எங்கோ ஒரு புரவி கனைக்கும் சப்தம் !!!
வடக்குத்தெருவில் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்த இரு ஸ்ரீவைஷ்ணவர்கள் பேசிக்கொள்வதை நீங்களும்தான் கேளுங்களேன்...
இந்த களப்பிரன் நரசிம்மனின் ஆட்சிக்கு என்றுதான் ஒரு முடிவு வருமோ ? நமது ஆச்சாரியாரை ஊரறிய வெட்டி வீழ்த்தினானே ? ஸ்ரீவைஷ்ணவம் என்று பேச்சை எடுத்தாலே மூச்சை நிறுத்திவிடுகிறானே...
மெதுவாக பேசும் அய்யா...நாடெங்கும் அவனது ஒற்றர்கள் நிறைந்திருக்கும் காலமிது...
அவன் காதுக்கும் நாம் அவனைப்பற்றி பேசுவது சென்றால் நமது தலைகள் தரையில் உருளும் என்பதை நினைவில் கொள்ளும்...
அட இந்த நேரத்தில் அவனைப்போலவே அவனது ஒற்றர்களும் சம்போகத்திலும் மதுபோதையிலும் சுகித்திருப்பார்கள்..
கண்ணிப்பெண்கள் நிம்மதியாக தெருவில் கூட தண்ணீர் எடுக்க நடமாட முடிவதில்லை அய்யா, அந்த ரங்கநாதன் என்றைக்குத்தான் நமது குரலுக்கு செவி சாய்ப்பானோ தெரியவில்லை...
************
அடுத்தநாள் அதிகாலை சூரியன் சோம்பலாக விழித்தெழும் நேரம்...மூன்று புரவிகள் அந்த வீட்டின் வாசலில் வந்து நிற்கின்றன..
அதிகாரக்குரல் ஒன்று பூமி அதிர எழுகிறது..
ஏய் யாரங்கே !!! வெளியே வா...
இந்த வீட்டில் நேற்று இருந்த இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் எங்கே ? மன்னரை பற்றியா புறம் பேசுகிறீர்கள் ? உங்களுக்கு சரியான பாடம் புகட்டவே இங்கு வந்துள்ளோம்...
முதிர்ந்த பெண் ஒருவர் வெளியே ஓடி வருகிறார்.
"அய்யா அவர்கள் என்னுடைய பிள்ளைகள் தாம் அவர்களை விட்டுவிடுங்கள்..."
எங்கே அந்த பேடிகள் ? அவர்கள் வீட்டில் இருந்துகொண்டு பெண்ணை அனுப்புகிறார்களா ?
வெளியே வந்த இருவரும் கூனிக்குறுகி நிற்கிறார்கள்...
அய்யா மன்னித்துவிடுங்கள், அரசரிடம் எங்களை அழைத்துப்போங்கள்...நாங்கள் அவரிடம் விளக்கம் சொல்கிறோம்...
மெல்ல முதல் புரவியில் இருந்த வீரன் வாளை உருவுகிறான்...
உங்களை மன்னிக்கும் அதிகாரம் பெற்ற அரசனே வாளை உருவிவிட்டான் ஆஹ்ஹா ஹா என்று அதிகார மமதையில் சிரித்தபடி தான் அணிந்திருந்த முகமூடியை விலக்குகிறான் நரசிம்மன்...
எளியோருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அவன் வாள் அந்த இரு ஸ்ரீவைஷ்ணவர்களின் உயிரை குடிக்கிறது...தலைகள் தரையில் உருளுகின்றன...
என்ன கந்தா, உன்னுடைய ஒற்றுத்தகவல் இன்றைக்கு என் வாளுக்கு தீனி போட்டுவிட்டது, நாளைக்கும் நல்ல தகவலோடு வா...ஹா ஹா !!!
மன்னர் மன்னா...தங்கள் சித்தம் என் பாக்கியம்...!!!!
******************
புரவிகள் திரும்புகின்றன...
அதிகாலை நேரத்தின் அமைதியை குலைத்துக்கொண்டு மெல்ல வடக்கு வீதியில் நடைபோடுகிறான் நரசிம்மன்...
தண்ணீர் குடத்தை தலையில் வைத்தபடி காலையில் எழுந்த கதிரவனை மாலையில் மறைத்து எழும் முழு நிலவை ஒத்த முகத்துடையாள், பிரம்மனே நமது படைப்பில் இப்படி ஒரு நிறைமதியா என்று வியந்து போகவைக்கும் அதரங்களை உடைய பொன்னி எதிரில் வருகிறாள்...
அவள் மனதிலோ கிழக்கு வீதியில் வசிக்கும் மாறன் இன்றைக்கும் புரவியில் அலுவல் பணிக்காக காலை நேரத்தில் செல்வானா ? அவன் தோள்களில் சாயும் நாள் எந்நாளோ என்று எண்ணங்கள் ஊஞ்சலாடுகின்றன...
வழியில் மூன்று புரவிகள் அவளை கடந்துபோகின்றன...அவள் காந்த விழிகளை ஏறெடுத்து ஆர்வமாக பார்க்கிறாள்...
ஹும் மாறன் இன்றைக்கு எதிரில் வரவில்லை...ஆனால் யார் இவர்கள் இந்த நேரத்தில் இவர்களை பார்த்ததில்லையே என்று எண்ணமிட்டவடியே பாதையை விட்டு ஒதுங்கி நிற்கிறாள்...
அவளை கடந்துபோகும் புரவிகளில் இருந்து இரு விழிகள் அவளை விழுங்கிவிடுவது போல் பார்க்கின்றன...
கந்தனை நோக்கி திரும்புகிறான் நரசிம்மன்...
கந்தா...உன்னை நான் தண்டிக்கப்போகிறேன்...
மன்னா !!!!
அரண்மனையில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்த பேரழகியை என் அந்தப்புரத்துக்கு இன்னும் கொண்டுவராத உன்னை தண்டிக்கத்தான் வேண்டும்...பரவாயில்லை...இன்று இவளை என் மஞ்சத்தில் கிடத்துவது உன் பணி..
ஆகட்டும் மன்னா...
சரி இப்போது சொல்...யார் இவள்...
கடந்த ஆண்டு உங்களுக்கு சரியான தாது புஷ்டி லேகியம் தயாரிக்காமல் தன்னுடைய உயிரை உங்கள் வாளின் முனையில் தொலைத்த வைத்தியன் ஒருவனின் மகள் மன்னா இவள்...
சென்ற ஆண்டு தான் பூப்பெய்தினாள்...அதற்குள் அபார வளர்ச்சி...அற்புதமான அழகியாகிவிட்டாள் மன்னா...இப்போது தன்னுடைய பாட்டியுடன் வசித்து வருகிறாள்...
போதும் போதும்...அதிகம் பேச்சு வேண்டாம்...அவளை முதலில் சென்று தூக்கி வந்து அந்தப்புரத்து தாதிகளை கொண்டு அலங்கரிக்கச்சொல்...அழகை ஆராதிக்க தாமதம் காட்டுவதில்லை நான்...ஹா ஹா ஹா, வெடிச்சிரிப்புடன் புரவியை செலுத்தினான் நரசிம்மன்....
*************************
பளார் என்ற அறை விழுகிறது !!! அறைந்தவள் தாதி.
ஏண்டி, அலங்காரம் செஞ்சுக்கிடுன்னா மறுக்கிறே ? திமிரா ? அரசனின் படுக்கையில் உன்னுடைய திமிர் எல்லாம் அடங்கிவிடும்...
மேலும் இரண்டு பெண்டிர் அவளது கைகளை பிடித்துக்கொள்ள அவள் விருப்பம் இன்றி வைரங்கள் பதித்த வளையல்கள் அவளது மெல்லிய கரங்களில் நுழைகின்றன...
ம்ம்ம் முடிந்தது...இழுத்துச்செல்லுங்கள் இவளை மன்னரின் படுக்கைக்கு...இவளோடு இணைந்து இந்த ஆண்டிலேயே பதினேழு ராணிகள்...ஹும்...என்று கனைத்தபடி ஆணை இருகிறாள் தாதி..
*************************
மன்னா, அழைத்துவந்துவிட்டோம்...
வெளியில் இருந்து குரலை உயர்த்துகிறான் மாயன்...
மாயா, உள்ளே அனுப்பிவிடு, நீ வெளியிலேயே காத்திரு...சென்ற வாரம் ஒத்துழைக்காத ஒருத்தியின் பிணத்தை அப்புறப்படுத்திய சம்பவத்தை சொன்னாய் அல்லவா இவளிடம்...
உள்ளே தள்ளப்படுகிறாள் பொன்னி...
ஆஹா என்ன ஒரு அழகு...இவ்வளவு காலம் உன்னைப்பாராமலே இருந்துவிட்டேனே...அழகி...உன்னை செதுக்கிய உன் தந்தையை நான் கொன்றதால் அச்சம் வேண்டாம்...
நான் அழகை ஆராதிப்பவன்...ஒத்துழைப்பு கொடுத்தால் நீ அந்தப்புரத்தில் அரசியாகலாம்...என்ன சொல்கிறாய்...
கள்வெறியுடனும் காம வெறியுடனும் இரையை கொள்ளும் ஓநாய் போல நெருங்குகிறான் நரசிம்மன்...
பொன்னி முதல் முறையாக தன் மெல்லிய உதடுகளை திறந்து பேசினாள்..
மன்னர் மன்னா...நான் உங்கள் எதிரில் நடனம் ஆட விரும்புகிறேன்...!!!
***********************
ஆஹா ஆஹா...அற்புதம்...ஏய் மாயா....நமது புதிய அரசியாரை பார்...இவர் தான் இனி மஹாராணி...மற்றவர்களை எல்லாம் அந்தப்புரத்தில் இருந்து துரத்திவிடு...
ஆகட்டும் மன்னா...
அப்புறம், கூப்பிடு அந்த நட்டுவாங்கம் வாசிப்பவளை...உன் புதிய ராணியார் நடனம் ஆடப்போகிறாள்...ஹா ஹா !!!
மன்னா...
சொல் எண் கண்ணே !!!
என்னுடைய இல்லத்தில் நான் வளர்த்துவரும் கொய்யாப்பழங்களை உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்...அவை அற்புதமான சுவையுடையவை...
யாரங்கே...
வந்தேன் மன்னர் மன்னா...
வடக்கு வீதியில் இருக்கும் இவள் வீட்டில் சென்று கொய்யாப்பழங்களை பறித்துவா !!!
நட்டுவாங்கத்தை வைத்துக்கொண்டு ஏன் அங்கே நிற்கிறாய்...வந்து இசை...இவள் ஆடட்டும்...என் மஞ்சத்தை அலங்கரிக்க முதல் முறை வந்த எந்த பெண்ணிற்கும் இல்லாத பண்பு இவளிடம் உண்டு...அலறி துடிக்கும் மற்றவர்கள் எங்கே, என்னை ஆடி மகிழ்விக்க விரும்பும் இவள் எங்கே ஹா ஹா ஹா...
மென்மையாக பாதங்களை எடுத்துவைத்து பொன்னி ஆட ஆரம்பிக்கிறாள்...
அற்புதமான அதரங்களை அசைத்து தேவ கன்னிகையை போல ஆட ஆரம்பிக்கிறாள்...
சின்னக்குரலில் பாடலும் அவளிடமிருந்து எழும்புகிறது...
காத்திருந்தேன் என் அன்பே
வருவாயா
உயிர் தருவாயா
மன்னா...பழங்கள் வந்துவிட்டன...
அப்படி வைத்துவிட்டுப்போ...
சுற்றி சுழன்று ஆடியபடி அந்த பழங்களில் ஒன்றை எடுக்கிறாள் பொன்னி...
ஏய் நட்டுவாங்கம், வெளியே போ...போதும் என்னவள் ஆடியது...எனது பித்தத்தை தலைக்கேற வைத்துவிட்டாள்...
வளைக்கிறது அவனது முரட்டுக்கரம் அவளது மெல்லிய இடையை !!! பருந்து ஒரு கோழிக்குஞ்சை அழுத்துவதுபோல...
********************************
மன்னா, இந்தாருங்கள் இந்த பழத்தை ஒருமுறை சுவையுங்கள்...
உன் இதழ்களை தா, அதில் அமுதம் பருகிவிட்டு இந்த கனியை சுவைக்கிறேன்...
சினுங்குகிறாள் பொன்னி...
சுவையுங்கள் மன்னா...
சரி உன் சித்தப்படி...
அவளை இரண்டு கண்களால் பருகியபடி கடிக்கின்றான் கொய்யாப்பழத்தை...
********************************
கண்கள் பூக்கின்றன...தலை கிறுகிறுக்கிறது...
ஏய் என்ன பழம் இது...
இடையில் இருந்து தளர்ந்த அவன் கைகளை விலக்கியபடி சற்று தொலைவு சென்று பின் திரும்பி அவனை பார்வையால் எரிக்கிறாள் பொன்னி...
உனக்காகவே தயாரிக்கப்பட்ட பழம்...வேரில் ராஜ நாக சர்ப்பத்தின் விஷத்தை துளித்துளியாக விட்டு என் தந்தையார் தயாரித்த பழம்..உன் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணியிருந்த அவரை உன் வாள் பதம் பார்த்தது....
நரசிம்மனின் உடலில் நீலம் பாரிக்கிறது, வாயில் வெண்ணிற நுரை...
"அய்யோ மன்னருக்கு என்னவோ ஆகிவிட்டது மாயன் அண்ணே வந்து பாருங்களேன்..."
இதோ வந்துவிட்டேன் அரசி !!!! தலை குனிந்தபடி மாயனும், புதிய காவல் தலைவன் மாறனும் உள்ளே நுழைகிறார்கள்...!!!
*****************************************
15 comments:
Project Management
அந்தப் புறம்.........??????????????
வாட் இஸ் ஏப்பனிங்!!!!
கொய்யா கதையில நாவல் வாடை வீசுது???
:))))
கண்ணிப்பெண்கள்
:-)))))
கதை ரசிக்கும்படி இருக்கிறது. தமிழ்மணப் போட்டிக்கு தயாராகிறீர்களோ!
வாங்க சுரேஷ்...என்ன சொல்லவறீங்க ?
நன்றி டிவிஆர் ஆமா ஏன் சிரிப்பான் ? ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அது ???
சுவனப்பிரியன் அண்ணாச்சி...250 ரூபாய்க்கு ஒரே ஒரு பிஸா தான் வாங்க முடியும் :)
அதுவும் சுவீடிஷ் குரோனரில் கண்வர்ட் செய்தால் ஒரு பியர் கூட வாங்க முடியாது...
நீங்க எதாவது பரிசு குடுங்க ...
நன்றி நசரேயன்....
BEAUTIFUL HISTORICAL SMALL STORY...IF YOU COULD POLISH IT...DEFINETELY YOU COULD COME OUT WITH A NEW HISTORICAL NOVEL....PUTHINAM...I HAVE NO DOUBT ABOUT IT...KEEP IT UP..
நன்றி நன்றி நன்பரே
NICE STORY செந்தழல் அண்ணே
நன்றி மிஸஸ்.டவுட் தங்கச்சி !!!
அடிக்கடி இங்கே எண்ட்ரி குடுக்கவும்..
மிகவும் அருமை, நான் தங்களிடம் சற்றும் எதிர்பாராத எழுத்து நடை இது திரு. செந்தழல் ரவியாரே. இந்தாரும் பிடியுங்கள் பொற்கிழியை.
Post a Comment