ஹைதாபாத்: இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர்.
இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி மிகுந்த அதிர்ச்சி தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த எண்கெளன்டர் நடந்துள்ளது.
இதில் ஸ்ரீனிவாச ராவ் ஸ்வப்னிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், கார்த்திக் என்ற மாணவனை காதலித்து வந்த ஸ்பனிகா, ராவின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இதையடுத்து உன் மீது ஆசிட் வீசுவேன் என ஸ்வப்னிகாவிடம் ராவ் மிரட்டியுள்ளான். இது குறித்து ஸ்வப்னிகாவின் தந்தை தேவேந்தர் வாரங்கல் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராவும் அவனது நண்பர்களும் தேவேந்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் ஸ்ரீனிவாச ராவ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தான்.
இதையடுத்து தனது சகோதரன் சிவப்பிரசாத ராவ், தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி ஸ்வப்னிகாவின் முகத்தில் ஆசிட் வீச வாரங்கலில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்' ஆசிட்டை வாங்கியுள்ளான்.
பின்னர் ராவ், சஞ்சய், ஹரி மூவரும் மாமனூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கை திருடிக் கொண்டு ஸ்வப்னிகா படிக்கும் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
தனது தோழி பிரனீதாவுடன் இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த ஸ்வப்னிகாவை சிறிது தூரத்தில் வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் தப்பினர்.
இதில் பிரனீதா ஹெல்மட் அணிந்திருந்ததால் முகம் தப்பியது. ஆனால், உடல் வெந்தது. ஸ்வ்னிகாவின் முகமும் உடலும் வெந்து போனது. இருவரும் அலறியபடியே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
அவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்வப்னிகாவின் உடல் 60 சதவீத அளவுக்கு வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ந்து போன முதல்வர் ராஜசேகர ரெட்டி மாணவர்களை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சிவபிரசாத் ராவ் உள்பட 4 மாணவர்களையும் கைது செய்தனர்.
இந் நிலையில் தான் போலீசாரின் குண்டுக்கு 4 பேரும் காலியாகியுள்ளனர். சிவபிரசாத ராவ் ஆசிட் ஊற்றியதில் நேரடியாக ஈடுபடவில்லை. இதனால் அவனை போலீசார் சுடவில்லை என்று தெரிகிறது.......
இதுதாண்டா போலீஸ் !!!!!!!
***********
***********
நன்றி - தட்ஸ்தமிழ் !
***********
***********
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
34 comments:
இதுதாண்டா போலிஸ்.. நச்!
///Well done Police!!
Do not afraid of idiotic so called Human Rights Activists.They will speak only for inhumans;not for Humans.///
repeattttttttteeeeee
காந்தியை உலகிற்கு தந்த நாடு. அகிம்சையை உலகிற்கு போதித்த நாடு. பெரும் ஜனநாயக நாடு இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. வன்முறை எதற்கும் தீர்வு கிடையாது. வன்முறை என்பது இருபக்கமும் கூரான கத்தி. ... ம்.. வெயிட் இன்னும் கொஞ்சம் சொல்ல இருக்கு..ம்..
ஆயுத வழியில எதற்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஜனநாயக வழியில் அகிம்சை தழுவி ஆயுதங்களை நம்பாமல் பொலீசார் இந்தபிரச்சனையை கையாண்டு இருக்க வேண்டும்.
அடிக்கு அடி என்பது ஒருபோதும் பிரச்சனையை தீர்க்காது. நீடிக்கும்.
பொலீஸ் இந்த பிரச்சனையை சர்வதேச நீதிமன்றுக்கோ அல்லர் எந்தத் தேசத்து நீதிமன்றத்திற்கோ எடுத்து சென்றால் சட்டம் தன் கடமையைச் செய்திருக்கும்.
இப்படிக்கு இந்தியாவிடம்
அகிம்சைப் போதனை பெற்ற
கொழுவி அன்ட் கோ.
/// ///Well done Police!!
Do not afraid of idiotic so called Human Rights Activists.They will speak only for inhumans;not for Humans.///
repeattttttttteeeeee
Sunday, December 14, 2008
Blogger கொழுவி said...
காந்தியை உலகிற்கு தந்த நாடு. அகிம்சையை உலகிற்கு போதித்த நாடு. பெரும் ஜனநாயக நாடு இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. வன்முறை எதற்கும் தீர்வு கிடையாது. வன்முறை என்பது இருபக்கமும் கூரான கத்தி. ... ம்.. வெயிட் இன்னும் கொஞ்சம் சொல்ல இருக்கு..ம்..
ஆயுத வழியில எதற்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஜனநாயக வழியில் அகிம்சை தழுவி ஆயுதங்களை நம்பாமல் பொலீசார் இந்தபிரச்சனையை கையாண்டு இருக்க வேண்டும்.
அடிக்கு அடி என்பது ஒருபோதும் பிரச்சனையை தீர்க்காது. நீடிக்கும்.
பொலீஸ் இந்த பிரச்சனையை சர்வதேச நீதிமன்றுக்கோ அல்லர் எந்தத் தேசத்து நீதிமன்றத்திற்கோ எடுத்து சென்றால் சட்டம் தன் கடமையைச் செய்திருக்கும்.
இப்படிக்கு இந்தியாவிடம்
அகிம்சைப் போதனை பெற்ற
கொழுவி அன்ட் கோ.////
Mr. Kozhuvi..Sorry to ask this question...But for argument sake I am asking this...can you tell the same words if those girls are your own sisters?
சரியான ஒரு முடிவு..
எனது பதிவை இங்கே பாருங்கள்.
மதுவதனன் மௌ.
can you tell the same words if those girls are your own sisters? //
ஐயோ.. குய்யோ முறையோ.. தகுமோ.. கடவுளே.. ஆண்டவா.. இத கேட்பார் யாருமில்லையோ.. ஒடி வாருங்கோ.. இதையொருக்கா கேளுங்கோ.. நண்பர்களே.. தோழர்களே.. சிநேகிதர்களே.. இந்த நண்பர் என் தங்கைகளுக்கு ஆசிட் ஊற்றினால் என்ன என்று சொல்லி விட்டார். இதென்ன வக்கிரம்? இதை கேட்பார் யாருமேயில்லையா.. ஐயோ.. குய்யோ.. முறையோ.. தகுமோ.. கடவுளே.. ஆண்டவா..
கொழுவி...
"கொழுவியின் அநாகரீக பின்னூட்டம்" என்று நான் ஒரு பதிவு போடுகிறேன்...
பதிலுக்கு நீங்க,
அநாகரீகம் நாகரீகமானதுன்னு ஒரு பதிவு போடுங்க..
வாங்க செத்து செத்து விளையாடலாம்...
:))
நன்றி ரவிச்சந்திரன், மனித உரிமை அமைப்பு வந்து குதிரைக்கு நாய்க்கு எதாவது பாதகம்னா மட்டும் தான் செயல்படுவார்கள்..
இது மனிதர்கள் தானே...ஆகையால் அவர்கள் எதுவும் குரல் எழுப்பமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்...
நன்னி தமிழ்பிரியன்....
நன்றி ஆனந்து....
கொழுவி சொல்லியிருப்பதன் உள்குத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்...
தமிழ் வலைப்பதிவின் ஹிஸ்ட்டரி ஜியாக்கிரபி தெரியாத ஆள் நீங்க...
கொழுவியின் பின்னூட்டம் ஒரு உள்குத்துப்பின்னூட்டம்...(இது புரியுமா தெரியலியே)
ஆகவே கனம் டோண்டு சார் அவர்களே.. :)
பாராட்டுவோம் போலீஸை!
அகிம்சை வழியில் கத்தியின்றி துப்பாக்கியின்றி ரத்தமின்றி பிரிட்டிஸ் காரரையே ஓட ஓட விரட்டிய ஆன்மீக தேசம் இந்தியா.
அந்த மாதிரியான ஒரு புண்ணிய பூமியின் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் பேணும் காவலர்கள் ஆயுதத்தைக் கையிலெடுத்தது தவறு.
ஆயுதம் வன்முறையின் வடிவம். ஆயுதம் தூக்கியவனையும் அழிக்கும். ஆயுத வன்முறை எதற்கும் தீர்வானதாக உலக சரித்திரத்தில் செய்தியேயில்லை. இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அது வன்முறையற்ற ஆயுதமற்ற வழியில் தன் சுதந்திரத்தையே பெற்றுக் கொண்ட தேசம்.
ஆசிட் வீசினால் என்ன செய்திருக்க வேண்டும்? ஆயுதமற்ற ஜனநாயக வழியில் அதை எதிர் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அந்த இடைவெளியில் மேலும் பலருக்கு ஆசிட் வீசலாம். ஆனால் பொறுமையாக அகிம்சை வழியில் நாம் அவர்களை அணுகினால் என்றோ ஒருநாள் அகிம்சை தனது சக்தியை உணர்த்தும்.
அடிக்கு அடி, பழிக்குப் பழி என்பதெல்லாம் ஒருபோதும் தீர்வாகாது. மீண்டும் சொல்கிறேன். வன்முறை என்பது இருபக்கமும் கூரான கத்தி. அதை ஒருபோதும் கைக் கொள்ளல் ஆகாது. காந்தியைத் தந்த தேசத்திற்கு அது அழகுமல்ல.
இப்படிக்கு இந்தியாவிடம்
அகிம்சைத் தத்துவத்தை கற்றுணர்ந்த
கொழுவி அன்ட் கோ
ரவி!
எனக்கு ,
'பரட்டை பத்த வைச்சிட்டையே'
என்ற டயலக் ஞாபகம் வருது.
செய்தி!பார்த்தேன்.
ரவி!
பெண்கள் மேல் நடத்தப்படும் பயங்கரவாதத்துக்கு, மாநில பாகுபாடின்றி இந்த மருந்தைக் இனிக்
காவல் துறை கைக்கொள்ளும் என நம்புகிறேன்.
மரணபயமும் நல்ல மருந்துதான்...
// ரவி!
பெண்கள் மேல் நடத்தப்படும் பயங்கரவாதத்துக்கு, மாநில பாகுபாடின்றி இந்த மருந்தைக் இனிக்
காவல் துறை கைக்கொள்ளும் என நம்புகிறேன்.
மரணபயமும் நல்ல மருந்துதான்//
அப்ப மொதலில் போட்டுத்தள்ள வேண்டியது ஏவல்துறையைத்தான்!!!!
//can you tell the same words if those girls are your own sisters? //
ஏன் தங்கச்சிக்கு நடந்தா நானோ இல்லை ஏன தங்கச்சியோ போட்டு தள்ள உரிமை இருக்கு...கொலை பண்ண இவனுங்க யாரு...They dont have a bloddy right. ஆந்திரா போலீசை பற்றியும் அவர்களின் மனித உரிமை மீரல்களை பற்றியும் ஆந்திராவில் போய் கேட்டுப்பாருங்கள்!
அப்புறம்...ஒரு வேளை செத்த்து உங்க தம்பிமாறா இருந்தாலும் இப்படித்தான் பேசுவீங்களோ? கொழுவி ஸ்டார்ட் மீஜிக்!!!!!
என்னோட கேள்வி..
கேக்க நாதியற்ற 3 பசங்களை போட்டுதள்ளிய ஏவல்துறை...
இதைவிட கொடிய கிரிமினல் குற்றங்களை செய்யும் அம்பானி போன்ற முதலாளிகளை சுடுவார்களா??????????!!!!!!!!!!
மனித உரிமை கழகம் இவர்களுக்காக வக்காலத்து வாங்க கூடாது.
அந்த இரண்டு மாணவிகளின் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.
இனி இதுபோல் ஒரு சம்பவம் நடக்காமலிருக்க ஆந்திரா போலிஸ் செய்தது சரிதான்
இதற்கு என்னால் சொல்லக்கூடிய ஒரே தீர்வு......
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக பழிவாங்கும் உரிமையைக் கொடுப்பதுதான்.
அதாவது அந்த மாணவிகளின் தந்தையோ சகோதரனோ அந்த ஆசிட் வீசியவர்களை சுட்டுக்கொல்வதற்கு துணை செய்ய வேண்டும். அல்லது அவர்கள் அப்ப்டிச் தானாகவே செய்தால் அவர்களைக் காணாதது போல விட்டுவிட வேண்டும்.
அதுதான் இப்படிப்பட்டவர்களுக்குத் தண்டனையுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மனநிம்மதியையும் கொடுக்கும்.
இது என்னாலான இலவச உதவி.
நன்றி
வணக்கம்.
//மாணவிகளின் தந்தையோ சகோதரனோ அந்த ஆசிட் வீசியவர்களை சுட்டுக்கொல்வதற்கு துணை செய்ய வேண்டும்.//
தவறாக படுகிறது.
வேண்டாம்,அதை காவல்துறை பார்க்கட்டும்.
இவர்களூக்கு மன நிம்மதி தருகிறேன் என்று குற்ற உணர்வை தரவேண்டாம்
எனக்கு தெரிந்து ஆசிட் அடிச்சதுக்கு பதில் ஆசிட் அடிச்சிருக்கலாம் !!!
எனக்கென்னவோ மூன்று தாய் + மூன்று தந்தைகள் இன்றைக்கு எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்கள்...
திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்...
உள்ளூர ஒரு சந்தோஷம் ஓடிக்கொண்டேயிருந்தாலும் எங்கேயோ தவறு தவறு என்று ஒரு பட்சி கூவிக்கொண்டேயுள்ளது...
//எனக்கு தெரிந்து ஆசிட் அடிச்சதுக்கு பதில் ஆசிட் அடிச்சிருக்கலாம் !!!//
கேனத்தனமா இருக்கு
//எனக்கென்னவோ மூன்று தாய் + மூன்று தந்தைகள் இன்றைக்கு எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்கள்...//
சந்தோசப்பட்டிருப்பார்கள் இம்மாதிரியான திருட்டு மொள்ளமாறிகல் அழிந்தார்கள் என்று
//திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்...//
இதற்கு முன்னரே சில குற்றங்களில் சம்பந்த பட்டிருக்கிறார்கள் என்று படித்தேன்.
சில நேரங்களில் களை எடுப்பது அவசியமாகிறது
நேற்று கன்னியாகுமரியில் இருக்கும் போது உங்கள் எண்ணுக்கு அழைத்தேன்.
வலம்புரி சங்கு உங்களுக்காக வாங்குவதற்க்காக,
நீங்கள் எடுக்கவில்லை
நான் வாங்கவில்லை
"உள்ளூர ஒரு சந்தோஷம் ஓடிக்கொண்டேயிருந்தாலும் எங்கேயோ தவறு தவறு என்று ஒரு பட்சி கூவிக்கொண்டேயுள்ளது..."
அஃதே தான்!
//வலம்புரி சங்கு உங்களுக்காக வாங்குவதற்க்காக,
நீங்கள் எடுக்கவில்லை
நான் வாங்கவில்லை///
மாம்ஸ் !!!
நான் இங்கே சுவீடனில் இருக்கிறான்....
ஒன்னு வாங்கி வை மாம்ஸ், ஆள் அனுப்பி பெற்றுக்கொள்கிறேன்....
கரெக்ட். இப்படித்தான் போட்டுதள்ள வேண்டும்
அப்பொதுதான் கிரிமினல் வேலைகளைச் செய்ய எவருக்கும் துணிவு வராது.
வழக்கு, வாய்தா, முன் ஜாமீன், பின் ஜாமீன்
எல்லாம் இனி சரிப்பட்டு வராது!
வாழ்க ஹைதராபாத் போலீஸின் துணிச்சல்!
போலீஸ் செய்தது கொலை. ஆசிட் வீசிய பொறுக்கிகள் தான் கொல்லபட்டுள்ளனர். இருந்தபோதிலும் போலீஸ் செய்தது கொலை தான் !
நண்பர் கொழுவிக்கு,
ஆனந்த் புது பதிவர் போல, நீங்களும் அவரோட சேர்ந்து இப்படி கலாய்க்கலாமா??
ஹாரர் மேட்டருக்கு நடுவுல ஒரு நல்ல பின்னூட்ட நகைச்சுவை. :)
தங்கச்சிய நாய் கட்சிடிச்சிபாபாபா............. ஹா ஹா ஹா
ரவி,
தவறென தெளிவாக தெரிந்தபின் போட்டுத்தள்ளுவதில் தவறே இல்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதால் தான் விசாரணை, வழக்கு நீதிமன்றம் எல்லாமே. இங்கு தவறென தெளிவாக தெரிந்தபின் தான் காக்கி கொஞ்சம் விறைப்பு காட்டி இருக்கிறது. ஒரு தப்பும் செய்யாத மக்கள் குண்டடிபட்டு சாகும்போது, இதுபோன்ற உதவாக்கரைகளின் சாவுக்காக அவர்கள் வீட்டில் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.
“வினவு” இது குறித்த பார்வையை விரிவாக அலசி இருந்தது.
ஆனந்த் புது பதிவர் போல, நீங்களும் அவரோட சேர்ந்து இப்படி கலாய்க்கலாமா?? //
என்னது நான் கலாய்க்கிறேனா..?
அப்போ இவ்ளோ நாளும் ஆளாளுக்கு எனக்கு அகிம்சை ஜனநாயகம் அது இது என படிப்பித்து மண்டை காய வைத்தார்களே.. அதெல்லாம் வெறும் கலாய்ப்புத் தானா.. ?
ஒரு சம்பவம்( என்பதன் மூலம் அதன் வீரியத்தை நான் குறைக்கவில்லை) ஒரு சம்பவத்திற்கு இத்தனை முறைப்பும் துடிப்பும் ஆவேசமும் இருக்கும் போது 70 000 உயிர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது ஈழத்தமிழருக்கு எத்தனை கோபமும் ஆவேசமும் அடிக்கு அடியென்ற உணர்வும் இருக்குமென்பதை நமக்கு அகிம்சைத் தத்துவங்களை எடுத்தியம்பும் குருவானவர்கள் தயைகூர்ந்து யோசித்து பார்க்கட்டும்.
ஆனால் அவர்கள் வழமை போலவே அது உனக்கு! இது எனக்கு என்ற வாறாகத்தான் செயற்படப் போகிறார்கள்.
அதனாற்தான் சொல்லுகிறேன். இத்தகையை கொலைகள் அகிம்சை தழுவிய தேசத்திற்கு அழகல்ல.
ஈழம் நமது வலி மட்டுமல்ல, வாழ்க்கையுங்கூட. இவர்கள் தமிழனுக்கு ஆகாது என்பதாலேயே தேசியம் பேசுபவர்கள். இது அகிம்சை தேசமென குருட்டு பாடம் ஓதுபவர்கள், உன்வீட்டில் இப்படி ஆனால் என கேட்டால் நாகரீகம் அய்யோ அம்மா என அழுது அனுதாபம் சம்பாதித்து விடுவார்கள். இவர்களை இப்போதா பார்க்கிறோம். அதே டயலாக்கை ஒரு அரைவேக்காடு இங்கு Context தெரியாமல் கக்கிவிட்டு சென்றிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருப்பது நம் நேரத்தை வீணடிக்கும் செயல்.
*இந்த பின்னூட்டங்க்களை 3மாதத்திற்கு பிறகு யாராவது நோண்டி எடுத்து சண்டைக்கு வந்தால், கம்பேனி பொறுப்பல்ல. :)
நல்ல பதில் இசை !!!!!!
Post a Comment