Thursday, August 28, 2008

தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணனுக்கு குட்டு மற்றும் சாம்பார் வைப்பது எப்படி ?

ஏதோ ஒரு டி.வியில் ஏதோ ஒரு புரோகிராம் பார்த்தபோது, அதில் பேசிய ஒருவர்...

தான் ஒரு FC (பார்வேர்டு கேஸ்ட்டு) என்று குறிப்பிட்டதை பார்த்து வெறுத்துப்போனேன்...

இந்த தமிழ் சாக்கடையின் அடி மனதில் தங்கியிருக்கும் சாதீய அழுக்கே இந்த வார்த்தைகள் என்று நினைத்தபோது...

குமட்டிக்கொண்டு வருகிறது...!!!

இந்த வார குட்டு, தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணனுக்கே...

உபயோகமான குறிப்புகள் இல்லாமல் பதிவு எழுதுவதில்லை என்று கொ.மி.மி.மி அனானியிடம் செய்த சத்தியத்தின் காரணமாக...

தமிழ் வலையுலகி எழுபத்தேழாவது முறையாக சாம்பார் வைப்பது எப்படி என்ற குறிப்பை தருகிறேன்...

முதலில் கையளவு பருப்பை எடுத்துக்கொள்ளவும்...

அதை குக்கரிலோ (குக்கர் இருந்தால்) அல்லது சுடு நீரிலோ வேகவைக்கவும்...

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பருப்பை வேகவைக்கும்போது உப்பு போடக்கூடாது...

உப்பு போட்டால் வேகும் ஆனால் வேகாது என்று ஆட்டம் காட்டி கேஸையோ அல்லது மண்ணென்னையையோ தீர்த்துவிடும் இந்த பருப்பு மேக்கிங் ப்ராஸஸ்...

இதன் பிறகு பருப்பை கந்தல் துணி பிடித்து ஓரமாக இறக்கி வைத்துவிடவேண்டியது சாம்பார் வைக்கும் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்...

சாம்பாரில் பலவகை, ஒவ்வொன்றும் ஒருவகை...முருங்கைக்காய் சாம்பாரில் ஆரம்பித்து முள்ளங்கி சாம்பார் வரை, குறைந்த காசில் கிடைக்கும் அத்துனை காய்கறிகள் கொண்ட சாம்பார்களும் உங்கள் வயிற்றில் ஹோட்டல்கள் மூலம் இறங்கி இருக்கும்...

ஆனால் கி.போ.சா என்ற இந்த புதுவித சாம்பாரை நீங்கள் கேள்வி பட்டிருக்க வாய்ப்பில்லை...

கி.போ.சா என்றால் கிள்ளி போட்ட சாம்பார் என்று அர்த்தம்...

கிள்ளி போடுவது என்றால், வெறும் மிளகாயை கிள்ளி போட்டு, பருப்பை கண்ணில் காட்டி, சாம்பார் என்ற பெயரில் அடுப்பில் இருந்து இறக்குவது...

பொதுப்புத்தி சாம்பாருக்கும் இந்த சாம்பாருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், மற்ற உயர்ந்த சாதி சாம்பாரைபோல் இதில் மிளகாய்த்தூள் போடுவதில்லை...

வெறும் நாலு மிளகாயை கிள்ளி போடுவார்கள்...

சரி இப்போ மறுபடி கம்மிங் பேக் டு த பாய்ண்ட் (வசனம் உதவி மற்றும் நன்றி பொந்துமணி)

பருப்பை இறக்கிய பிறகு, வாணலை வைத்து / அல்லது குண்டானை வைத்து / அதில் கொஞ்சம்போல எண்ணையை காட்டவும் ( ஏற்கனவே எதையாவது வறுத்து / தாளித்து மீதி வைத்த எண்ணையாக இருந்தாலும் பரவாயில்லை)

எண்ணை லைட்டாக சூடானபின், இரண்டு கறிவேப்பிலை, கொஞ்சம் கடுகு, மற்றும் ஏற்கனவே சொன்னபடி நாலு மிளகாயை கிள்ளி போடவும்...

தன்னுடைய சாதி திமிரை சொல்லிய நொள்ளைக்கண்ணனை கண்டு சுரணை கெட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த ஏதோ ஒரு கவிஞரை போல சூடு இல்லாமல் தீயை கொஞ்சம் மிதமாகவே வைத்துக்கொண்டால், மிளகாய் தீய்ந்து போகாமல் காக்கலாம்...

இதன் மூலம் சாம்பார் சுவை கூடும்...

லைட்டாக கருகிய வாடை வரும் சமயம் பருப்பு தண்ணீரை / பருப்போடு சேர்த்து அதில் ஊற்றி ஒரு கலக்கு கலக்குங்கள்...

கொஞ்சம் உப்பு சேருங்கள்...கொஞ்சம் போதும்...சரியா ? சுரணை ஏதும் வந்துவிடப்போகிறது ஆமாம்...தமிழனை கருநாடகத்தவன், ஆந்திரன், கேரளன் எல்லாம் ஏமாற்றவேண்டுமல்லவா ? செஞ்சோலையில் குண்டுகள் போட்டாலும், கிளிநொச்சியில் மக்கள் மேல் குண்டு போட்டாலும் நாம் அமைதியாக இருக்கவேண்டும் அல்லவா...அதனால் உப்பை கம்மியாகவே சேருங்கள்...

இன்னும் கொஞ்சம் கலக்குங்கள்...

அப்படியே இடது புறம், வலது புறம் கிண்டுங்கள்...இடது மற்றும் வலது ரெண்டும் ஒன்று தான்...

இந்த வேளையில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து அதை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, பிசைந்து, குழைத்து, நசுக்கி, அமுக்கி அரை டம்ளர் தண்ணீர் முழுவதும் புளித்தண்ணீராக கரையும் அளவுக்கு செய்யவும்..

இதனை அப்படியே சாம்பார் குண்டானில் ஊற்றிவிடவும்..

பிறகு டி.வியை வைத்து ஹிந்து பேச்சு, சேட்ஜியின் மூச்சு என்ற புரொகிராமை ஜீ டி.வியில் பார்த்து கொஞ்சநேரம் டைம் பாஸ் செய்யுங்கள்...

இப்போது சாம்பார் லைட்டாக வாசனை வீசும்...சாம்பார் வாசனைதான்...

இன்னும் கொஞ்சம் கிண்டுங்கள்...

வெள்ளையாக நுரையுடன் சேர்ந்து சாம்பார் கொதிக்கும்...கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பார் பொடியை இதன் தலையில் தூவி, இன்னும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, இறக்குங்கள்...

மொத்த சாம்பார் மேக்கிங் ப்ராஸஸ் பத்து நிமிடத்துக்குள் முடியுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்...

நொள்ளைக்கண்ணன் ப்ரோகிராம் மாதிரி அறுக்கவேண்டாம்...

இப்படித்தான் சாம்பார் வைப்பது மற்றும் தன் உயர் சாதி பாசத்தை வெளிக்காட்டும் தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணன்களுக்கு குட்டு வைப்பது...

டேகு: தமிழ்சாக்கடை, நொள்ளைக்கண்ணன், சாம்பார்

24 comments:

Anonymous said...

inge gummai allowed aa ?

Anonymous said...

இந்த ப்லாக் கம்பேனி நடத்துவதே கும்மிக்காகத்தான். நடத்தவும்.

லக்கிலுக் said...

:-)))))

லக்கிலுக் said...

பின்னூட்ட மட்டுறுத்தலை மீண்டும் கொண்டுவரவும். ஏற்கனவே நடந்த கொடுமைகளை மறந்துவிட்டீர்களா? :-(

Anonymous said...

///பின்னூட்ட மட்டுறுத்தலை மீண்டும் கொண்டுவரவும். ஏற்கனவே நடந்த கொடுமைகளை மறந்துவிட்டீர்களா? ///

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை.

கூடுதுறை said...

சாம்பார் சூப்பர்...டேஸ்ட்...

Anonymous said...

என்ன கூடுதுறை ? அதற்குள் கொதிவந்துவிட்டதா என்ன ? !!!!

கூடுதுறை said...

//அதற்குள் கொதிவந்துவிட்டதா என்ன ? !!!!//

கொதியா? சாப்பிட்டு ஆகிவிட்டது...

lol....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஆரம்பிச்சுட்டாய்ங்க

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வெட்டிப்பயல் said...

கிள்ளி போட்ட சாம்பார் நம்ம ஃபெவரைட் :)

வெறும் மிளகாய்னு சொன்னா நம்ம பசங்க பச்சை மிளகாயை போட்டுட போறாங்க. இதுல காய்ந்த மிளகாய் (வர மிளகாய்) போடனும் :)

இதுக்கு நெத்திலி கருவாடு வறுத்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும் :)

ரவி said...

////கிள்ளி போட்ட சாம்பார் நம்ம ஃபெவரைட் :)

வெறும் மிளகாய்னு சொன்னா நம்ம பசங்க பச்சை மிளகாயை போட்டுட போறாங்க. இதுல காய்ந்த மிளகாய் (வர மிளகாய்) போடனும் :)

இதுக்கு நெத்திலி கருவாடு வறுத்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும் :)////

எக்ஸாக்ட்லி !!!!

நெத்திலி கருவாட்ட்டோட எக்ஸாக்ட் பிட் இவர்தான்...

வெஜிடேரியன்களுக்கு உருளைக்கிழங்கு வறுவல்...!!!

Anonymous said...

//இந்த தமிழ் சாக்கடையின் அடி மனதில் தங்கியிருக்கும் சாதீய அழுக்கே இந்த வார்த்தைகள் என்று நினைத்தபோது...

குமட்டிக்கொண்டு வருகிறது...!!!//

Unnoda pathivugalai padhithalum appadi thaan kumattugiradhu.

Mothalla nee thirundhuppa, appuram olagathukku advicikkalaam.

வால்பையன் said...

//தான் ஒரு FC (பார்வேர்டு கேஸ்ட்டு) என்று குறிப்பிட்டதை பார்த்து வெறுத்துப்போனேன்...//

நான் FC என்றால் பிராடு கேஸட் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன்

வால்பையன் said...

//முக்கியமாக கவனிக்க வேண்டியது, பருப்பை வேகவைக்கும்போது உப்பு போடக்கூடாது...//

என் வீட்டில் கொஞ்சம் அதில் விளக்கெண்ணை ஊற்றுவார்கள்

வெட்டிப்பயல் said...

//வால்பையன் said...

//முக்கியமாக கவனிக்க வேண்டியது, பருப்பை வேகவைக்கும்போது உப்பு போடக்கூடாது...//

என் வீட்டில் கொஞ்சம் அதில் விளக்கெண்ணை ஊற்றுவார்கள்//

கொஞ்சம் நல்லெண்ணை கூட ஊத்தலாம். பருப்பு குழையாம இருக்கும்.

கொஞ்சம் மஞ்சத்தூளும், ஒரு பூண்டு பல்லும் போடலாம்.

Anonymous said...

///கொஞ்சம் நல்லெண்ணை கூட ஊத்தலாம். பருப்பு குழையாம இருக்கும்.

கொஞ்சம் மஞ்சத்தூளும், ஒரு பூண்டு பல்லும் போடலாம்.///

சின்ன புளி போட்டால் பருப்பு சீக்கிரம் வேகும். நுரை வராமல்.

பூண்டு பல்லு போட்டால் சாம்பார் நல்லா வரும்...

மேலும் கூட்டுப்பெருங்காயத்தில் இருந்து ஒரு சின்ன கட்டி போட்டால் கூட சிறப்பு.

போக்கிலி ராஜா said...

இந்த f---ing clasச் நொள்ளைய சிலாகிக்கவும் ஆள் திர்றான்... : (

SurveySan said...

நீங்க சொல்ற புரோக்ராம நான் பாக்கலை.
ஆனா, அதுக்கு முன்னாடி சில காட்சிகள் பாத்திரூக்கேன். மனுஷன், உண்மையாவே 'தமிழ் கடல்'தான். மனப்பாடமா வச்சிருக்காரு பல விஷயங்கள.

அவரு, தான் ஒரு FCன்னு சொன்னது ஒரு slip of the tongueஆ இருக்கலாம். திமிரில் சொன்னதாய் இருக்காதுன்னு அடியேனுக்குத் தோணுது. டி.வில பல கோடி பேருக்கு முன்னாடி, அப்படி சொல்லி வாங்கிக் கட்டிக்க அவரு முட்டாள் கிடையாது.

இப்பதான், அவரு இத்த பத்தி எழுதின கவுஜையப் பாத்தேன்.

பல்லாண்டு காலமாய் ஒடுக்கப் பட்டோர்
பலவிதமாய் வாழ்வின்றித் தடுக்கப்பட்டோர்
கல்லாதாராய் அவரைக் கட்டி வைத்து
கவலைகளில் அவர் தள்ளி வாழ்ந்திருந்த
பொல்லாரைத் தீயவரை புறத்தில் தள்ளி
பொறுப்பாக அவர் வாழ வழிகள் செய்து
நல்லார்கள் மிகச் சிறப்பாய்த் தந்து நின்ற
நலமான ஒதுக்கீடு உரியவராம்

எல்லார்க்கும் போகிறதா என்று கேட்டால்
இல்லை என்ற பதிலேதான் எங்கும் கேட்கும்
வல்லார்கள் சாதியினை மாற்றித் தந்து
வகை செய்வார் மற்றவரை ஏய்த்து நிற்பார்
சொன்னேன் நான் பணம் கொண்டு இந்த விதம்
சோடிப்பு வேலை செய்வோர்க்கு உதவி நிற்பார்
மண்ணாள வந்தோரும் அரசு தன்னில்
மணமாக பொறுப்பில் உள்ள வேலையாரும்

சொன்ன விதம் புரியார்க்கு என்ன செய்வேன்
சொல்லும் மனம் எந்தன் மனம் நல்ல மனம்
கன்னலெனும் தமிழினிலே வள்ளுவனைக்
கற்று நின்ற என் மனத்தை நானறிவேன்
மின்னுகின்ற உண்மையினை விரும்பி நிற்கும்
மென் மனத்தான் என்னை எந்தன் ஊரறியும்
என்னைப் பற்றி அறியாதோர் பேசி நின்றால்
என்ன செய்வேன் அவர் பேச்சு அறியாப் பேச்சு

ரவி said...

///அவரு, தான் ஒரு FCன்னு சொன்னது ஒரு slip of the tongueஆ இருக்கலாம்.///

இதை ஒத்துக்க முடியாது...ஸ்லிப் ஆப் டங்குல இல்லை, நேரடியாகவும் பல இடங்களில் தான் ஒரு சைவப்பிள்ளை என்று சொல்லி வருவதாக படித்தேன் ஷர்வேஷன். குழலி பதீவை படிச்சீங்களா ?

Arun Nadesh said...

சிறுது சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து
செய்த கிள்ளி போட்ட வெங்காய சாம்பார் அருமையாக இருந்தது.
நன்றி.. இதுபோல உபயோகமான blogs எழுதவும்..

அடுத்து "சுவையான கருவாட்டு குழம்பு சமைப்பது எப்படி??" என்ற பதிவை எதிர்பார்க்கிறேன்..
:-)

http://arun-nadesh.blogspot.com/

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....