ஒரு கொலை ராகம்...!!!


மணடல பொறியியல் கல்லூரி மிண்ணனுவியல் துறை - 1992-1994


மண்டல பொறியில் கல்லூரியில் என்னுடைய பேட்ச் மாணவர்களில் நல்ல "மண்டை" யார் என்றால் எல்லோரும் கை காட்டுவது மணிவண்ணனாகத்தான் இருக்கும்...அவன் என்னுடைய அறை நண்பன் என்பதில் எனக்கு இன்றைக்கும் பெருமைதான்..

மண்டை என்றவுடன் மூலையில் உட்கார்ந்து பெரிய பெரிய புத்தகங்களை எப்போதும் மனப்பாடம் செய்துகொண்டிருக்கும் ஒரு "பழம்" உங்கள் சிந்தனையில் வந்து உட்கார்ந்தால்...சாரி...நீங்கள் தவறு செய்கிறீர்கள்...

எங்களோடு சேர்ந்து ஹாட் அடிப்பான்...கிங்ஸ் அடிப்பான்...வாந்தி எடுப்பான்...சைட் அடிப்பான்..லெட்டர் கொடுப்பான்..ஆனால் பாழாப்போன தேர்வுகள் வந்தால் அன்றைக்கு இரவு மட்டும் சல்லீசாக கிடைக்கும் வில்ஸ் ஸ்மால் ரெண்டு பாக்கெட் - பத்து சிகரெட் மூன்று ரூபாய் - வாங்கிக்கொண்டு மாடியில் உள்ள தனியறையில் ஒரு நிமிடம் கூட உறங்காமல் படிப்பான்..

எங்கள் கல்லுரியில் முதல்வர் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். அதாவது முதல் ஆண்டு சேரும்போது ரூபாய் ஐந்தாயிரம் கேப்பிடேஷன் பீஸ் ஆக பெறப்படும். நான்கு ஆண்டுகளும் எந்த பாடத்திலும் சொம்பு வாங்காமல் - அதாவது அரியர்ஸ் வைக்காமல் இருந்தால் - அந்த ஐந்தாயிரம் ரூபாய் திருப்பி தரப்படும். பத்தாயிரமாக.

எங்கள் செட்டிலேயே அந்த தொகையை வாங்கிய ஒரே ஒரு ஆள் மணி. எல்லா பாடத்திலும் 75 மதிப்பெண்களுக்கு மேல். இறுதிவரை..

என்ன ஒரு மணிப்புராணமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆமாம். கல்லூரி முதல் ஆண்டில் முதல் நாள் பாடசாலையில் என்னுடைய பக்கத்தில் வந்து அமர்ந்தவன் மணி. தலை கொஞ்சம் கோக்குமாக்காக - எண்ணையோ ஷாம்போ எதுவும் மாதக்கணக்கில் பார்க்காமல் இருந்த - லைட்டாக செம்பட்டையான - தலை. சற்றே கரகரப்பான ஆனால் கணீரென்ற குரல்.

அதிகம் பேசவில்லை. கொஞ்சம் தொந்தரவு செய்து விசாரித்ததில் அவனுடைய தந்தையார் அமெரிக்காவில் பணிபுரிந்தவர். இவன் அங்கேயே படித்துள்ளான். அம்மா இல்லை இவனுக்கு..இவன் ஏதோ விபத்தில் சிக்கியுள்ளான். இவனுடைய தந்தையார் அங்கேயே சிறிதுகாலம் வைத்தியம் பார்த்துள்ளார்.

பிறகு தன்னுடைய பணியில் இருந்து நிரந்தர விடுப்பு பெற்று கொடைக்கானலில் வைத்து இரண்டு வருடம் இவனை பராமரித்துள்ளார்..பிறகு அவரும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அவர் அங்கேயே இருக்க, இவனை யார் யாரையோ பிடித்து எங்கள் கல்லூரியில் சேர்த்துள்ளார். என்ன ஹாஸ்டல் தான் வசதி சரியில்லை என்று அடிக்கடி புலம்புவான்...


******XXXX******

எங்கள் டி.ஈ பாடத்துக்கு செந்தில் என்று ஒருவர் வந்தார். ரொம்ப எளிமையாக புரியும்படி நடத்துவார். அவர் இன்னோரு லெக்சரரோடு ஊட்டி பக்கம் போன கதையை பற்றி நான் சொல்லப்போவதில்லை. இது மணி பற்றி..

ஒரு முறை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் கேட்ஸ் - இணைப்புகள் - என்ற யூனிட்டை செந்தில் சார் நடத்திக்கொண்டிருந்தார்..வழக்கம்போல எனக்கு எதுவும் புரியவில்லை, கடனே என்று அவர் பலகையில் எழுதியதை எல்லாம் என்னுடைய நோட்டுப்புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன்..

மணி மென்மையாக எழுந்தான்.

சார், இந்த கேட்ஸ்ல கொஞ்சம் தப்பு இருக்கு..இப்படி இருந்தா இந்த கேட்ஸ் அமைத்து செய்யப்படும் எந்த சர்க்கியூட்டும் தோல்வி அடையும் சார்...என்றான்..

எனக்கு திக்கென்னு இருந்தது...ஏன் இவனுக்கு இந்த வேண்டாத வேலை என்று நான் நினைத்தபடி அவனை பார்த்தேன்...

செந்தில் சார் கொஞ்சம் ஷேக்கியாக அவனை பார்த்தார்...

சந்தேகம் எந்த நேரத்தில் எத்தனை முறை கேட்டாலும் லாடு லபக்குதாஸ் போல சொல்லிக்கொடுக்கும் ஆசாமி அவர்..

சார், இந்த கேட்ல சர்க்கியூட் போட்டா 11100001111000 என்ற மதிப்பீட்டை உள்ளீடு செய்தால் அந்த சர்க்கியூட்டே க்ராஷ் ஆகும் சார் என்றான்...

அதற்கு பெரிய ஒரு விளக்கமும் கொடுத்தான், ஆனால் அதுவும் எனக்கு புரியாமல் போனதால் இங்கே எழுத இயலவில்லை...

ஆனால் கடைசியாக செந்தில் சார் நான் இது பற்றி படித்துவிட்டு வருகிறேன் என்று அந்த வகுப்பை அத்தோடு நிறுத்திவிட்டு போய்விட்டார்...

அவன் கேட்ட அந்த சந்தேகம் பற்றி எங்கள் படிப்பு முடியும் வரை ஓய்வு நேரங்களில் லைபரிகளில் தேடிக்கொண்டிருந்தாராம்...

******XXXX******

இளமாறனும் அவனும் ரொம்ப தோஸ்த்துங்க...ஒரே காரணம் இளமாறனும் அதிகம் பேசும் டைப் இல்லை...அமைதியாக நிற்பான்...கிரிக்கெட்டில் மட்டும் காட்டான்...பவுலர் போடும் பந்து மாட்டிவிட்டால் ஆஸ்திரேலியாவிலோ அண்டார்ட்டிகாவிலோ போய் விழும் வகையில் சுத்துவான்...

இந்த டோமரும் மணியும் சேர்ந்து புதிதாக பக்கத்து தெருவில் குடிவந்திருக்கும் புஷ்கில் என்ற பிகரை சைட் அடிக்க போனார்கள்...

புஷ்கில் என்பது நான் வைத்த பெயர். அவளது உண்மையான பெயர் வானதி...ஒருமுறை ரேடியோவில் புஷ்கில் படா ஏப்பியாரு ஹே என்ற இந்திப்பாட்டு ஓடும்போது அவர் சாலையை கடந்துபோனாள்...

அதில் இருந்து அவளுக்கு புஷ்கில் என்று பெயர் வைத்தேன்...அது இப்ப எதுக்கு...

இளமாறனும் மணியும் சைட் அடிக்க போனானுங்களா...

திரும்பி வந்தபோது ஆர்வமாக கேட்டேன்...ஏண்டா - புஷ்கில பார்த்தீங்களா ? எப்படி இருக்கா என்றேன்...

அந்த பொண்ணை பார்க்க முடியல, ஆனா அவங்கம்மா வெளிய நின்னுக்கிட்டிருந்தாங்க...ரெண்டு பேரும் அவங்களை சைட் அடிச்சுட்டு வந்துட்டோம், சும்மா செம கட்டைடா என்றான்...

நான் ஒரு விறகு கட்டையை எடுத்து மணியை நோக்கி வீசினேன்...


******XXXX******

புகைப்பதில் இவனுக்கு நிகர் இவனே தான்...ஒரு முறை ஒரு போட்டி வைத்தோம்...

ஒரு பாக்கெட்டில் இருக்கும் அத்தனை சிகரெட்டையும் - ஒன்றன் பின் ஒன்றாக புகைத்து தள்ளமுடியுமா என்று...

டாபர், நான் வாங்கி கொடுத்த கிங்ஸ் பாக்கெட்டை ஒன்றை கூட மிச்சம் வைக்காமல் புகைத்து தள்ளியது...

டேய் மணி நீ மனுசனா இல்ல மிருகமாடா என்றேன்...

நாதாரி, எனக்கு ஒரு சிகரெட் கூட மீதி வைக்காத கோபம் எனக்கு...

******XXXX******

கோட்டாத்தூர் ரகு என்று ஒரு பெரிய ரவுடி...எங்கள் கல்லுரியில் படித்த லஷ்மி என்ற பெண்ணை லவ்விக்கொண்டிருந்தான்..

கல்லூரி பெண்களுக்கு ரவுடியை தானே லவ் பண்ண பிடிக்கும்...தமிழ் சினிமா எழுதிய விதியாச்சே...

லஷ்மியின் தங்கை சங்கீதா என்னுடைய வகுப்பில் இருந்தாள்...

மணி அவளை லுக்கு விடுவதை பொழப்பாக வைத்திருந்தான்...

மூன்று வாரத்துக்கு முன்பு அவள் அனிந்திருந்த மஞ்சள் நிற சுரிதாருக்கு என்ன நிறத்தில் துப்பட்டா அணிந்திருந்தாள் என்று அப்படியே நியாபகமாக சொல்வான்...

சங்கீதாவுக்கு அவன் கொடுத்த ஒரு லவ் லெட்டரை அவள் ரவுடி ரகுவிடம் சமர்ப்பித்துவிட்டாள்..

ரகு நேராக எங்கள் விடுதி அறையை தேடி வந்துவிட்டான்...

அப்போது நானும் மணியும் இளங்கோ அண்ணன் டீ கடைக்கு போயிருந்தோம்...

திரும்பி வரும் வழி கிட்டத்தட்ட ஒரு காடு..ஒரு பக்கம் காம்பவுண்டு சுவர் மறு பக்கம் வயல் வெளி. நாங்கள் டீ கடைக்கு போயிருக்கிறோம் என்று தெரிந்துகொண்டு, நாங்கள் வரும் வழிக்கு எதிர் திசையில் கைகளில் ஹாக்கி ஸ்டிக் போன்ற வஸ்துக்களுடன் ரகு வந்துகொண்டிருந்தான்..

மணி சங்கீதாவுக்கு லெட்டர் கொடுத்தது தெரியும், ஆனால் அவள் அதை ரகுவிடம் கொடுத்து தொலைவாள் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை...

எதிரில் வேகவேகமாக மூன்று பேர் வருவது மட்டும் தெரிகிறது, ஆனால் அவர்கள் எங்களை தேடித்தான் வருகிறார்கள் என்று தெரியாது...

கல்லூரி வாசலில் அடிக்கடி பார்த்த ரகுவின் முகம் மட்டும் எனக்கு அடையாளம் தெரிகிறது, ஆனால் அவனுடன் வரும் தடியன்கள் முகம் தெரியவில்லை...

டேய் உன்னோட பங்காளி வராம்பாரு....என்றேன் மணியிடம்..

மணி நிகழ்வை சற்றே யூகித்திருக்கவேண்டும்...

டேய் நீ இளங்கோ அண்ணன் கடைக்கு போடா நான் பேசிட்டு வரேன் என்றான்...

உள்ளூர உதறலோடு, டேய் அவனுங்க கிட்ட வெச்சுக்காதடா என்று நான் திரும்பி நடந்தேன், கிட்டத்தட்ட ஓடினேன்...

திருப்பத்தில் திரும்பும்போது மணியை அவர்கள் மூவரும் சூழ்ந்திருப்பது தெரிந்தது...

வேகமாக போய் இளங்கோ அண்ணனையாவது கூட்டிவரலாம் என்று கடைக்கு ஓடி, விஷயத்தை சொல்லி அண்ணன் - ஒரு ரெண்டு பேர் - கடையில் டீ குடிக்க வந்தவர்கள் - கூட்டிக்கொண்டு திருப்ப வரும்போது மணி மட்டும் திரும்ப வந்துகொண்டிருந்தான்...

டேய் மணி..இவன் கொடுத்த பில்டப்பை பார்த்தால் ரகு உன்னை போட்டிருப்பான்னு நாங்க கிளம்பி வறோம், என்னடா ஆச்சு...

நான் அவனுங்களை தட்டிட்டேன் என்று மென்மையாக சிரிக்கிறான்...

நான் நம்பவே இல்லை...

ரகு கால் உடைந்து மூன்று மாதம் ஹாஸ்பிட்டலில் இருந்த விஷயம் லேட்டாக தான் எனக்கு தெரிந்தது, மற்ற இருவரில் ஒருவனை ஒருமுறை நிரந்தர ஊனத்தோடு துறையூர் சங்கீதா பஸ்ஸில் பார்த்தேன்...

என்னைப்பார்த்ததும் சற்றே பீதியுடன் முகத்தை அவன் திருப்பிக்கொண்டது இன்றுவரை ஏன் என்று புரியவில்லை...

******XXXX******

ஒருமுறை மணி இரண்டு அல்லது மூன்று இருக்கும்...

தூக்கம் பிடிக்காமல் அல்லது திவ்யாவை பற்றி நினைத்துக்கொண்டு அல்லது தம் போட மொட்டை மாடிக்கு போகிறேன்...

அங்கே நான் கண்ட காட்சி...

மணிவண்ணன் மேல் சட்டை இல்லாமல் வெறும் தரையில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான்...

டேய் டோமரு ஏண்டா இந்த வேலை ? ஏன் வெறும் உடம்போட இப்படி படுத்திருக்க ? குளிரல ? என்றேன்...

இல்லடா...எல்லா விதமான புற சூழ்நிலைகளையும் பழகிக்கொள்வது சால சிறந்தது அப்படீன்னு அப்பா சொல்லியிருக்கார்டா என்று தூய தமிழில் ஏதோ உளறுகிறான்...

போடாங் ங்கொன்னியா...என்று அவனை கீழே இழுத்துவந்தேன்...

******XXXX******

கவிதை என்ற போர்வையில் அவன் எங்களை படுத்தும் கொடுமைகள் இருக்கிறதே ? அப்பப்பா...

ஆனால் அவன் நோட்டு போட்டு எழுதும் கவிதை கன்றாவிதான் அறையில் இருந்த கார்த்தி கோயிந்து இளமாறன் உட்பட யாருக்கும் புரியாது...

வார்த்தைகளை கோர்த்து கோர்த்து புதிய வார்த்தைகளை உருவாக்குவான், அது எங்களுக்கு புரியாமல் நாங்கள் ஓட்டித்தள்ளினால் இதெல்லாம் உங்களுக்கு எங்க புரியப்போவுது என்பான்..

இணைப்புகள் சாத்தியமானதால் இருப்பும் சாத்தியமானது
புள்ளிகள் ஒன்றினைந்தால் புரிபடும் சூத்திரங்கள்
பருவங்கள் காலங்கள் கடந்து நீ நடைபோடு
இரும்புகள் இழைவுகள் இணைத்து நீ உருவாக்கு

என்பது போல எழுதி குவிப்பான்...

போடா டோமரு என்று நாங்கள் புறந்தள்ளிவிடுவோம்...கவிதைகள் புரியாமல் போவது மட்டுமே காரணம்...

ஆனால் இதே போன்றதொரு கவிதையை அவன் கல்லூரி ஆண்டுவிழாவில் வாசித்தபோது எல்லோரும் தட்டோ தட்டென்று கையை தட்டினார்கள்...

நாங்க மைக் சரியில்லாததால் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை அதனால் கை தட்டிவிட்டார்கள் என்று பேசிக்கொண்டோம்...

******XXXX******

மாதம் ஒருமுறை கொடைக்கானல் போய் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருப்பான்....செல்போன் சார்ஜ் ஏற்றியது போல புத்துணர்ச்சியோடு திரும்புவான்...கையில் பைசா புரளும்...அக்கவுண்டுகளை எல்லாம் செட்டில் செய்யும் நேரமது, ஹி ஹி எங்களது அக்கவுண்டுகளையும் சேர்த்துத்தான்..

******XXXX******

என் எஸ் எஸ் கொடைக்கானல் சென்பகனூர் ட்ரிப் அறிவித்திருந்தார்கள்...மணி அந்த நேரத்தில் கொடைக்கானல் போயிருந்தான்..மேலும் அவன் வீடு சென்பகனூருக்கு அருகில் என்பதை அவனுக்கு வந்த ஒரு பார்சல் மூலம் நான் ஏற்கனவே தெரிந்துவைத்திருந்தேன்...

******XXXX******

சென்பகனூர் போய் இறங்கியவுடன் குளிர் உடலை ஊசி போல் குத்தியது...

குபேரன், ஆத்தூர் விஜய் இருவரும் சரக்கு எங்க கிடக்கும் தம்மு எங்கே கிடைக்கும் என்று போய்விட்டார்கள்..

நான் தனித்து விடப்பட்டேன்...மணி இங்கே தானே இருப்பான் அவனை தேடி போகலாம் என்று முடிவு செய்தேன்...அவனுக்கு வந்திருந்த ப்ரம் அட்ரஸ்படி சென்பகனூர் போஸ்ட் ஆபீஸ் அருகில் வீடு என்று தெரிந்தது...வலதுபுறம் சென்ற மண் பாதையில் இறங்கி நடந்தேன்...

******XXXX******

தொலைவில் ஒருவர் சைக்கிளை தள்ளிக்கொண்டு வருவது தெரிந்தது...அட...போஸ்ட்மேனே தான்...காக்கி யூனிபார்மும் அழுக்கடைந்த எழுத்தாளர் ஜோல்னா பையும்...

சார்...இங்கே தனசேகரன் அப்படீன்னு சொல்லிட்டு அமெரிக்காவில் இருந்து வந்தவர் சார்...அவர் பையன் கூட திருச்சியில காலேஜ்ல படிக்கிறான் சார்...

கொடைக்கானல் செண்பகனூர் - திரு தனசேகரன் விடு 

ஓ அவரா...அப்படியே நேரா போய் இடது புறம் இருக்க மேட்டுப்பாதையில ஏறுங்க...வெள்ளை பெயிண்ட் அடிச்ச பெரிய பங்களா...என்றார்...

எளிதாக கண்டுபிடித்து, கொஞ்சம் சிரமப்பட்டு மூச்சுவாங்க மேட்டில் ஏறி துருபிடித்து போயிருந்த கேட்டை மெல்ல தள்ளி திறந்து உள்ளே போனேன்...

கதவும் திறந்துதான் இருந்தது...மெல்ல திறந்து உள்ளே போனேன்...ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாமே என்பது தான் என்னுடைய எண்ணம்...

******XXXX******

முதல் அறை லேசாக திறந்திருந்தது...ஹும் ஹும் என்று ஏதோ வித்தியாசமானதொரு சத்தமும் வந்துகொண்டிருந்தது...

மென்மையாக அந்த கதைவை திறந்து பார்த்தேன்...

அதிர்ச்சியில் என்னுடைய இதயம் ஒரு நிமிடம் உறைந்தது...

மணி...மணி...தன்னுடைய கழுத்தை 360 டிகிரி கோணத்தில் திருப்பி நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்..

அவன் உடலெங்கும் வயர்கள் - ஏதேதோ கணிப்பொறிகளுடன் இணைக்கப்பட்டு...

அவன் வயிறு இதயம் இருக்கும் பகுதிகளில் நியான் எழுத்துக்கள் X25 என்று மின்னுகின்றது...

என் கையில் இருந்த ஷோல்டர் பேக் தானாக பொத் என்று கீழே விழுகிறது...

மணியின் சிவந்த கண்கள் திறக்கின்றன...

ரவியா வா வா...கொஞ்சம் சார்ஜ் இறங்கியிருந்தது, அதனால தான் ஊருக்கு வந்து சார்ஜ் போட்டுக்கிட்டிருக்கேன்...

என்னை பார்த்தா பயமா இருக்கா ? என்றான்...

ப ப ப பயம் ஒ ஒ என்று திக்கினேன்...

ஹா ஹா ஹா என்று அந்த அறையே அதிரும்படி சிரிக்கிறான்...

அமெரிக்க ராணுவ ரோபாட்டிக்ஸ் துறையில் வேலை செய்த என்னோட அப்பா நான் விபத்தில் சிக்கி என்னுடையய சிறு மூளை சேதம் அடைந்தவுடன் என்னுடைய சிறு மூளைக்கு பதிலாக அவருடைய கண்டுபிடிப்பை பொருத்தினார்...

மேலும் பல்வேறு உடல் பாகங்களையும் அவரே தயாரித்து பொருத்தினார்...தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் இயங்கக்கூடிய வகையில் அவை இருக்கும்...

என்னுடைய மூளையின் பல பாகங்கள் இன்னும் இயங்ககூடிய நிலையில் இருப்பதால் நான் பாதி மனிதன், பாதி இயந்திரன்..எனக்கு மனித உணர்ச்சிகளும் உண்டு...

எனக்கு நட்பு உணர்ச்சி உண்டு...அதனால் தான் உன்னிடம் எல்லாம் சொல்கிறேன்...அதே சமயம் எனக்கு கோபமும் உண்டு...என்னுடைய ரகசியங்கள் தெரிந்த யாரையும் உயிரோடு விடக்கூடாது என்றும், அமெரிக்க ரோபாட்டிக்ஸ் துறையில் இருந்து திருடிய பல உபகரணங்களோடு தப்பி வந்த என்னுடைய தந்தையாரை தேடி அவர்கள் இங்கே வந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று அப்பா சொல்வார்...

அதனால்...

என்னை மன்னித்துவிடு நன்பனே...வெளியே போயிருக்கும் என்னுடைய அப்பா வருவதற்குள் உன்னை மென்மையாக கொன்றாகவேண்டும்...அவனுடைய கை நீண்டது, அதில் புதிதாக ஒரு ரிவால்வர் மலர்ந்திருந்தது...என்னுடைய நெற்றி பொட்டை நோக்கி அந்த ரிவால்வரை உயர்த்தினான்...

ஆனால்...

தொடர்ந்து கரகரப்பான குரலில் பேசினான் மணி...

கவலைப்படாதே என் நண்பனே...அன்புத்தோழனே !! உன்னையும் என்னைப்போல ஒரு இயந்திரனாக மாற்றிவிடும் நுட்பம் எனக்கு தெரியும்...இனி நாம் ஒருவர் அல்ல நன்பா...நாம் இருவர்...இந்த உலகத்தை இயந்திரத் தொழில் நுட்பத்தால் ஆளலாம் வா...வா எந்திரா வா !!

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துவும் குண்டு ஹா ஹா ஹா !!!

சுட்டான் X25 அல்லது மணி...

********
*******
******
*****
****
***
**
*

பி.கு : இந்த விஷயங்களை டைப் செய்யாமல் நேரடியாக என் சிறு மூளை மூலமாக வலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன் !!

Comments

Unknown said…
ஆழி பதிப்பகம் மற்றும் சுஜாதா குடும்பத்தினர் நடத்தும் அறிவியல் கதைப்போட்டிக்காக எழுதப்பட்டது, நாள் திங்கள் நேரம் மணி 2:18 இடம் மால்மோ, சுவீடன், அய்ரோப்பா.
Namma Illam said…
கலக்கல்!
அருமை!...
படிக்கும்போதே நினைத்தேன் இது போட்டிக்கானது என்று...
அதில் பரிசு கிடைக்கிறதோ இல்லையோ..
உங்களை என்றாவது பார்த்தால்
நான் உறுதியாக தருகிறேன்...:-)
Unknown said…
தமிழ் பிரியன்...

நன்றி !!!! நன்றி !!! நன்றி !!!!
Unknown said…
அரை டிக்கெட்டு !!!

உங்களிடம் பரிசை வாங்குவதற்காக கண்டிப்பாக வருவேன்..!!!
படுபாவி இப்படியா எழுதுவ சூப்பரா இருக்கு...
Unknown said…
நன்றி தல !!!!

சரக்கு இல்லன்னா மூனு வருசம் ஓட்டமுடியுமா ப்ளாகுல ஹி ஹி ஹி
அருமை!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
sriram said…
அன்பின் ரவி
நிஜமாகவே சூப்பர் கதை. முடிவுக்கு வரும் வரை, கதை என்றே நினைக்கவில்லை. முதல் பரிசு 20000 Rs கிடைக்க வாழ்த்துக்கள். கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston USA
Unknown said…
வாங்க ஜெகா !!! நன்றி !!!!!
Unknown said…
அட !!!!

நன்றி ஸ்ரீராம்...!!!
Unknown said…
கதை எனதருமை சுஜாதா அவர்களுக்கு சமர்ப்பணம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
நீங்க இடம் மாறினதுக்கப்புறம் நான் போடுற முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்..

கதை கலக்கல் அண்ணே...
Pot"tea" kadai said…
சூப்பரு

கலக்கல்

ஃபர்ஸ்ட் ஆஃப் நாசம் ஏனென்றால் உண்மையில்யே அந்த மாதிரி கிராக்கிங்க இருக்கு நிறைய காலேஜ்ல.

இப்போ ***(அரசாங்க) தொழில் நுட்ப கல்லூரியில் ஒரு லெக்ட்சரர் சொந்த ஊரு பண்ருட்டி. என்னோட காலேஜ் மேட்...7வது செமஸ்டரில் 22 பேப்பர் எழுதினார் 10ல டிஸ்டிங்க்ஷன் மீதில பர்ஸ்ட் கிளாஸ். ஏறகனவே 70% வெச்சுருந்த பய எல்லாம் குண்டிகுள்ள தலைய விட்டுகிட்டானுங்க. லெக்ட்சரர் சார் 501 ரெண்டு கட்டு ஒரு நைட்டு அடிப்பாரு. ஆனா டே நைட், ஒன் டே, 20x20, டெஸ்ட் மேட்ச் எல்லாத்தையும் ஒரே செமஸ்டரில் ஆடி முடிச்சுட்டு 50 மணி நேரம் தூங்கினார்.
நல்லா வந்து விழுந்திருக்கு வரிகள்...
Unknown said…
உண்மை என்று நினைத்தே படித்து வந்தேன் 360டிகிரி வரை. நல்ல கதை. பரிசு பெற வாழ்த்துக்கள்.
Unknown said…
நன்றி தமிழன் கருப்பி...
Unknown said…
நன்றி பொட்டீக்கடை...

எப்படியோ பின்னூட்டத்துல ஒரு கெட்ட வார்த்தையாவது சேர்த்துட்டேள்...!!!!

நன்னா இருங்கோ !!!
Unknown said…
நன்றி சுல்தான் அண்ணே !!!!
உண்மை நிழ்வுகள் மாதிரியே இருந்திச்சு கடைசி வரையிலும்..(உண்மையும் இருக்குத்தானே :)
சூப்பர். நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்
தல

கலக்கிட்டிங்க...சூப்பரு ;))
Unknown said…
அட உஷா அவர்களிடம் இருந்தே பாராட்டா ???

நன்றி நன்றி நன்றி !!!
Unknown said…
நன்றி கோபி !!!!!!!
Unknown said…
உண்மைகள் இல்லாம எப்படி கதை எழுதுறது ? ஆனா எது உண்மை எது டுபாக்கூர் என்று கண்டுபிடிக்காத வகையில் அவுத்து உடுறது தான் எளுத்தாளர்களின் பணியாகும் :))))
கலக்கிட்டீங்க ரவி, அருமையான கல்லூரி சம்பவம் போல் கொண்டு சென்று அறிவியல் கதை.நான் படித்தவற்றில் கண்டிப்பாக மறக்க முடியாத ஒரு கதை.
Unknown said…
உங்கள் பாராட்டுக்கு நன்றி குடுகுடுப்பை !!!
We The People said…
கலக்கீட்டீங்க ... சிம்பிளி சூப்பர்!
Unknown said…
நன்றி வீ த பீப்புள் !!!!!!!
எந்திரன் என்று கூட பெயர் வைக்கலாம்.
super
Unknown said…
பாராட்டுக்கு நன்றி யாழ் !!!! என் பொண்ணு பேரு கூட யாழினி :)))
கலக்கல் அருமை, கண்டிப்பா இந்த கதைக்கு பரிசு கிடைக்கும்
Unknown said…
நசரேயன், ஏற்கனவே அரை டிக்கெட்டு கொடுக்கும் பரிசு கிடைச்சிருச்சே !!!
வாவ். சூப்பர் செந்தழல். கதை நல்லாவே இருந்துச்சு.

ஒரு விஷயம் தோணுது பதிவுல நீங்க கதை அதிகம் எழுதுறதில்லைங்கிறதால இதுவும் ஏதோ உங்க நிஜ அனுபவமோ (படங்கள் எல்லாம் சேத்து) என்கிற எண்ணமும் அதனால கடைசியில் திருப்பமும் ஷாக்கிங்கா இருக்குது. ஆனா கதை போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதை என்பது தெரிந்து வாசித்தால் அந்த சுவாரஸ்யம் கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு.
கலக்கல் அருமை
கலக்கல் ரவி...

ஆனா ஒரு சின்ன சந்தேகம். இந்த போட்டிக்கு கதைய அனுப்பறதுக்கு முன்னாடி பதிவுல ஏத்தலாமா? கேட்டு சொல்லுங்களேன்..!
ரவி! சூப்பரோ சூப்பர், ஏதோ காலேஜ் அனுபவம்னு நெனச்சுதான் படிச்சேன். சிறுகதைன்னு தெரிஞ்சா படிக்காமலே "கதாநாயகன் டயலாக் சூப்பர்"ன்னு போட்டிருப்பேன். என்னை நல்லா ஏமாத்திட்டிங்க! அதனாலத்தான் சொல்றேன் பரிசு உங்களுக்குத்தான். எனக்கும் அது போல ஒரு "மண்டை"பிரண்டு உண்டு ரவி!வாழ்த்துக்கள் சாரே!
sathiri said…
அப்பு ஜரோப்பாவிலைதானே நிக்கிறீங்கள் சந்திக்கிற இடத்திலை வைத்து நானே நெத்திப் பொட்டிலை போடுறன். நல்லாயிருக்கு
Unknown said…
ரொம்ப நல்ல இருக்கு ரவி.அசல் த்ரில்லர்.புனைவா நிஜமா என வாசகனை ஒரு முடிவிற்கு வர விடாமல் செய்யும் எழுத்தின் வீரியம் அசாத்தியமானது.வாழ்த்துக்கள்.
Anne,
Kathai super.. but ithu poatila perusa edupadumanu doubt. Sujatha Vinjana sirukathai thogupula ithe maathiri oru kathai iruku... but kadaisiya avan Alien appadinu mudiyum... ithu poati kathaingarathala athai padikum pothe guess panniduvanga. Accident, american father ellam padicha udane guess pannidalam :(

apparam 360 degreena one full circle. it should be 180 degree.

whatever flow excellent :)
நல்ல கதை ரவி.. எதிர்பாராத முடிவு, ஆனால் நீளம் கொஞ்சம் அதிகம் என்று தோன்றுகிறது.. பாராட்டுகள் ரவி..
Anonymous said…
Very Interesting college story. As I have just finished my college life, It was very interesting to me...
Unknown said…
ரவி,

ரொம்ப நல்லா வந்திருக்கு. :)

காலேஜ் விவரணைகள கொஞ்சம் கத்தரிச்சா இன்னும் விறுவிறுப்பா இருக்கும்.

இதோட பீட்டா வெர்சனை நீங்க ஏன் ரிலீஸ் பண்ணக்கூடாது? :)
Maran said…
Paathi unmai...meethi karpanai :)
Vazthukkal Nanba

Popular Posts