அய்யய்யோ. இப்ப நாம கிளம்பி இல்லைன்னா தைவான் மங்கை தமிழனை சோம்பேறி என்று நினைக்கும் வாய்ப்பு உண்டே ? சமாளிப்போம்..

சரி, ஒரு நாள் குளிக்கலைன்னா என்னா குடியா முழுகிடப்போவுது ?

ஐந்தே நிமிடத்தில் கிளம்பினேன்... டிரஸ் ஐ மட்டும் மாட்டிக்கொண்டு..

ஆக்சுவலி ஐ வேக் அப் அட் ஸிக்ஸ் ஓ க்ளாக் யூ நோ ? டமில் பீப்பிள் ஆர் வெரி பாஸ்ட்...

தமிழன் என்று சொல்லடா !!!
தலை நிமிர்ந்து நில்லடா !!!
குளிக்காமல் அலுவலகம் செல்லடா !!!

குள்ளமாக இருப்பவர்களுடன் நடப்பது ரொம்ப கஷ்டம்...ரொம்ப வேகமாக நடக்கிறார்கள்... உடன் நடந்து பாருங்க தெரியும். ஹும்..

முரட்டு வைத்தியம் என்று தலைப்பு வைத்துவிட்டு அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் என்ன வளவளவென்று இழுக்கிறாய் என்கிறீர்களா ?

நடந்து செல்வது என்று தீர்மானித்து, காலையில் வந்து அழைத்துப்போகிறேன் என்ற நன்பர்களின் பேச்சையும் மீறி...

வாக்கிங் போன மாதிரி ஆச்சே...என்று இரண்டாவது நாளாக முரட்டு வைத்தியம் செய்திருக்கிறேன்...

இன்றைக்கு மூன்றாவது நாள்...வெற்றிகரமாக உணருகிறேன்...அற்புதம்...போக மூன்று வர மூன்று ஆக மொத்தம் ஆறு...இரண்டு நாட்களுக்கும் சேர்த்து பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்திருக்கிறேன்...



மைனஸ் இரண்டு டிகிரி குளிரில்..

ஆங்...சொல்ல மறந்துட்டேன்...ரெண்டு நாள் நடந்ததுல டயர்ட் ஆகி இன்னைக்கு பதினோரு மணி வரை தூங்கிட்டேன்..

அரை நாள் அலுவலகத்துக்கு லீவு...

வாழ்க முரட்டு வைத்தியம்...வாழ்க நமது முன்னோர் !!! வாழ்க ராஜபேதி கீரை...!!!

18 comments:

இராகவன் நைஜிரியா said...

முரட்டு வைத்தியம் எல்லாம் நம்ம ஊரோட வச்சுகுங்க.. மைனஸ் குளிரெல்லாம் இது மாதிரி செயாதீங்க, தனியா வேற இருக்கீங்க..

சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்...

Take care of your health.

இராகவன் நைஜிரியா said...

// Blogger செந்தழல் ரவி said...

test//

என்னாது இது.. நீங்களே டெஸ்ட் அப்படின்னு போட்டு இருக்கீங்க..

டெஸ்ட் பாஸ் பண்ணீடீங்க..

அது சரி(18185106603874041862) said...

//
சரி, ஒரு நாள் குளிக்கலைன்னா என்னா குடியா முழுகிடப்போவுது ?
//

இப்பிடியே டெய்லி நினைக்காம இருந்தா சரி :0))

குடுகுடுப்பை said...

ராஜபேதி கீரையை நடந்துராதீங்க.

நசரேயன் said...

ராஜா பேதி கீரையா?

துளசி கோபால் said...

ரவி,

ரொம்பக்குளிரா? இப்படி மூளை நடுங்குது!!!

//பத்து நிமிடம் முன்புதான் எழுந்து அமர்ந்து தை ஒன்றை பொங்கல் அன்று வரவழைத்தது போல் கிறிஸ்மஸ் அன்று ரம்ஜான் வருமாறு மாற்றிவிட்டால்....//

தை ஒன்றுக்கு வருசப்பிறப்பை வரவழைத்தது போல


இப்படிக்கு டீச்சர்.

இனிய பொங்கல் வாழ்த்து(க்)கள்.

ம்ம்ம்ம்ம்மாஆஆஆ

ரவி said...

thanks ragahavan

வெண்பூ said...

//
பக்கத்து அறையில் பக்காவாக தங்கியிருக்கும் தைவான் நாட்டு மங்கையிடம்
//

அந்த மங்கையின் படம் போடாததற்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளி நடப்பு செய்கிறேன்.. :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

அது என்ன தலைப்புகள் ல டோண்டு..

:-)))))))))

வால்பையன் said...

ஒரு முரடனிடம் முரண்டு செய்தால் கூட முரட்டு வைத்தியம் கிடைக்குமாம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த முரட்டு வைத்தியம்...சக்கரைப் பையனுக்கு, மிக நன்று!
என் வைத்தியர் கூறினார்.

மணிகண்டன் said...

யோவ் நைஜீரியா !

இவரு தான் என்னவோ ஆறு கிலோமீட்டர் நடந்ததா, ஒரு முரட்டு பதிவா போடறார்ன்னா, உங்க அட்வைஸ் வேற ! "டேக் கேர் ஆப் யுவர் ஹெல்த்"
ரவி வயசுல ஒரு ஆறு கிலோமீட்டர் தினமும் நடக்கிறது தான் " டேக்கிங் கேர் ஆப் யுவர் ஹெல்த்"

இந்த ஐரோப்பா சுற்றுபயனத்துல நெதெர்லாந்து வரும் திட்டம் ஏதாவது இருக்கா ?

ராஜ நடராஜன் said...

முரட்டு வைத்தியம்ன்னு சொன்னப்பறம் முரட்டுத்தனமா நானும் ஏதாவது சொல்லட்டுமா?

அந்தப் பக்கமெல்லாம் நம்ம அண்ணாத்த புரூஸ் லீயோட நான்சாக்கு கிடைக்குமென நினைக்கிறேன்.அதக் கொஞ்சம் கழுத்தை சுத்தக் கத்துகிட்டா புருஸ் லீ மாதிரியும் தெரியுவீங்க.தினசரிப் பழக்கமாகி விடும்.

இதுலப் பிரச்சினை என்னன்னா இதைக் குளிக்கிறதுக்கு முன்னாடி செய்யனும்.ஆனா குளிக்காம ஓடுறீங்கன்னு சொல்றீங்க அதுதான் கொஞ்சம் இடிக்குது:)

ரவி said...

thanks poornima saran

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
//அது என்ன தலைப்புகள் ல டோண்டு..//
பார்க்க: http://dondu.blogspot.com/search/label/முரட்டு%20வைத்தியம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//@வால்பையன்
//அது என்ன தலைப்புகள் ல டோண்டு..//
பார்க்க: http://dondu.blogspot.com/search/label/முரட்டு%20வைத்தியம்//

இந்த முரட்டு வைத்தியம் எனது உடலில் சர்க்கரை அளவை குறைக்க அறிவுத்தினீர்களே மறந்து விட்டீர்களா!
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
மன்னிக்கவும். இது சம்பந்தமாக கேள்வி கேட்டது T.V.Radhakrishnan. நீங்கள் என தவறுதலாக நினைத்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

KarthigaVasudevan said...

// அது சரி said...
//
சரி, ஒரு நாள் குளிக்கலைன்னா என்னா குடியா முழுகிடப்போவுது ?
//

இப்பிடியே டெய்லி நினைக்காம இருந்தா சரி :0))//

அதே தான்...! சுத்தம்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....