சுஜாதா நினைவு கதைப்போட்டியாம்...முதல் பரிசு 20 ஆயிரமாம்...இரண்டாம் பரிசு பத்தாயிரமாம்...மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு சிறப்பு பரிசு 5 ஆயிரமாம்..
இதுல ஒரு மேட்டர் என்னன்னா, சுவீடன்ல இப்ப நானும் வினையூக்கியும் தான் இருக்கோம்...முதல் பரிசுக்கு போட்டிபோடலைன்னானும் சிறப்பு பரிசுக்கு போட்டி போட்டே தீருவேன் வினையூக்கியோட...!!!
லக்கி அதிஷா நர்சிம் பரிசல் கார்க்கி சஞ்ஜெய் குசும்பா டாக்டர் வாத்தியார் அனைவரும் கற்பனை எருமையை ச்சே குதிரையை தட்டி கும்முனு ஒரு கதையை எழுதுங்கப்பா !!!!
ஏற்கனவே சிரில் அலெக்ஸ் போட்ட அறிவியல் கதையை உல்டா செஞ்சு போடக்கூடாது..(அதோட முடிவு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் யாராவது சுட்டி கொடுங்களேன் ப்ளீஸ் )
*************************
மேல்விவரம் இங்கே !!!
*************************
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தையும் அறிவியல் வேட்கையையும் வெளிப்படுத்தும் வகையிலான அறிவியல் புனைகதைகள் நவீன இலக்கியத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. அந்த வகையில் உலகத் தரம் வாய்ந்த பல அறிவியல் புனைகதைகளை மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழில் எழுதியிருக்கிறார். அவரது தாக்கத்தில் இன்று பலரும் தொடர்ந்து அறிவியல் புனைகதைகளை எழுதிவருகிறார்கள்.
தமிழில் அறிவியல் புனைகதை இலக்கியத்தின் முன்னோடியான எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முதல் ஆண்டு நினைவையொட்டி, அவரது நினைவைப் போற்றும் விதமாக நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டி ஒன்றைத் நடத்தி, தமிழில் அறிவியல் புனைகதை மரபை தொடர்ந்து வளர்த்தெடுக்க எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரின் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் சென்னையிலிருந்து இயங்கும் ஆழி பதிப்பகமும் இணைந்து முடிவு செய்துள்ளன.
உலகெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம். இந்த போட்டியில் தேர்வு செய்யும் கதைகளுக்கு சுஜாதா குடும்பத்தினர் சார்பில், அமரர் சுஜாதா டிரஸ்ட் சார்பில், 2009ம் ஆண்டின் சிறந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்ற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசாக ரூ.20,000 ரொக்கமும் இரண்டாம் பரிசாக ரூ.10,000 ரொக்கமும் அளிக்கப்படும். சிறப்புப் பரிசுகளாக ரூ.5000 இந்தியா, இலங்கை, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக், பிற நாடுகள் என தலா ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒன்று என அளிக்கப்படும்.
இவற்றுடன் அனுப்பப்படும் கதைகளில் இருந்து சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆழி பதிப்பகத்தின் மூலமாக ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடப்பட உள்ளன.
அமரர் சுஜாதாவின் புதல்வரும் சுஜாதா அறக்கட்டளையைச் சார்ந்தவருமான திரு. கேசவா ரங்கராஜன் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், “படைப்புத்திறன் மிக்க இளம் தமிழ் எழுத்தாளர்களை இனம்கண்டு அடையாளப்படுத்துவதில் அப்பாவுக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் உண்டு. அப்படிப்பட்டவர்களின் திறமையை வளர்த்துவிடுவதற்கான வாய்ப்புகளை அவர் உருவாக்கித் தருவார். அவர்களின் திறமை எண்ணற்ற வாசகர்களை சென்றடைவதற்கு வசதியாக வெளிவருவதற்கான உதவிகளை அப்பா செய்வார்.” என்று சொன்னார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், “இந்தப் போட்டியும் அதையேதான் செய்கிறது. அவரது தலைசிறந்த பணியை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கைப் பிறக்கிறது. நீங்கள் உங்கள் கற்பனைத்திறனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சியில் எங்களோடு இணைந்து நில்லுங்கள் என்றும் வரவேற்கிறேன்” என்றார்.
“அறிவியல் தமிழ் எழுத்துகள், அறிவியல் புனைகதைகள் மூலம் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு புது யுகத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர் அமரர் சுஜாதா. அவரது நினைவாக அவரது குடும்பத்தினருடன் இணைந்து ஒரு அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துவதற்கும் அவற்றை நூலாகத் தொகுத்து வெளியிடுவதற்கும் எங்களுக்கு அமைந்திருக்கும் வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். இளம் தமிழ் எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இதில் கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம்" என்று ஆழி பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு. செ. ச. செந்தில்நாதன் கூறினார்.
இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையாளருமான சந்திரன். "எழுத்தாளர் சுஜாதவுடன் 6 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவன், அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு பெற்ற சிலரில் ஒருவன் என்ற வகையில் - தமிழில் அறிவியல் புனைக்கதைகள் என்பது குறித்து எழுத்தாளர் சுஜாதா கொண்டிருந்த கருத்தும், கற்பனையுமே ஒரு அறிவியல் புதினம் என்பது என் கருத்து. ஏற்கனவே இது போன்ற அறிவியல் புனை கதை போட்டிகள் தொடர்பான கருத்தாடல்களின் போது நான் அவருடன் விவாதித்திருக்கிறேன்.” என்று கூறினார்.
தமிழ்கூறு நல்லுலகத்தின் பிணைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்த அமரர் சுஜாதாவினி நினைவாக நடத்தப்படும் இந்த போட்டி அவரை நினைவுகூர்வதற்கான சரியானதொரு வழிமுறையாகவும் என்று எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பதிப்பகமும் கருதுகிறது.
மேலதிக விவரங்களுக்கு
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600024
தொலைபேசி: 1-44-4358 7585
செல்பேசி: 91-99401 47473
மின்னஞ்சல்: sujatha.scifi@gmail.com
வலையகம்: www.aazhipublishers.com/sujatha.html
****
***
**
*
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
28 comments:
ஹை குட் ஈவனிங்!!!
தன்டோரா, இத தமிழ்மணம் காதுல ஓது!!!!!
250 ரூப்பியா அல்ல...20 ஆயிரம்...
யூ எஸ் ஸுல இருந்து என்னத்த ? அட்லீஸ்ட் ஒரு 5000 தமிழ்மணம் சிறந்த பதிவருக்கு கொடுத்தா எவ்ளோ நல்லாருக்கும்...
தமிழ்மணம் நிதி ஆதாரத்தை பதிவர்களிடம் இருந்துகூட திரட்டலாம்...
என்னத்த சொல்ல !!!!
தமிழ்மணத்த புரவுசிங் செண்டர்ல இருந்தெல்லாம் பார்த்தோம்யா...
கொஞ்சம் போட்டு கொடுங்கய்யா !!!
http://cyrilalex.com/?p=450
எனக்கும் ஏதாவது பாத்து செய்யுங்க
எனக்கும் அறிவியலுக்கும் சம்மந்தம் இல்லை.
நான் என்ன கதை எழுதுறது
சிரில்...
கதைகள் மூன்றும் படித்தேன்...
ஜெயமோகன் சாருக்கு அனுப்புறதுக்கு முன்னாடி அறிவியல் புனைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கலாமே ?
அறிவியல் புனைக்கதைக்கு எந்த இலக்கணமும் இல்லாத கதைக்கு எப்படி முதல் பரிசு ?
போங்க இது சுத்த போங்கு ஆட்டம்...!!!
ஹிஹி எட்றா பேனாவ எழுதுடா கதைய...
அறிவியல் எப்படிங்க கதை ஆகும்? அதெல்லாம் உண்மைன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன்..
//
லக்கி அதிஷா நர்சிம் பரிசல் கார்க்கி சஞ்ஜெய் குசும்பா டாக்டர் வாத்தியார் //
(மனசுக்குள்)இன்னுமாடா இந்த ஊர் நம்மளையெல்லாம் நம்பிகிட்டிருக்கு!
ரவி.. நன்றி தோழரே...!
// கார்க்கி said...
அறிவியல் எப்படிங்க கதை ஆகும்? அதெல்லாம் உண்மைன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன்../
இவன என்ன பண்ணலாம்....
அறிவியல்ல
இயற்பியல்,
வேதியல்,
உயிரியல்ன்னு
மூணு இருக்கு,
எதுல கதை எழுதுறது?
முதல் பத்தியை படித்ததும் செல்வந்தர் ரவி நடத்தும் போட்டி என்று நினைச்சேன் இருந்தாலும் மைல்டா ஒரு டவுட் இருந்துச்சு ரவி இவ்ளோ கம்மி அமொவுண்ட் போட்டி எல்லாம் வைக்க மாட்டாரே என்று,
நானும் கதை படி மிகவும் ஸ்மார்ட்டான ஹீரோ கொரியா போகிறார் என்று கற்பனை குதிரையையும் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்... கற்பனை குதிரைய நான் ஓட்ட ஹீரோ கொரியா ”குதிரைய” ஓட்ட என்று செம விருவிருப்பாக கதை வந்தது:)))
பரிசல் அவியல் சிறுகதை இல்லை அறிவியல் சிறு கதை.
அறிவியல் பாட சம்மந்தப்பட்டது என்பதால் பிற்காலத்தில் என் வம்சத்தினர் ஒருவராவது பங்கெடுக்க முயற்சி செய்ய வைக்கிறேன்.
குசும்பன் என்னோட சார்பா பதில் கொடுத்ததுக்கு நன்றி !!!!!!
வால்பையன்...
சிரில் அலெக்ஸ் என்றால் வரலாறை எழுதினாலும் அறிவியல் என்று ஒத்துக்கொள்வார்...
ஆனால் இது சுஜாதா குடும்பத்தினர் நடத்தும் போட்டியாம்...
சரி நீங்க கெமிஸ்ட்ரி டிப்பாட்மெண்ட்ல இறங்குங்க...
//நீங்க கெமிஸ்ட்ரி டிப்பாட்மெண்ட்ல இறங்குங்க... //
அப்படியே நாலு கெமிக்கல் பேர சொல்லுங்க!
வேற யாராவது எழுதுற கதையில
இடையில் மானே தேனே போடுற மாதிரி சேத்து புடுறேன்
ஹீ ஹீ ஹீ
//அறிவியல் பாட சம்மந்தப்பட்டது என்பதால் பிற்காலத்தில் என் வம்சத்தினர் ஒருவராவது பங்கெடுக்க முயற்சி செய்ய வைக்கிறேன்.//
இதை நான் வழிமொழிகிறேன்
அறிவியல் புனைவுன்னு வெச்சுக்கோங்க கார்க்கி...
அறிவியல் இல்லாமல் எழுதினால் சிரில் அலெக்ஸ் மாதிரி பரிசு குடுப்பாங்களா தெரியல...
அதனால கதையோட தலைப்புலயாவது அறிவியல்னு வைங்க...
ரெண்டு மூனு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கட்டாயம் இருக்கனும்...
அதிஷா...
அறிவியல் புனைவில் ரோபோ சென்னைத்தமிழ் பேசுறது மாதிரி வெய்யுங்க...:))))
//செந்தழல் ரவி said...
அறிவியல் புனைவுன்னு வெச்சுக்கோங்க கார்க்கி.//
என்னது? அறிவியல் புனைவா??????????? அப்போ நியூட்டனின் விதிகள், பாஸ்கல் விதி, எல்லாம் மோகனின் விதி மாதிரி கற்பனையா?
:)))
அய்யா,
எனக்கு ஒரு சந்தேகம்.
இந்த புவியியல் மற்றும் குடிமையியல் ரெண்டுமே அறிவியல் சம்பந்தப் பட்ட சமாச்சாரங்கள் தானே?
அப்போ, அதப் பத்தி கத, கித எழுதலாமா?
ethayaavathu ezuthi tholanga vedigundu murugesan
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே. முடிந்தால் நானும் முயற்சி செய்து பார்கிறேன்.
நல்ல தகவல்
பரிசினை வெல்ல வாழ்த்துக்கள்.
//////ஏற்கனவே சிரில் அலெக்ஸ் போட்ட அறிவியல் கதையை உல்டா செஞ்சு போடக்கூடாது..(அதோட முடிவு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் யாராவது சுட்டி கொடுங்களேன் ப்ளீஸ் )///////
20.10.2008 அன்று முடிவுகள் வந்துள்ளன தழலாரே!
சுட்டி : http://cyrilalex.com/?p=450
Post a Comment