எனக்கு மிக நெருக்கமான ஒருவர் தனக்கு ஒரு வலம்புரி சங்கு (பூசைப்பொருள்) வேண்டும் என்று கேட்டுவிட்டார்...
என்னை நோக்கி பூரிக்கட்டையை எறியும் பவர் உள்ளவர் என்பதால் மட்டும் அல்ல, அவருடைய விருப்பங்களை நிறைவேற்றுதல் என்னுடைய கடமை என்பதாலும், இந்த வலம்புரி சங்கை பெற்று தரவேண்டிய நிர்பந்தம் உள்ளது...
வலம்புரி சங்கை பற்றி நான் அறிந்தவரை அது ஒரு ம்யூட்டண்ட் ( ட்ரிப்பிள் எக்ஸ் படத்தில் வருமே இந்த வார்த்தை), ஒரு பிழற்சி மூலமாக உருவாகும் ஒரு உயிரினம் என்று அறிகிறேன்...
ஆறு விரல் மாதிரி, அபூர்வமாக ஏற்படக்கூடிய பிழற்சி !!!
உங்களில் யாருக்காவது தெரியுமா ? இந்த வலம்புரி சங்கை எங்கே கொள்வனவு செய்வது அல்லது பெறுவது என்று ?
உதவி செய்யவும்...!!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
51 comments:
இதுக்கு பேசாம பூரிக்கட்டைல அடியே வாங்கிக்கலாம் தலை! கிடைக்கலைன்னு சொல்லிடுங்க.
///மங்களூர் சிவா said...
இதுக்கு பேசாம பூரிக்கட்டைல அடியே வாங்கிக்கலாம் தலை! கிடைக்கலைன்னு சொல்லிடுங்க.///
:)))
அண்ணா ஒரு இன்பர்மேசனை இப்படி கூட கிரியேட்டிவிட்டியோட பதிவா மாத்தற திறமை உங்களுக்கு மட்டும் எப்படி ?
வாவ் சூப்பருண்ணா
கிடைக்கும், ஆனா அதுக்கான விலை அதிகம். (என்னைப் பொறுத்தவரையில்). கடலோர மீனவர்களிடன் கேக்கனும், ஏதோ மரியுனாவ தேடுற மாதிரி தேடிப் புடிச்சொம். வெலைய கேட்ட உடன் எஸ்ஸாகிட்டோம்.
ஆமா எத்தினி நாளைக்கி தான் பதிவெழுதாதீங்கனு ஊதின சங்கையே ஊதறது...
அதான் வலம்புரி சங்கு கேட்டிருப்பாங்க
அத ஊதிட்டா மட்டும் நீங்க திருந்திருவீங்களா..
இளா ... இந்த மரியுனா எங்க கிடைக்கும்னு தெரியுமா?
"இது என்ன?" அப்பிடீன்னு பதிவைப் போட்டுட்டு பதில் சொல்லாம இருந்தா எப்பிடி? ஐயா, சாமி, சித்த பதிலைச் சொல்லுங்க ஐயா!
///இதுக்கு பேசாம பூரிக்கட்டைல அடியே வாங்கிக்கலாம் தலை! கிடைக்கலைன்னு சொல்லிடுங்க.///
யோவ் எங்க வீட்டு பூரிக்கட்டை இரும்புலயோ சில்வர்லயோ ஒரு உலோகத்துல இருக்கு...
அதிஷா ரொம்ப புகழ்ந்துட்டீங்க, வெக்கத்துல பேச்சே வரல...
///கிடைக்கும், ஆனா அதுக்கான விலை அதிகம். (என்னைப் பொறுத்தவரையில்)///
எவ்ளோ ???
///கடலோர மீனவர்களிடன் கேக்கனும், ///
யோவ் எந்த மீனவன் சிட்டி செண்டர்ல இருக்கான் ?
///ஏதோ மரியுனாவ தேடுற மாதிரி தேடிப் புடிச்சொம். வெலைய கேட்ட உடன் எஸ்ஸாகிட்டோம்.
//
மரியுனான்னா என்னா ? ஹாலிவுட் நடிகையா ?
///
//"இது என்ன?" அப்பிடீன்னு பதிவைப் போட்டுட்டு பதில் சொல்லாம இருந்தா எப்பிடி? ஐயா, சாமி, சித்த பதிலைச் சொல்லுங்க ஐயா!
Wednesday, December
//
????????????
????????????
கடலோரக்கவிதைகள் சின்னப்பதாஸ் அவர்களிடம் கேளுங்கள். :-)
//எவ்ளோ ???//
2002ல 25,000/- கேட்டுச்சு அந்தப் பய புள்ள. நமக்கு அது இப்பவும் பெரிய அமவுண்ட் சார். நாங்க சரியான ஆளைப் புடிக்க முடியல, இல்லாட்டி ஏமாந்திருப்போம், எதுவோ ஒன்னு.
ரவிசார்,முதலில் உங்களுடைய குழந்தைக்கு என் ஆசிர்வாதங்கள்!.
அப்புறம் இந்த மேட்டரிலும் கும்மியா? :).எப்படிங்க?
வாழ்த்துக்கள்!
ஐயோ, தெரியாத்தனமா தங்கமணிகிட்ட அந்த படத்தைக் காமிச்சி அது என்னன்னு கேட்டுத் தொலைச்சிட்டேன்...இப்ப அது என்னக் கேட்டு நச்சரிக்குது.... பதில் சொல்லலைன்னா, இளைய குத்தூசி பட்டத்தை திரும்ப வாங்கிக்குவேன்...ஆமா!
http://tvpravi.blogspot.com/2008/11/blog-post_26.html
ரவி,
குழந்தை பிறந்துள்ளதாக அறிகிறேன். வாழ்த்துகள்!
அடி கொடுப்பதையும் "பூசை கிடைத்ததா".. "வீட்டுக்கு போ நல்லா பூசை கிடைக்கும்" கிடைக்கும் என்ற அர்த்ததிலுல் சொல்வார்கள்...
எனவே இது அந்தபூசைக்கா என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளவும்....கையடக்க சங்கு பூரிக்கட்டையைவிட சுலபமாக எறிய ஏதுவானது. உலோகத்தைவிட நச்சுன்னு இருக்கலாம்... சும்மா தலையில் "குட்ட" மிகவும் வசதியானதும்கூட
**
அந்தக்காலத்தில்...எங்கள் வீட்டில்
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க (அப்படியே வாய் ஓரமாக வைத்து டபக்கென்று ஊற்றிவிட வசதியானது சங்கு மிகசுத்தமாக இருக்க வேண்டும்)
நாட்டு மருந்து ... பச்சிலை அரைக்க/நசுக்க என்று பல பயன்பாடுகளுக்கு கையடக்க சங்கு உள்ளது. வலமா/இடமா தெரியாது
*****
இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்...
வலம்புரி/இடம்புரி சங்கு பற்றி விளக்கமாக படத்துடன் இங்கே...
http://www.visvacomplex.com/Valampuri_1.html
//கலைப்பொருள்கள் விற்குமிடங்களிலும் பூசைக்குரிய சாமான்கள் விற்கும் ஒவ்வொரு கடையிலும் நூற்றுக்கணக்கில் வலம்புரிச்சங்கு வைத்திருக்கிறார்களே?" என்ற கேள்வி எழலாம். ......
ஏதோ ஒருவகை (இ)-மி(யூ)ட்டேஷனால் அது பிலாஸ்ட்டிக் தொழிற்சாலைகளிலும் தற்காலத்தில் பிறக்கிறது.)//
**
காரைக்குடியில் - கலைபொருட்கள் விற்கும் கடைக்காரர்களிடம் கிடைக்கும்
விலை அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்காது.
இடது பக்கம் பிடியுள்ள சங்குகள் சர்வ சாதாரணமாக ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரியில் கிடைக்கும் விலை 200 அல்லது முன்னூறு சொல்வார்கள். வலம்புரிச் சங்கு என்பது வலது பக்கம் பிடிக்கின்ற அமைப்பு இருக்கும்.
ஊதினால் ஒலியில் ஒன்றும் வித்தியாசம் இருக்காது.
சங்கு கிடைக்க இத்தனைபேர் ஆர்வமாக ஐடியா கொடுக்கும் போதே இது எந்தமாதிரி பூசைக்கு என்று உங்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும்...ம்..ம்..ம்.. விதி வலியது.
எப்படியோ பூரி மேக்கருக்கு சங்கு வாங்கி கொடுத்துவிட்டு , பூரிக்கட்டை சமாச்சாரங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு, பூரியை மட்டும் எங்களுக்கு பார்சல் செய்யவும்.
கொழந்தைக்கு பாலூட்டவா வலம்புரி சங்கு? யோவ் இது கொஞ்சம் ஓவராத் தெரியலை? சங்கடை இருந்தாப்போதாதா?
//கடலோரக்கவிதைகள் சின்னப்பதாஸ் அவர்களிடம் கேளுங்கள். :-)///
சிங்கை ஜோ விடம் கேட்கலாம் என்று உள்ளேன்...
//ரவிசார்,முதலில் உங்களுடைய குழந்தைக்கு என் ஆசிர்வாதங்கள்!.
அப்புறம் இந்த மேட்டரிலும் கும்மியா? :).எப்படிங்க?///
நன்றி நல்லதந்தி...அதெல்லாம் இயல்பிலேயே வருவது :)
பழமை பேசி அவர்களே...
அது இளா / ப்ளாக்குட் கதை கவிதை போட்டிக்கானது....!!!!
கல்வெட்டு அவர்களே
வாழ்த்துக்கு நன்றி....
ஆக்சுவலி கையடக்க சங்கு ஈஸ் ஜஸ்ட் அ சங்கு...
அது வலம்புரி சங்கு கிடையாது...
இது அளவில் பெரியதாக இருக்கும்...
தகவல்களுக்கு நன்றி...!!
///கொழந்தைக்கு பாலூட்டவா வலம்புரி சங்கு? யோவ் இது கொஞ்சம் ஓவராத் தெரியலை? சங்கடை இருந்தாப்போதாதா?///
குழந்தைக்கு சங்கில் பால் தரவில்லை...இதுவரை தாய்ப்பால்தான்...
ஆனால் வலம்புரி சங்கில் பூசை தான் செய்யலாம், பால் எல்லாம் தர முடியாது...
அளவில் பெரியது அல்லவா ???
வாருங்கள் அய்யா அவர்களே...
காரைக்குடிக்கு யாரையாவது அனுப்பவேண்டியது தான்...
குறிப்பிட்டு எந்த இடம் / கடை சொன்னீர்கள் என்றால் வசதியாக இருக்கும்....
நன்றிங்க ஐயா! நல்லா இருங்க!!
கல்வெட்டு...
பூரியை பார்சல் செய்வதில் பிரச்சினை ஏதும் இராது என்று கருதுகிறேன்...
வழக்கமாக சி.டி பார்சல் செய்யும்போது ஒரு கவர் இருக்குமே ? (உபுண்டு இலவச சி.டி கூட அது போன்றதொரு கவரில் வருகிறது)
சி.டியை போலவே அழுத்தமாக இருக்கும் பூரியை அதில் எண்ணையோடெண்னையாக வைத்து அனுப்பவேண்டியது தான்...
ரவி வாழ்த்துக்கள்!
ரசனையான பதிவு.வலம்புரி ஜான் வீட்ல கேட்டு பாருங்க
வலம்புரிச் சங்கு வேணுமா?
நோ ப்ராப்ளம்:-)
சென்னையில் கிரி ட்ரேடிங் (மயிலை) கிடைக்குது.
இன்னும் மலிவா வேணுமுன்னா நம்ம காதி க்ராஃப்ட் இருக்கு பாருங்க அங்கேயும் வெவ்வேற அளவில் கிடைக்குது.
இது தெரியாம நான் வெள்ளியில் செஞ்ச வலம்புரிச் சங்கை சுக்ரா ஜுவல்லரியில் வாங்கினேன். அப்புறம் விவரம் கிடைச்சது. விடமுடியுதா?
பெரிய சைஸு ஒன்னு கிரியில் வாங்கியாச்சு.
திரு...
நன்றி !!!!!!!!
குடுகுடுப்பை என்ன மேட்டரை கண்டீங்களோ !!!
போட்ட பதிவு மொத்தம் மூனு பாரா !!
துளசி டீச்சர், தகவலுக்கு நன்றி !!!!!!
தல, இங்குட்டு யாரோ, வ.சங்கு வச்சிருக்கேன் சொல்லிருக்காரு பாருங்க.
ஆள அமுக்குங்க.
http://www.treasurehouseofagathiyar.net/41900/41991.htm
தம்பி புயலென புறப்பட்டு வா , வலம்புரி சங்கு எவ்வளவு வேண்டுமானல் ராமேஷ்வரத்தில் வாங்கி தருகிறேன்.
அன்புடன்
காவேரி கணேஷ்
வலம்புரி ஜான்னை வேண்டுமானாலும் கொண்டு வந்து பேச சொல்லிடலாம் ஆனா வலம்புரி சங்கு எல்லாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)
//வலம்புரிச் சங்கு என்பது வலது பக்கம் பிடிக்கின்ற அமைப்பு இருக்கும்.
ஊதினால் ஒலியில் ஒன்றும் வித்தியாசம் இருக்காது.//
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)
உண்மையிலேயே வலம்புரி தேடுறீங்களா..இல்லை கிறனிட் மாதிரி ஏதாவது வலம்புரி சங்கு வர்த்தகம் செய்யும் நோக்கமா?:)
எனக்குக்கூட ஒரு வலம்புரிச் சங்கு வேண்டும்.நீங்க வாங்கும்போது ரெண்டா வாங்கிடுங்க!(பணம் 12 தவணைகளில் தரப்படும்!)
வாழ்த்துக்கள் ரவி. முதல்ல குழந்தைக்கு என்ன பெயர்ன்னு சொல்லுங்க.
கிரி ட்ரேடிங்க் (நங்க நல்லூர்ல் ஆஞ்சேனேயர் கோவில் பக்கத்துல) கிடைக்கும்னு நினைக்கிறேன்.
டோண்டு சாருக்கு போனை போடுங்க. ஆனா பணத்தை முன்னாடியே அனுப்பிடுங்க. :))
ராமேஸ்வரத்துல ஈசியா கிடைக்கும், ஆனா உங்க பால் வடியுற முகத்தை (நெசம்ம்மா) பாத்தா, 'ஒரு பய சிக்கி இருக்கான்!னு மொளகா அரைக்க வாய்ப்புகள் 200%.
பூரி கட்டை அடி இந்த ஒரு விசயத்துக்கு தானா விழ போகுது? :p
பத்தோட பதினொன்னு!னு இதுக்கும் சேர்த்து வாங்கிட்டா பணமாவது மிச்சமாகும் இல்ல. :))
பி.கு: தூரத்து இடி முழக்கம்!னு ஒரு படம் நியாபகம் இருக்கா? கேப்டனின் முதல் படம்னு நினைக்கிறேன். அதுல வலம்புரி சங்குக்கு அடிதடி நடக்கும். :))
சென்னைல மவுண்ட் ரோடு P.R & Sons பக்கத்துல இருக்குற காதி கிராப்ட இருக்கு.
வலம்புரிச் சங்குக்கு மீனவர்கள்தான் சரியான ஆட்கள்.அக்கம் பக்கத்துல(கடற்கரைப் பக்கம்)அரசல் புரசலா சொல்லி வையுங்க.
Sir,
வலம்புரி சங்கு Salem Boombugar (TN Govt.,) stores il(near Old Bus stand Salem,(near girls Hr, Sce,School*)கிடைக்கும்.
by
Akaramudhalvan
Slm
உங்க பதிவ படிக்கிறதா, அதுக்கு வந்த பின்னூட்டத்தை படிக்கிறதா,
ஷ் யப்பா,
வலம்புரி சங்கை பற்றி நான் அறிந்தவரை அது ஒரு ம்யூட்டண்ட் ( ட்ரிப்பிள் எக்ஸ் படத்தில் வருமே இந்த வார்த்தை), ஒரு பிழற்சி மூலமாக உருவாகும் ஒரு உயிரினம் என்று அறிகிறேன்...
நானும் இப்பதிவு மூலமாக அறிகிறேன்.
இதுக்கு பேசாம பூரிக்கட்டைல அடியே வாங்கிக்கலாம் தலை! கிடைக்கலைன்னு சொல்லிடுங்க.
:))))))))
குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்.
இடம்புரிச்சங்கை வலம்புரியாக மாற்றும் வித்தை ஒன்று உள்ளது. ஆனால் அதற்கு ஒரு நல்ல பிரதிபலிப்பான் தேவை. கங்கை நீர் என்று சல்லடை வழியாக விழும் தண்ணீரை புரோகிதர்கள் சொல்வது தெரியாதா, அதுமாதிரி ஒரு கண்ணாடி முன் இடம்புரி சங்கை வைத்துப்பார்த்தால் அது வலம்புரியாக காட்சியளிக்கும்! அதவச்சி சமாளியுங்க! ஒரு வேளை பாப்பாவுக்கு என்றால் இது ஒத்துவராது. மற்றபடி எனக்குத் தெரிந்த கடல்புறத்து நண்பரிடம் சொல்லிவைத்துள்ளேன். கிடைத்தால் சொல்கிறேன்.
//அதிஷா said...
இளா ... இந்த மரியுனா எங்க கிடைக்கும்னு தெரியுமா?//
மரியானா என்னோட வீட்டுக்கு மூனாவது வீடு தான்...நமீதா தலை மசிர ப்ளாண்ட் பண்ண மாதிரி தள தள...
மரியுனாலாம் எனக்குத் தெரியாது...ஆனா ஒருதரம் பெங்களூர் ஹொசகொட்டே யில் ஸ்டாக் இல்லன்னு தர்மபுரி பக்கத்துல ஒரு மலைக்கிராமத்துல் ஹோல் சேல் ரேட்டுக்கு வாங்கி வந்தனர் நண்பர்கள். சென்னைல மரியுனா? க்விக் ஹைக்காக வேண்டி ரேட் பாய்ஸன் கலந்து விக்கிறாய்ங்கன்னு கேள்விபட்டேன்...உசாரு அப்பு
//Google/Blogger
OpenID//
நானும் கொஞ்ச நாள் இப்டி தான் ஓபன் ஐடிக்கு இடம் குடுத்தேன்.. அப்பாலிக்கா அதுக்கும் ஆப்பு வச்சிட்டேன்.. இப்போ கூகுள் அக்கவுண்ட்க்கு மட்டுமே அனுமதி.. :))
//இடம்புரிச்சங்கை வலம்புரியாக மாற்றும் வித்தை ஒன்று உள்ளது. ஆனால் அதற்கு ஒரு நல்ல பிரதிபலிப்பான் தேவை. கங்கை நீர் என்று சல்லடை வழியாக விழும் தண்ணீரை புரோகிதர்கள் சொல்வது தெரியாதா, அதுமாதிரி ஒரு கண்ணாடி முன் இடம்புரி சங்கை வைத்துப்பார்த்தால் அது வலம்புரியாக காட்சியளிக்கும்! அதவச்சி சமாளியுங்க! ஒரு வேளை பாப்பாவுக்கு என்றால் இது ஒத்துவராது. மற்றபடி எனக்குத் தெரிந்த கடல்புறத்து நண்பரிடம் சொல்லிவைத்துள்ளேன். கிடைத்தால் சொல்கிறேன்.
Thursday, December 04, 2008 ///
ஒரு சோடா குடுங்கப்பா
:))
valampurinsangai patri ingku theringhu kollungal
ready sell sangu contact 04652403000
வலம்புரி சங்கு வேண்டுமா.காசிமேட்டில் ஆண்டவர் துணை விசை படகு உரிமையாளர் திரு K.அஞ்சப்பன் என்பவரை காசிமேட்டுக்கு போய் உடனே தொடர்பு கொண்டால் கண்டிப்பாக கிடைக்கும்..
உள்ளது தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்
Post a Comment