Tuesday, December 30, 2008

நன்றி தமிழ்ஷ் !!!!!!!!!

என்னுடைய இந்த பதிவில் தமிழ்ஷ் சுட்டி அளிக்கும் பக்கத்தை கொஞ்சம் எளிமைப்படுத்துதல் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தேன்...

அந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக நான் கேட்டிருந்த மாற்றத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள் இணைய தள நிர்வாகம்...

நன்றி !!!!

மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் அல்லது ஆலோசனை என்ன என்றால், கூகிள் வழி விளம்பரத்துக்காக இணைய தள முதல் பக்கத்தில் ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாமே ?

அதில் வரும் தொகையை கொண்டு வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் போட்டிகள் அல்லது தமிழ் சமூகத்திற்கு ஏதாவது பயன் அளிக்கும் உதவிகள் செய்யலாமே ?



ஏன் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கி ஏதாவது ஒரு கிராம நூலகத்துக்கோ அல்லது உதவும் கரங்கள் / சிவானந்த குருகுலம் போன்ற அமைப்புகளுக்கு தரலாமே ?

இந்த வேண்டுகோளை நான் மற்ற திரட்டிகள், இணைய தளங்களுக்கும் அவ்வப்போது எழுதுவதுண்டு...

கூகிள் நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் படி, கூகிள் வழி விளம்பரம் செய்பவர்கள் அதில் உள்ள சுட்டிகளை க்ளிக் செய்யுமாறு வாசகர்களை கேட்கக்கூடாது...!!! இது கூகிள் ஆட்சென்ஸ் விதியாகும்...

படிக்கும் வாசகர்கள் கூகிள் வழி விளம்பரங்களை தாங்களாகவே க்ளிக் செய்யட்டும்...அல்லது இது போன்ற பதிவுகளை படித்து, கூகிள் வழி விளம்பரங்களால் திரட்டிகள் நல்ல செயல்களை செய்கின்றன, போடுடா ரெண்டு க்ளிக்கு என்று அடிக்கடி க்ளிக்கினாலே போதும்...

காதை கிட்ட கொண்டாங்க, நான் உருவாக்கிய ரெண்டு மொக்கை ஆங்கில ப்ளாக் மூலமாக இரண்டு நாட்களில் 20 டாலர் வந்துள்ளது...(இது பற்றி விரிவான தொடர் ஒன்று எழுதலாம் என்று உள்ளேன்)..

அவ்வளவு தான் நான் எழுத நினைத்தது...மீண்டும் ஒருமுறை "நன்றி"...

34 comments:

ரவி said...

பின்னூட்ட முடிச்சவுக்கித்தனம்

அக்னி பார்வை said...

பெரிய ஆளுங்கா சொன்ன செஞ்சித் தான் தீரனும்

ரவி said...

அக்னிப்பார்வை....

ச்ச்ச்ச்சின்னபையன் நான்..

வால்பையன் said...

எனக்கும் ரெண்டு மொக்கை ப்ளாக் உருவாக்கி கொடுங்க!

ரவி said...

வால்பையன், மிகவும் எளிது...நான் சொன்னபடி செஞ்சீங்கன்னா மாதம் 10 ஆயிரம் சாலிடாக வரும்...

எங்காத்தா முப்பாத்தா மேல சத்தியம்

வால்பையன் said...

//வால்பையன், மிகவும் எளிது...நான் சொன்னபடி செஞ்சீங்கன்னா மாதம் 10 ஆயிரம் சாலிடாக வரும்...

எங்காத்தா முப்பாத்தா மேல சத்தியம் //

குருவே மாசம் பத்தாயிரமா!

25 ஃபுல்லு வாங்கலாமே!

உடனே சொல்லி கொடுங்க

குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் பத்தாயிரமா சொக்கா அதுல பத்து % எனக்கு வெட்டுங்கப்பா

குடுகுடுப்பை said...

தமிழிஸ் அப்ப நீங்க நடத்தலங்கிறீங்க அப்படித்தானே

ரவி said...

வால்...விரிவா எழுதறேன்...

தமிழ் சமுதாயம் கூகுள் வழி விளம்பரத்தால கொஞ்சம் அமவுண்டு தேத்தட்டும்...

ரவி said...

குடுகுடுப்பையாரே...

ஏன் இந்த கொலைவெறி

ரவி said...

///எல்லாருக்கும் பத்தாயிரமா சொக்கா அதுல பத்து % எனக்கு வெட்டுங்கப்பா///

யோவ் நீயே அந்த வேலைகளை செய்தா உமக்கும் 10கே...வெறும் பத்து பர்சண்ட் கமிஷன் கேக்குறத பார்த்தா நீர் என்ன தேமுதிக ஆளா ?

நசரேயன் said...

/*
காதை கிட்ட கொண்டாங்க, நான் உருவாக்கிய ரெண்டு மொக்கை ஆங்கில ப்ளாக் மூலமாக இரண்டு நாட்களில் 20 டாலர் வந்துள்ளது...(இது பற்றி விரிவான தொடர் ஒன்று எழுதலாம் என்று உள்ளேன்)..
*/
வழியை சொல்லுங்க குஸ்பு பக்கத்துல உங்களுக்கு சிலை வைக்கிறேன்

ரவி said...

///வழியை சொல்லுங்க குஸ்பு பக்கத்துல உங்களுக்கு சிலை வைக்கிறேன்///

தொடரா எழுதறேன்...உங்களுக்கு அவசரம்னா மெயின் அனுப்புங்க

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

///எல்லாருக்கும் பத்தாயிரமா சொக்கா அதுல பத்து % எனக்கு வெட்டுங்கப்பா///

யோவ் நீயே அந்த வேலைகளை செய்தா உமக்கும் 10கே...வெறும் பத்து பர்சண்ட் கமிஷன் கேக்குறத பார்த்தா நீர் என்ன தேமுதிக ஆளா ?
//

எந்தக்கட்சில வேணா என்ன சேத்துக்கங்க ஆனா தேமுதிக, காங்கிராசு கட்சில சேத்து என்ன அவமானப்படுத்தவேண்டாமுன்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறென்

இராகவன் நைஜிரியா said...

வாழ்க செந்தழல் ரவி..

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற அவருடைய குணத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

எழுதுங்க.. நாங்களும் உங்களால் பயன் அடைகின்றோம்.

அர டிக்கெட்டு ! said...

ஹேய்..............
ஐ கிவ் யூ பிப்டி பர்ஸன்ட் யா
ரியலி.....!!!!!!!!!!!!!!!!!
அன்ட் கோ போடலாமா???????

Nimal said...

நானும் ஒரு Copy & Paste பிளாக் வைத்து 120$ சேர்த்தனான்... ஆனா இப்போ அதில ஆர்வமில்லாம மூடியாச்சு... :)

ரவி said...

///எழுதுங்க.. நாங்களும் உங்களால் பயன் அடைகின்றோம்.///

கண்டிப்பா ராகவன்...

ரவி said...

///ஹேய்..............
ஐ கிவ் யூ பிப்டி பர்ஸன்ட் யா
ரியலி.....!!!!!!!!!!!!!!!!!
அன்ட் கோ போடலாமா???????///

ஒன்ஸ் மேட்டரை ஸ்டாட் மீஜிக் பண்ணி விட்டுட்டா , கூகிள் நிறுவனம் ஆட் சென்ஸை மூடுற வரைக்கும் காசு வந்துக்கிட்டே இருக்கும்...

என்னோட வண்டியில ஏன் வரனும், உங்களுக்கு தனி வண்டிய வாங்கிதரேங்கறேன்..

ரவி said...

///நானும் ஒரு Copy & Paste பிளாக் வைத்து 120$ சேர்த்தனான்... ஆனா இப்போ அதில ஆர்வமில்லாம மூடியாச்சு... :)//

இங்க அமவுண்டில்லாம இருக்க என்னை மாதிரி சில பலருக்கு வேணுமே ? நான் எழுதும்போது உங்களுடைய காப்பி பேஸ் மெத்தடுகளை எல்லாம் அப்பப்ப்போ பின்னூட்டமா போட்டு தொடரை மெருகேற்றுங்க

Tech Shankar said...

தமிழ் தளங்களில் கூகிள் ஆட்சென்ஸ் போட்டு ஆங்கில விளம்பரங்களை வரச் செய்வது எப்படி?

தமிழ் தளங்களில் அதாவது பொதுச்சேவை விளம்பரங்கள் By Google இதை விடுத்து ஆங்கிலத்தில் விளம்பரங்கள் வரச்செய்தால்தான் உங்கள் கண்ணுக்கு $கள் தெரிய ஆரம்பிக்கும்.

இதை அடுத்த பதிவாக நண்பர் செந்தழல் ரவி அவர்கள் வெளியிடுவார் என்று உறுதி அளிக்கிறேன்.

நான் ஒரு Random Tech Tips Widget உருவாக்கி அதை தமிழ்2000ல் அடியில் இணைத்துள்ளேன்.

Adsense forum ல கேள்வி கேட்டேன் - இப்படிச்செய்யலாமான்னு - இதுவரையில் பதில் இல்லை.

நீங்கதான் சொல்லனும். இது சரியா? / தவறான்னு.

சொல்லுங்க திரு. செந்தழல் ரவி அவர்களே.
இப்போதைக்கு அவ்வளவுதான்.. ஆஆவ்வ்வ்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009

நட்புடன் ஜமால் said...

அருமை

டெக்னிக் சொல்லி தாருங்களேன்

g said...

தங்கள் நல்லெண்ணத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அதுபோகட்டும். உயர்திரு. வேண்டாம் மேதகு தமிழ்நெஞ்சம் கேட்கப்பட்டதற்கு பதில் தந்தால் நலம். புத்து ஆண்டு வாழ்க. பீர் பாட்டிலுடன்... அ....ல்....ல...து... ஜின் அ....ல்...ல...து... ஒட்கா...

g said...

தங்களின் அனுமதியில்லாமல் தங்களின் மகள் புகைப்படத்தை வெளியிட்டதற்கு மன்னிக்கவும். படத்தை நீக்கியாகிவிட்டது. மீண்டும் மன்னிக்கவும்.

தமிழ் மதுரம் said...

என்னோட Blog இல கொஞ்ச டிசைனிங் செய்யனும்... அதுக்கு ஏதாவது ஜடியா கொடுங்க/???

Sanjai Gandhi said...

நான் இதை நேத்தே பார்த்தேன் ரவி. செல்லா அண்ணா ஆபிஸ்ல தான் அப்போ இருந்தேன். அவர்கிட்ட கூட சொன்னேன். ரவி போஸ்ட் பார்த்து இந்த வசதி செஞ்சிருக்காங்கன்னு.. போட்டி பலமாய்டிச்சி இல்ல.. கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் முக்கியம் மாமு.. :))

Subbiah Veerappan said...

/////காதை கிட்ட கொண்டாங்க, நான் உருவாக்கிய ரெண்டு மொக்கை ஆங்கில ப்ளாக் மூலமாக இரண்டு நாட்களில் 20 டாலர் வந்துள்ளது...(இது பற்றி விரிவான தொடர் ஒன்று எழுதலாம் என்று உள்ளேன்)..////

அந்தப் பதிவுகளின் சுட்டியைக் கொடுங்கள்!

ரவி said...

///Adsense forum ல கேள்வி கேட்டேன் - இப்படிச்செய்யலாமான்னு - இதுவரையில் பதில் இல்லை.

நீங்கதான் சொல்லனும். இது சரியா? / தவறான்னு.

சொல்லுங்க திரு. செந்தழல் ரவி அவர்களே.
இப்போதைக்கு அவ்வளவுதான்.. ஆஆவ்வ்வ்..///

கட் அண்டு பேஸ்ட் செய்யும் ஆங்கில ப்ளாக் தான் உருவாக்கவேண்டும்...

தமிழ் என்ற பேச்சுக்கே (ஹி ஹி) இங்கே இடமில்லை...

கமிஷன் முக்கியம் அமைச்சரே !!!

ரவி said...

அதிரையாரே, எழுதுகிறேன்...கொஞ்சம் அவகாசம் தாருங்கள்...

ரவி said...

ஓக்கே ஜிம்ஷா...நன்றி !!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

ரவி said...

//என்னோட Blog இல கொஞ்ச டிசைனிங் செய்யனும்... அதுக்கு ஏதாவது ஜடியா கொடுங்க/???///

கமல் எதாவது நல்ல டெம்ளேட் எடுத்து போடுங்க அதுவே போதும்...

உங்க மின்னஞ்சல் தாங்க, நல்ல டெம்ப்ளேட் அனுப்புறேன்...

அந்த கோடை அப்படியே உங்க வார்ப்புருவாக்கிட்டீங்கன்னா போதும்

ரவி said...

///நான் இதை நேத்தே பார்த்தேன் ரவி. செல்லா அண்ணா ஆபிஸ்ல தான் அப்போ இருந்தேன். அவர்கிட்ட கூட சொன்னேன். ரவி போஸ்ட் பார்த்து இந்த வசதி செஞ்சிருக்காங்கன்னு.. போட்டி பலமாய்டிச்சி இல்ல.. கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் முக்கியம் மாமு.. :))///

நியூ இயர் நேரம், அவங்க விடுமுறைல இருப்பாங்கன்னு நெனைச்சேன்...

தொந்தரவை பார்க்காமல் செய்து கொடுத்துட்டாங்க...நன்றி

ers said...

வெளம்பரம் மூலம் காசு பாக்க ஏதனாச்சும் வழி இருந்தா சொல்லுங்க பாசு நானும் திரட்டி ஆரம்பிக்க போறேன்.

இப்ப சோதனை முறையில ஓடுது...
முகவரி
http://india.nellaitamil.com/

அப்புறம் நீங்க தான் தமிழிஷ் ஓனராமே..
ஆதாரம்
http://valpaiyan.blogspot.com/2009/01/blog-post_04.html

ரவி said...

நன்பர் தமிழ் சினிமா

விளம்பரம் மூலம் ஈஸியா காசு பார்க்கலாம்..

ஆனால் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு மேட்டர் இருக்கிறது...

எப்படி எழுதுவது என்று விழித்துக்கொண்டிருக்கிறேன்...

நேரம் இருந்தாலும் இப்போது தமிழ்மணத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் எந்த அளவுக்கு ரீச் ஆகும், யாருக்கு பயன் ஆகும் என்று தெரியவில்லை...

எழுதி எதாவது பதிப்பகத்துக்கு அன்பளிப்பாக தந்துவிடுகிறேன்...

அவர்கள் புத்தகமாக வெளியிட்டால் வாங்கி படித்துக்கொள்ளுங்கள்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....